Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஒழுக்கநிலையில் சுதந்திரம்!, பிப்ரவரி 8

    “ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.” - 2 கொரிந்தியர் 6:17,18.Mar 77.1

    இந்தக் காலத்தில் அநேகர் தங்களது முகங்களிலே திரைகளை அணிந்திருக்கிறார்கள். இந்த முகத்திரைகள் உலதத்தாரின் பழக்கவழக்கங்களுக்கும், நடைமுறைகளுக்கும் ஒத்துப்போகின்றன. இந்த முகத்திரைகள் ஆண்டவருடைய மகிமையை அவர்களுக்கு மறத்துவிடுகின்றன. இந்த உலகத்தின் காரியங்களுக்கு நமது கண்கள் மறைக்கப்படத்தக்கதாக, நமது கண்கள் அவர்மீது பதிக்கப்பட்டிருக்கவேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.Mar 77.2

    சத்தியமானது அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்தப்படும்பொழுது, வேதாகமத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு நமது படித்தரமானது மிகவும் அதிகமதிக்கமாக உயர்த்தப்பட வேண்டும்; எனவே, உலகப்பிரகாரமான நவநாகரீகங்கள், பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றிற்கு எதிராகச் செயல்படுவது அவசியமாயிருக்கும். கடலின் அலைகளைபோன்று, உலகப்பிரகாரமான செல்வாக்குகள், கிறிஸ்துவின் பின்னடியார்களை அவரது கிருபை, சாந்தம் ஆகிய உண்மையான கொள்கைகளினின்று அடித்துச்செல்லத்தக்கதாக, அவர்களுக்கு எதிராக மோதியடிக்கும்; என்றாலும், நாம் கொள்கைக்காக ஒரு கன்மலையைப்போன்று திடமாக நிற்க வேண்டும், அவ்வாறு செய்வதற்கு ஒழுக்கரீதியான தைரியம் தேவைப்படுகிறது. நித்திய கன்மலையைப்போன்று திடமக நிற்க வேண்டும். அவ்வறு செய்வதற்கு ஒழுக்கரீதியான தைரியம் தேவைப்படுகிறது. நித்திய கன்மலையகிய அவர்மீது யார் யாருடைய ஆத்துமாக்கள் உறுதுயாக இணைக்கப்படவில்லையோ அவர்கள் உலகப்பிரகாரமான போக்கிலே அடித்துச்செல்லப்படுவார்கள். தேவனிலே நமது ஜீவனானது கிறிஸ்துவுடன் மறந்திருக்குமானால் மாத்திராமே, நாம் உறுதியாக நிற்கமுடியும், உலகத்தை எதிர்த்துநிற்கும்போது, ஒழுக்க சுதந்திர மானது முற்றிலுமாக அதின் இடத்திலிருக்கிறது. தேவனுடைய சித்தத்திற்கு முற்றிலுமாக இசைந்திருப்பதின்மூலம், நாம் அனுகூலமான நிலையிலே வைக்கப்படுகிறோம். உலகத்தின் பழக்கவழக்கங்களிலிருந்தும், நடைமுறைகளினின்றும் தீர்மானமாக விலகியிருத்தலின் அவசியத்தைக் காண்போம். நமது படித்தரத்தை உலகப் படித்தரத்திற்கு சற்று அதிகமாக உயர்த்தி வைத்துக்கொள்ளக்கூடாது. உலகப் படித்தரத்திற்கும் நமது படித்தரத்திற்குமுள்ள வேறுபாடு தெளிவாக-தீர்மானமாகத் தெரியவேண்டும்...Mar 77.3

    விலையேறப்பெற்ற பொக்கிஷமாகிய நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்வது ஒரு எளிதான காரியம் அல்ல. எவரும் இதைச் செய்துகொண்டு, உலகத்தின் போக்கிலே மெல்லமெல்ல நகர்ந்து கொண்டிருக்கமுடியாது. உலகத்தினின்று வெளியேவந்து தனித்திருக்கவேண்டும். அசுத்தமானதைத் தொடக்கூடாது. உலகத்தின் போக்கிலே கீழாக அடித்துச்செல்லப்படாமல், உலகத்தாரைப்போல ஒருவரும் நடந்துகொள்ளமுடியாது. தீவிர விடாமுயற்சியில்லாமல் ஒருவரும் மேல்னோக்கி முன்னேறமுடியாது, வெற்றிபெற வேண்டும் என்று இருப்பவர், கிறிஸ்துவைப் பற்றிப்பிடித்துக்கொள்ளவேண்டும். அவர் பின்னிட்டுப் பாராமல், கண்களை எப்பொழுதும் மேல்னோக்கிப் பதித்தவராக, கிருபையின்மேல் கிருபையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட விழிப்புணர்வானது பாதுகாப்பிற்காகக் கொடுக்கப்படும் விலையாகும்.Mar 78.1

    அனைத்துக் காரியங்களின் முடிவும் சமீபமாக இருக்கிறது. தேவனுக்காகப் போரிட போர்க்கவசம் பூண்டு, தகுந்த ஏற்பாட்டுடன் ஆயத்தத்தோடிருக்கும் மனிதரே, இன்றையத் தேவையாக இருக்கிறார்.⋆Mar 78.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 78.3

    “தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” - சங்கீதம் 51:10.Mar 78.4