Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இயேசுவின் இரண்டாம் வருகைபற்றிய நம்பிக்கை ! ஜனவரி 4

    இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: “மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்கிறார். “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.” -வெளிப்படுத்தல் 22:20. Mar 7.1

    யுகங்கள் நெடுகிலும், ஆண்டவரின் இரண்டாம் வருகையானது அவரது உண்மையான பின்னடியார்களின் நம்பிக்கையாக இருந்தது. ஒளிவமலையினின்று அவர் தம் சீடர்களைப் பிரிந்து பரமேறிச் செல்லும்போது, ‘மீண்டும் வருவேன்’ என்று அவர் கொடுத்த வாக்குத்தத்தமானது, சீடர்களின் எதிர்காலத்தைப் பொலிவுறச்செய்தது. துக்கம் அதை தணித்துப்போடாதபடிக்கும், உபத்திரவங்கள் அதை மங்கச்செய்துவிடாமலும், அவர்களின் இதயங்களை மகிழ்ச்சியினாலும், நம்பிக்கையினாலும் நிறைத்தது. துன்பங்கள், உபத்திரவங்களின் மத்தியிலும், “மகாதேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய பிரசன்னமாகுதலே” அவர்களது “பாக்கியமான நம்பிக்கை” யாக இருந்தது. ஆண்டவரின் வருகையைக் காண்போம் என்ற நம்பிக்கையிருந்த தெசலோனிக்கேய பட்டணத்துக் கிறிஸ்தவர்கள், மரித்துப்போன தங்கள் பிரியமானவர்களைப் புதைக்கும்போது, துக்கத்தால் நிறைந்தனர், அவர்களுடைய போதகரான பவுலார், மீட்பரின் இரண்டாம் வருகையிலே, நடைபெறப்போகும் உயிர்த்தெழுதலை அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார். “...அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பர்கள்” என்று கூறி, “பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளிலே நீங்கள் ஒருவரை யொருவர் தேற்றுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 4:16-18) என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார்...Mar 7.2

    பாதாளச் சிறையினின்றும், தூக்குமேடையிலும், கட்டிவைத்து எரிக்கப்படுகின்ற நிலையிலும் பரிசுத்தவான்கள், இரத்தசாட்சிகள் ஆகியோர் சத்தியத்திற்காகச் சாட்சி பகர்ந்தனர். இவ்வாறு, நூற்றாண்டுகள் நெடுகிலும் இத்தகையோரது விசுவாசம், நம்பிக்கை ஆகியவைகளைப்பற்றிய கூற்றுகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். “அவரது தனிப்பட்ட உயிர்த்தெழுதலிலும், அதன் பயனாக, அவரது வருகையின்போது, அவர்கள் அடையவிருக்கிற தங்களுடைய உயிர்த்தெழுதலைக் குறித்தும், உறுதி பெற்றவர்களாய், மரணத்தை துச்சமாக எண்ணி, அதற்கும் மேற்பட்டவர்களாக காணப்பட்டார்கள்”- டேனியல் டி. டெய்லர். பூமியின்மீது கிறிஸ்துவின் ஆளுகை அல்லது யுகங்கள் அனைத்திலும் சபையின் குரல், பக்கம் 33. “விடுதலை பெற்று உயிர்த்தெழத்தக்கதாக அவர்கள் கல்லறைக்குச் செல்ல விருப்பத்தோடு இருந்தார்கள்”. “நீதிமான்களுக்கு இராஜ்யத்தின் காலங்களை அறிவிக்கத்தக்கதாக” —“வானத்தின் மேகங்களிலே ஆண்டவர் தமது பிதாவின் மகிமையோடு வருவதைக் காண” அவர்கள் வாஞ்சயோடிருந்தார்கள். வால் டென்சியர்களும் இதே விசுவாசத்தை நெஞ்சாரப்பேணி வளர்த்திருந்தனர். சபையின் நம்பிக்கையாக மீட்பரின் வருகையை விக்ளிப் அவளோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.Mar 8.1

    கரடுமுரடான குன்றுகள் நிறைந்த பத்மு தீவிலே, அன்பான சீடன் என்றழைக்கப்பட்ட யோவான், “மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்ற இயேசுவினால் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தைக் கேட்கிறான். அவனது ஏக்கம் நிறைந்த, “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்” என்ற பதிலானது, இந்த உலக யாத்திரைக்காலம் முழுவதும் சபையினால் ஏறெடுக்கப்பட்ட ஜெபதைப் பிரதிபலிக்கிறது - வெளி. 22:20. ⋆Mar 8.2

    வாக்குத்தத்த வசனம்:Mar 8.3

    “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்: திகையாதே, நான் உன் தேவன்: நான் உன்னைப் பலப்படுத்தி, உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” - ஏசாயா 41:10.Mar 8.4