Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வருங்கால பள்ளிக்கூடம்!, டிசம்பர் 21

    “இதோ மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்;...” - வெளிப்படுத்தல் 21:3.Mar 709.1

    ஆதியில் ஏதேனின் நிறுவப்பட்ட பாட சாலைக்கும், இனி வரவிருக்கிற உலகத்தின் பாடசாலைகளுக்கும் இடைப்பட்ட காலத்தில், இவ்வுலகின் நெடிய வரலாறு விரிந்து காணப்படுகிறது. மனிதனின் மீறுதல்களும், பாடுகளும், தேவனின் தியாகமும், மரணத்தின்மீதும் பாவத்தின்மீதும் அவர் கொண்ட வெற்றியும் இதில் அடங்கும். முதல் பாடசாலையான ஏதேனில் காணப்பட்ட அநேகக் காரியங்கள் இனி வரவிருக்கும் பாடசாலையில் இராது. நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் சோதனைக்கு உட்படுத்தும்வண்ணம் அங்கிராது. சோதனைக்காரன் அங்கு இல்லை, தீமைசெய்யும் சாத்தியக்கூறு அங்கில்லை. ஒவ்வொருவரும் தீமையினால் உண்டான சோதனையையும் வெற்றிகரமாக கடந்துவந்தவர்கள்; இனி ஒருபோதும் பாவத்தின் வல்லமைக்கு இவர்களால் உட்படமுடியாது. தேவனுடைய சமூகத்திற்கு மீட்கப்பட்டவர்களாக, மனிதன் மீண்டும் ஆதியிலிருந்ததுபோல, தேவனால் போதிக்கப்பட்டிருப்பான்.Mar 709.2

    இந்த வாழ்க்கையில் நமது உழைப்பு, நித்திய வாழ்விற்காக நம்மை ஆயத்தப்படுத்துகிறது. இவ்வுலக வாழ்வில் நாம் தொடங்கியிருக்கும் பாடம் இவ்வாழ்க்கையோடு முடிந்துவிடுவதில்லை. நித்திய வாழ்வு நெடுகிலும் அது ஒருபோதும் முற்றுப்பெறாமல், தொடர்ந்து முன்னெறிக்கொண்டேயிருக்கும்.Mar 709.3

    இந்த பூமியாகிய பள்ளியில் நாம் கற்றுக்கொண்ட ஒவ்வொரு நல்ல கொள்கையும், ஒவ்வொரு சத்தியமும், அதே அளவிற்கு முன்னேறிச்செல்லத்தக்கதாக நம்மை பரலோகப்பள்ளியில் நடத்தும்; இந்த பூவுலகில் தமது ஊழியத்தின்பொழுது, இயேசு எவ்விதம் தம் சீடர்களோடு பேசி நடந்தாரோ, அதேபோன்று, மேலோகப் பள்ளியிலும் நம்மை ஜீவனதியண்டை நடத்தி, சத்தியங்களை நமக்கு விளக்கிக்காட்டுவார். இவ்வாழ்க்கையில், பாவத்தின் காரணமாக, நம் மூளையால் புரிந்துகொள்ள இயலாத, மீதமிருக்கும்-புதிரான-மறைவான-காரியங்களை அவர் விளக்குவார்,Mar 709.4

    பாவம் தோன்றிய வரலாறு, சாவிற்கேதுவான பொய்மையின் கோணலான வேலைகள், சத்தியம், அசத்தியத்தின்மீது வெற்றிகண்டவிதம்-இவை அனைத்தும் விளக்கப்படும். நாம் காணக்கூடிய உலகத்திற்க்கும் காணக்கூடாத உலகத்திற்கும் இடையிலான திரை அகற்றப்பட்டு, ஆச்சரியமான காரியங்கள் வெளிப்படுத்தப்படும்.Mar 710.1

    நமது ஒவ்வொரு செயல் திறனும் முன்னெற்றுவிக்கப்படும்; ஒவ்வொரு ஆற்றலும் வளர்ந்து பெருகும். அதிக அறிவாற்றல் பெறுவதால், நாம் களைப்படைவதுமில்லை; சக்தியை இழந்து சோர்ந்துபோவதுமில்லை; அங்கே மகத்துவமான சேலைகள் நடத்தப்படும். உயரிய நாட்டங்கள் எட்டப்படும். மேலான நோக்கங்கள் நிறைவடையும். மேலும், தொடர்ந்து புதிய புதிய உயரங்களை அடைய, புதிய மகத்துவங்களை இரசிக்க, புதிய சத்தியங்களை விளங்கிக்கொள்ள, புதுப்புது காரியங்கள் சிந்தையின்-ஆத்துமாவின்-சரீரத்தின் வல்லமைகளுக்கு அழைப்பிவிடுக்கும்.⋆Mar 710.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 710.3

    “...அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவே. -ஏசாயா 28:29.Mar 710.4