Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நிறைவான வளமுடைய ஆய்வுப் பொருத்கள்!, டிசம்பர் 24

    “உங்களுக்கு உண்டான கிருபையைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்; தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது,இன்ன காலத்தைக் குறித்தார் என்பதையும், அந்தக் காலத்தின் விஷேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்... இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.” - பேதுரு 1:10-12.Mar 715.1

    மகத்துவமான மீட்பின் பொருளைப்பற்றி இவ்வாழ்க்கையில் புரிந்துகொள்வதற்கு ஆரம்பிக்க மாத்திரமே நம்மால் முடியும். நமது எல்லைக்குட்பட்ட புரிந்துகொள்ளும் தன்மையோடு, சிலுவையில் சந்திக்கும் அவரது அவமானமும், மகிமையும், ஜீவனும், மரணமும், நீதியும், இரக்கமும்பற்றி மிகுந்த கவனத்தோடு நாம் ஆழ்ந்து ஆராயலாம். ஆனால், நாம் எவ்வளவு தான் நம் மூளையைக் கசக்கிப்பிழிந்தாலும், அதின் முக்கியத்துவத்தையும் மேன்மையையும் முழுமையாக நம்மால் புரிந்துகொள்ள இயலாது. நம்மை மீட்ட அன்பின் நீளம், அகலம், ஆழம், உயரம் ஆகியவை மங்கலாகவே விளங்கிக்கொள்ளப்படுகிறது. காணப்படும் விதமாகக்கண்டாலும், அறியப்படும்விதமாக அறிந்தாலும், மீட்கப்பட்டவர்களால் மீட்பின் திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது; ஆனால், நித்தியகாலம் நெடுகிலும், அவர்களுக்குப் புதிய புதிய சத்தியங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தப்படும். அவர்கள் வியந்து மகிழ்வார்கள். இப்பூமியின் வேதனைகளும் சோதனைகளும் துக்கங்களும் முடிவிற்குவந்து, அதற்கான காரணம் அகற்றப்பட்டாலும், தங்கள் இரட்சிப்பின் உன்னத விலையைப்பற்றி தெளிந்த அறிவும் புத்தியும் தேவ மக்களிடம் காணப்படும்.Mar 715.2

    சிலுவையின் இரகசியம் மற்ற எல்லா இரகசியங்களையும் விளக்குகிறது. கல்வாரியிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களில், நம்மை பயத்தால் நிறைத்து பிரம்மிப்படையச்செய்த தேவனின் குணாதிசயங்கள், அழகாகவும் கவர்ச்சியாகவும் காணப்படுகின்றன. இரக்கம், மேன்மை, பெற்றோரின் அன்பு ஆகிய குணாதிசயங்கள், பரிசுத்தம், நீதி, வல்லமை ஆகியவற்றோடு இணைந்து தோற்றம் அளிக்கிறது. மேலாக உயர்த்தப்பட்ட, மகத்துவமான அவரது சிங்காசனத்தை நாம் நோக்கிப்பார்க்கும்பொழுது, அவரது குணத்தின் கிருபையின் இனிய வெளிப்பாடுகளை நாம் கண்டு, “எங்கள் பிதாவே” என்று பிரியமுடன் அவரை அழைக்கும் பதத்தின் முழு அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் முன் ஒருபோதும் இல்லாத வண்ணம், உணர்ந்துகொள்ளுவோம்.Mar 715.3

    எல்லையற்ற ஞானத்தின் ஊற்றகிய ஆண்டவர், நம்மை மீட்பதற்கு தம் குமாரனை பலியாக ஈவதைத்தவிர, வேறு எந்த திட்டத்தையும் உத்தேசிக்கவில்லை என்பதைக் காணமுடியும். முன் ஒருபோதும் இல்லாத வண்ணம் பரிசுத்தமும், மகிழ்ச்சியும் சாவாமையும் உடைய மீட்கப்பட்ட மக்களால் இப்பூமியை நிரப்புவதிலுள்ள சந்தோஷமே அந்த தியாகத்திற்குச் செய்யப்படும் பதிலீடாகும். நம் இரட்சகர், இருளின் வல்லமைகளோடு போராடியதுன் விளைவாக, மீட்கப்பட்டவர்கள். ஆனந்தக் களிப்புடன் தேவமகிமையில் சதா காலமும் திளைத்திருப்பார்கள். ஆத்துமாவின் விலை அப்பேர்ப்பட்டது! எனவே, பிதா அதற்காகச் செலுத்தப்பட்ட விலைக்கிரயத்தைக் குரித்து திருப்தியடைந்தார். கிறிஸ்துவும் தன் மாபெரும் தியாகத்தின் பலனைக்கண்டு திருப்தியாவார்.Mar 716.1

    நித்திய காலம் முழுவதும் மீட்க்கப்பட்ட திரள்கூட்டமே அவரது தலையாய மகிமையாக இருக்கும்.⋆Mar 716.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 716.3

    “அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி, தம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே தம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;” - கலாத்தியர் 1:4.Mar 716.4