Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வேத வாக்கியங்களின் அடிப்படைத் தத்துவம்!, ஜனவரி 5

    “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.” - யோபு 19:25. Mar 9.1

    அதிக பக்திவிநயமான, எனினும் மிகவும் மகிமையான சத்தியங்களுக்குள் வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள மாபெரும் மீட்பின் ஊழியத்தை நிறைவுசெய்கின்ற, கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எனப்படும் சத்தியமும் ஒன்றாகும். பரலோகப் பயணத்தில் ஈடுபட்டுள்ள தேவனுடைய மக்கள், மரண நிழலின் பகுதியிலே நீண்டகாலம் தங்கியிருக்கும்படி விடப்பட்டார்கள். “புறம்பே தள்ளப்பட்ட அவரது மக்களை மீண்டும் வீட்டிற்குக் கொண்டு வரத்தக்கதாக,” ” உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிற” அவரது வருகையைப்பற்றிய வாக்குத்தத்தத்தில், அவர்களுக்கு ஒரு அருமையான மகிழ்ச்சியூட்டும் நம்பிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வருகையே பரிசுத்த வேதவாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள உறுதியான-அடிப்படையான-மூலஉபதேசமாகும். ஏதேன் தோட்டத்திலிருந்து, அந்த முதல் தம்பதிகள் துக்கம் நிறைந்தவர்களாக வெளியேறிய அந்த நாளிலிருந்து விசுவாசப் பிள்ளைகள், அழிப்பவனது (சாத்தான்) வல்லமையை உடைத்து, அவர்கள் இழந்துபோன பரலோகத்திற்கு மீண்டும் அவர்களைக் கொண்டு வரத்தக்கதாக, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவரின் வருகைக்காகக் வரத்தக்கதாக, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவரின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்... ஏதேனில் வாழ்ந்திருந்தவர்களின் சந்ததியில், ஏழாம் தலைமுறையில் வந்த ஏனோக்கு தேவனோடு 300 ஆண்டுகள் சஞ்சரித்தான். அந்த விடுதலைவீரரின் (இயேசுவின்) வருகையைக் கண்ட ஏனோக்கு வெகுகாலத்துக்கு முன்னரே, “இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும்... ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார்” என்று அறிவித்தான். நமது முற்பிதவான யோபு, அவரது துயரமிகுந்த இருண்ட நாட்களிலே, அசைக்கமுடியாத நம்பிக்கையோடு: “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்... நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய தேவனைப்பார்ப்பேன் அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்” (யோபு 19:25-27) என்று கூறினார்.Mar 9.2

    அனைத்து கிருபைக்கும் தேவனானவர், நித்திய காரியங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக அறிவை தெளிவுபடுத்துவாராக. உங்களிடமுள்ள பல தவறுகள், அவைகள் காணப்படுகிற அதே நிலையிலேயே, சத்திய வெளிச்சத்தைக்கொண்டு, உங்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும். நித்திய வாழ்வை வழங்கும் அந்த விலையேறப்பெற்ற-பயனைக் கொடுக்கக்கூடிய- கசப்பான கனியின் மூலம், இடம்பெற்றிருந்த தீமையை வெளியேற்றத் தேவையான முயற்சி எடுக்கப்பட வேண்டும்.Mar 10.1

    இரங்கத்தக்க நிறையிலுள்ள, பெருமையான, சுயநீதியுள்ள உங்கள் இதயத்தை தேவனுக்கு முன்பாக தாழ்மைப்படுத்துங்கள். உங்களது பாவம் நிறைந்த நிலையில், முற்றிலும் நொறுங்கிப் போனவர்களாக, அவருடைய பாதத்தில் உங்களைத் தாழ்த்துங்கள்; மிகவும் அதிகமாகத் தாழ்த்துங்கள். உங்களை ஆயத்தமாக்கும் பணியில் ஈடுபடுங்கள். என் மீட்பர் உயிரோடிருக்கிறார், அவர் உயிரோடிருப்பதினால், நானும் உயிரோடிருப்பேன் என்று மெய்யாகவே கூறக்கூடிய நிலையை எட்டும்வரை ஓய்ந்திருக்காதிருங்கள்.Mar 10.2

    நீங்கள் பரலோகத்தை இழந்துவிடுகிறீர்களானால், எல்லாவற்றையும் இழந்துவிடுகிறீர்கள்; நீங்கள் பரலோகத்தைப் பெற்றுக் கொள்ளுகிறீர்களானால், எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளுகிறீர்கள். இந்த காரியத்தில் ஒரு தவறையும் செய்துவிட வேண்டாம் என்று நான் உங்களிடத்தில் கெஞ்சி மன்றாடுகிறேன்; ஏனெனில், நித்தியம் சார்ந்த நலமான காரியங்கள் இங்கு சம்பந்தப்பட்டிருக்கின்றன.⋆Mar 10.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 10.4

    “அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.” - சங்கீதம் 2:12.Mar 10.5