Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உங்கள் உழைப்பு வீண்போவதில்லை!, டிசம்பர் 17

    “அடிமையானவனானாலும், சுயதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து, மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்” - எபேசியர் - 6:7,8.Mar 701.1

    இவ்வுலகில், தேவனுக்காக நாம் செய்யும் செயல்கள் பெரும்பாலும் பலனற்றவைபோலத் தோன்றுகிறது. ஊக்கத்தோடும் விடாமுயற்சியோடும் நன்மைசெய்ய நாம் படுகின்ற பிரயாசத்தின் பலனை ஒருவேளை நாம் காணமுடியாதவர்களாக இருக்கலாம். அது வீணான முயற்சி என்றுகூட நமக்குத் தோன்றலாம்; ஆனால், பரலோகத்தில் அதற்கெல்லாம் கணக்கு உண்டு; அதற்குரிய பலன் நமக்கு ஒருபோதும் தவறுவதில்லை.Mar 701.2

    தேவனுக்கு இரண்டு காசுகள் காணிக்கை செலுத்திய ஏழை விதவை, தான் செய்வது இன்னது என்று அறியாதிருந்தாள்; ஆனால், அவளது தற்தியாகம் ஒரு முன்மாதிரியாக, ஆண்டாண்டுகளாக உலக முழுவதும் ஆயிரக்கணக்கான இதயங்களில் கிரியை செய்துவருகிறது. இச்சம்பவத்தால், தேவனுடைய பொக்கிஷசாலைக்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரர் போன்ற பலதரப்பினரிடமிருந்தும் வந்த பொருட்க்கள் ஏராளம்! மிஷனரி ஊழியங்கள் தழைக்க, மருத்துவமனைகள் ஏற்படுத்த, பசியுற்றோர்க்கு உணவும், நிர்வாணிகளுக்கு ஆடையும், வியாதியுள்ளவர்களுக்கு சுகமும், தரித்திரருக்கு சுவேஷம் அறிவிக்கப்படவும் அச்சம்பவம் உதவியிருக்கிறது. அந்த ஏழை விதவையின் தன்னலமற்ற செயலால், மிகத்திரளானோர் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். தேவனுடைய நாளில், அந்த விதவைக்கு, தன் செயலின் விளைவையும் செல்வாக்கையும் காணும் சந்தர்ப்பம் கிடைக்கும். அதைப்போன்று தான் மரியாள் இரட்சகருக்கு அளித்த மேன்மையான வெகுமதியும் திகழும். அந்த உடைக்கப்பட்ட பரிமள தைலக்குப்பியைப்பற்றி நினைப்பதின்மூலம் உற்சாகப்படுத்தப்பட்டு, எத்தனைபேர் ஆண்டவருக்கு அன்போடு சேவைசெய்துள்ளனர்; அதையெல்லாம் காணும்பொழுது, அவள் எத்தகைய மகிழ்ச்சியடைவாள்!Mar 701.3

    “இந்த சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப் படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்க்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சில்லுகிறேன்.” (மத்தேயு 26:13) என்று கிறிஸ்து கூறினார். எதிர்காலத்தை எண்ணியவராக, தன் சுவிசேஷத்தின் நிச்சயத்தோடு இரட்சகர் இவ்வார்த்தைகளைக் கூறினார். சுவிசேஷம் உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படவேண்டும். சுவிசேஷம் செல்லுமிடமெல்லாம் மரியாளின் வெகுமதியான பரிமள தைலம் தன் வாசனையை வீசும்! அவள் இயல்பாகச்செய்த செயலின்மூலமாக, அநேக இதயங்கள் ஆசீர்வதிக்கப்படும். இராஜ்யங்கள் தோன்றலாம், மறையலாம்; பேரரசர்கள் மற்றும் வெற்றியாளர்களின் பெயர்கள் மறக்கப்படலாம்; ஆனால், இந்தப்பெண்ணின் செயல், பரிசுத்த வரலாற்றில் அழிய இடம்பெற்று, என்றைக்குமாக அந்த உடைக்கப்பட்ட பரிமள தைலக்குப்பி, விழுந்துபோன ஒரு மனுகுலத்தின்மீது தேவங்கொண்ட அளவற்ற அன்பின் கதையை கூறிக்கொண்டே இருக்கும்.Mar 702.1

    பரிசுத்த ஆவியின் ஒவ்வொரு தூண்டுதலும், மனிதரை நன்மைக்கும் தேவனிடத்திற்க்கும் வழிநடத்திச்சென்ற காரியமானது பரலோகப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேவனுடைய நாளில், பரிசுத்த ஆவியானவரின் கருவியாகச் செயல்பட்ட ஒவ்வொருவரும், தங்கள் வாழ்க்கையில் செய்த செயல்களால் ஏற்ப்பட்ட பலனைக் காண்பார்கள்.⋆Mar 702.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 702.3

    “அப்பொழுது எல்லாப் புத்திகும்மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” - பிலிப்பியர் 4:7.Mar 702.4