Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வெண்ணுடை தேவைப்படுகிறது! , மார்ச் 11

    விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்த போது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: “சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய்” என்று கேட்டான். —மத்தேயு 22:11,12.Mar 139.1

    உவமையில் சொல்லபப்ட்ட கல்யாண வஸ்திரமானது, கிறிஸ்துவின் உண்மையான பின்னடியார்கள் சொந்தமாக வைத்திருக்கக்கூடிய தூய்மையான கறைதிரையற்ற குணத்தால் சுட்டிக் காட்டப்பட்டிக்கிறது. ” சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு (சபைக்கு) அளிக்கப்பட்டது” — வெளிப்படுத்தல் 19:8. வேதவாக்கியங்களில் மெல்லிய வெண்வஸ்திரம் என்று கூறப்பட்டிருப்பது “பரிசுத்தவான்களின் நீதியே” (எபேசியர் 5:27). அவரைத் தங்களது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுகிற அனைவருக்கும், விசுவாசத்தின்மூலமாக, அவரது சொந்த-பழுதற்ற குணமாகிய கிறிஸ்துவின் நீதி கொடுக்கப்படுகிறது. Mar 139.2

    பரிசுத்த ஏதேன் தோட்டத்திலே, தேவனால் நமது முதல் பெற்றோர் குடியேற்றப்பட்டபோது, அவர்களால் பாவமற்ற நிலை எனப்படும் வெண்வஸ்திரம் அணியப்பட்டிருந்தது... ஆனால், பாவம் பிரவேசித்தபொழுது, தேவனோடு கொண்டிருந்த தொடர்பை முற்றிலும் அறுத்துப்போட்டர்கள். அவர்களைச் சுற்றிலுமிருந்த வெளிச்சமானது, அவர்களைவிட்டு விலகிப்போயிற்று... பாவமற்ற அறியாநிலை எனப்படும் அந்த வஸ்திரத்திற்குப் பதிலாக, மனிதன் எதையும் ஏற்பாடுசெய்யமுடிவதில்லை.. கிறிஸ்து தாமே கொடுத்த மேற்போர்வை (Covering) மாத்திரமே, தேவனுடைய பிரசன்னத்தில் நாம் காணப்பட, நம்மைத் தகுதியுள்ளவர்களாக மாற்றும்.Mar 139.3

    இந்த மேற்போர்வையாகிய அவரது சொந்த நீதியின் வஸ்திரத்தை, மனந்திரும்பி விசுவாசிக்கும் ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் கிறிஸ்து அணிவிப்பார்... பரலோகத் தறியிலே நெய்யப்பட்ட இந்த வஸ்திரத்திலே, மானிட ஆலோசனையின்படி உருவாக்கப்பட்ட எந்த ஒரு நூல் இழையும்கூட இருக்காது. கிறிஸ்து தமது மானிடத்திலே எந்த ஒரு பூரண குணத்தை உருவாக்கிவைத்திருக்கிறாரோ, அந்தக் குணத்தை நமக்கு வழங்க முன்வருகிறார். நமது ” நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது” —ஏசாயா 64:6. நாம், நாமே செய்கின்ற அனைத்தும் பாவத்தால் சீர்கேடு அடைந்திருக்கிறது; ஆனால, தேவகுமாரன் “நம்முடைய பாவங்களைச் சுமந்துதீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை” — 1 யோவான் 3:5.Mar 139.4

    அவர் தமது பூரணமுள்ள கிழ்ப்படிதலினாலே ஒவ்வொரு மானிடனும் தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதை சாத்தியமாக்கி வைத்திருக்கிறார். கிறிஸ்துவிற்கு நாம் சரணடையும் பொழுது, நமது இதயம் அவரது இதயத்தோடு இணைகிறது; நமது சித்தம் அவரது சித்தத்தோடு இரண்டறக் கலந்துவிடுகிறது; நமது உள்ளம் அவரது உள்ளத்தோடு ஒன்றாகிவிடுகிறது; நமது சிந்தனைகள் அவருக்குள் கட்டுப்பட்டுவிடுகிறது; அவரது வாழ்கையை நாம் வாழ்கிறோம்; அவருடைய நீதியின் வஸ்திரத்தால் உடுத்துவிக்கப்படுதல் என்பதன் பொருள் இதுவே. அதன்பின்னர், தேவன் நம்மை நோக்கிப்பார்க்கும்போது, அத்தி இலையினால் செய்யப்பட்ட உடையை அல்ல; பாவத்தின் நிர்வாணத்தையும் அங்கவீனத்தையும் அல்ல; யோகோவாவின் பிரமாணத்திற்க்கான பூரண கீழ்ப்படிதல் எனப்படும் அவருடைய சொந்த நீதியின் உடையையே காண்கிறார்.⋆Mar 140.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 140.2

    “உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்..” — சங்கிதம் 65:4.Mar 140.3