Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனைப்பற்றிய ஓர் முழுமையான அறிவு! , மார்ச் 9

    “ஒன்றன் மெயதேவனகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” - யோவான் 17:3.Mar 135.1

    இங்கு நாம் தேவனை அறிந்துகொள்வதின்மூலேமே அவரது வருகையின்பொழுது, அவரைச் சந்திக்க ஆயத்தபடமுடியும்.... ஆனால், கிறிஸ்துவில் தாங்கள் விசுவாசம் வைத்திருக்கிறோம் என்று சொல்லுகிற அநேகர், தேவனை அறியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் காணப்படுவது ஒரு மேற்பரப்பான மார்க்கமே. தேவனை அவர்கள் நேசிக்கவில்லை. அவரது குணத்தைப்பற்றி படிக்கறதில்லை; எனவே, நம்பிக்கை வைப்பது எப்படி? மற்றும் அவரது நோக்கிப்பார்த்து வாழ்வது என்ற காரியம் அவர்களுக்குத் தெரியாது. இளைப்பருதளிற்கு உகந்த அன்பு என்றால் என்ன என்பது பற்றியும் அவர்களுக்குத் தெரியாது.... மற்றவர்களை ஆவிக்குரிய பரிகாரம் வளமடையச் செய்யத்தக்கதாக, தாங்கள் பெற்றுக்கொள்ளவேன்டியது தங்களது கடமை என்பதை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.Mar 135.2

    உலகமானது ஞானத்தின்மூலம் தேவனை அறிகிறதில்லை. அநேகர் அவரைக்குறித்து சாதுர்ய நயத்தோடு பேசியிருக்கிறார்கள்; ஆனால், அவர்களது செயல் விளக்க வாதங்கள் மனிதரை அவரிடத்திற்கு வெகு சமீபமாக கொண்டுவர முடிகிறதில்லை; ஏனெனில், அவர்கள் தாங்களே ஆண்டவரோடு உயிரோட்டமுள்ள தொடர்புள்ளவர்களாக இருக்கவில்லை. தாங்களைத் தாங்களே ஞானமுள்ளவர்கள் என்று சொல்லிக்கொண்டு மதயீனர்களாகின்றார்கள். தேவனைப்பற்றிய அவர்களது அறிவு குறைவுள்ளது.Mar 135.3

    தேடுவதின்மூலம் நாம் தேவனைக் கண்டுபிடிக்க முடியாது; ஆனால், பிதாவின் மகிமைப் பிரகாசமான குமாரன்மூலமாக, அவர் தம்மை வெளிப்படுதிருக்கிறார். குமாரன் பிதாவின் அப்பட்டமான சாயலில் இருக்கிறார், தேவனைப்பற்றிய ஒரு அறிவை பெற்றுக் கொள்ள நாம் விரும்பினால், கிறிஸ்துவைபோல ஆகவேண்டும்... சொந்த இரட்சகரைப்போன்ற கிறிஸ்துவின்மூலமாக, தூய வாழ்க்கை வாழ்வதின்மூலம் தேவனைபற்றிய உயர்ந்த-தெளிவான கருத்து விசுவாசிக்குக் கிடைக்கும்.Mar 135.4

    தேவனைப்பற்றிய முழுமையான வெளிப்பாடே, கிறிஸ்துவாகும். “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. பிதாவின் மடியிலுள்ள ஒரே குமரனே அவரை வெளிப்படுத்தினர்.” கிறிஸ்துவை அறிவதின்மூலமகவே தேவனை அறியமுடியும். நாம் அவரை நோக்கிப்பார்க்கும்பொழுது, அவரது வருகையிலே, அவரைச் சந்திக்கத்தக்கதாக, அவருடைய சாயலிற்கு நாம் மாற்றப்படுவோம்... நமது ஆண்டவரது வருகைக்கு ஆயத்தம் ஆவதற்கு இதுவே வேளையாகும். ஒரு கணநேரதிற்குள்ளாக, அவரிச் சந்திப்பதற்கான ஆயத்தத்தைப் பெற்றுக்கொள்ளமுடியாது. அந்த பக்திவிநயமான காட்சியைக் காண ஆயத்தமாகத்தக்கதாக ஊக்கமான உழைப்போடு, விழிப்போடு காத்திருக்கும் ஜாக்கிரதையும் இணைந்திருக்க வேண்டும்; எனவே, தேவனுடைய பிள்ளைகள் அவரை மகிமைபடுத்துகிறார்கள். வாழ்வின் பரபரப்பான காட்சிகளுக்கு மத்தியில் விசுவாசம், நம்பிக்கை தைரியமூட்டும் வார்த்தைகள் அவர்களது குரல்களின்மூலமாகக் கேட்கப்படும். அவர்களுக்குள்ள அனைதோடுங்கூட, அவர்களும் எஜமானனின் சேவைக்கு அர்ப்பணிக்கப்படுகிறார்கள்; இவ்வாறு தங்களது ஆண்டவரைச் சந்திக்க ஆயத்தப்படுகிறார்கள். அவர் வரும்பொழுது மகிழ்ச்சியுடன்: “இவரே எங்கள் தேவன், இவருக்க்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்... இவரது இரட்சிப்பில் களிகூர்ந்து மகிழ்வோம்” என்று கூறுவார்கள்.⋆Mar 136.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 136.2

    “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைதிக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கபடுவதில்லை.” - சங்கீதம் 16:8.Mar 136.3