Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பேதுருவின் ஏணியில் ஏறுதல்! , மார்ச் 17

    “…நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.” - 2 பேதுரு 1: 5-7.Mar 151.1

    பேதுருவின் எட்டு சுற்றுகளுள்ள ஏணியை இளைஞர்களுக்குச் சுட்டிக்காட்டுங்கள். மிக உச்சத்திலிருக்கிற சுற்றில் பாதங்களைப் பதிக்காமல், தாழ்வாக அடியிலிருக்கின்ற படியில் வைக்கச் சொல்லுங்கள்; மேலும், ஊக்கத்தோடும் பரிவுடனும் அவர்களிடத்தில் உச்சத்திலிருக்கும் படிவரையிலும் ஏறிச்சென்று அடையும்படி வற்புறுத்துங்கள்.Mar 151.2

    கிறிஸ்து…அந்த ஏணியாக இருக்கிறார். அதின் அடித்தளம் அவருடைய மானுடத்திலே திடமாக பூமியின்மீது ஊன்றப்பட்டிருக்கிறது; உச்சத்திலிருக்கும் ஏணியின் சுற்றானது அவரது தெய்வீகத்தின்மூலமாக அவரது சிங்காசனத்தைத் தொடுகின்றது. கிறிஸ்துவின் மானுடமானது விழுந்துபோன மனுக்குலத்தை அணைத்துக்கொள்கிறது. அவரது தெய்வீகமோ தேவ சிங்காசனத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது. கிறிஸ்துவை நோக்கிப்பார்த்தவர்களாக, அவரைப் பற்றிப்பிடித்துக்கொண்டவர்களாக. கிறிஸ்துவின் உயரத்தை அடையத்தக்கதாக, ஏணியின் ஒவ்வொரு சுற்றிலும் ஏறி, படிப்படியாகச் செல்லும்போது, நாம் இரட்சிக்கப்படுகிறோம்; இவ்வாறாக, அவர் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமாக ஆக்கப்பட்டார். விசுவாசம், தைரியம், ஞானம், இச்சையடக்கம், பொறுமை, தேவ பக்தி, சகோதர சிநேகம், அன்பு ஆகியவைகளே அந்த ஏணியின் சுற்றுப்படிகளாகும். இந்த அனைத்து கிருபைகளும் கிறிஸ்தவ குணத்திலே வெளிப்பட வேண்டும். “இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய இராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்” — 2 பேதுரு 1:11Mar 151.3

    மேற்கூறப்பட்ட கிருபைகளில் ஒன்றை பூரணப்படுத்திக் கொண்ட பிறகுதான், அடுத்த கிருபையை வளர்க்க முயற்சிசெய்ய வேண்டுமென்ற நிலைக்கு நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. இல்லவே இல்லை; அனைத்துக் கிருபைகளும் சேர்ந்து ஒன்றாக வளர வேண்டும்...; கிறிஸ்துவின் குணத்திலே முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட பாக்கியவான் அத்தனை குணங்களையும் நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நாளிலும் பூரணப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்.Mar 152.1

    உங்களது வாழ்நாளிலே நீங்கள் செய்யவேண்டிய இந்த மாபெரும் அளவிலான வேலையைக்குறித்து திகைப்படைய வேண்டாம்; ஏனெனில், இவை அனைத்தையும் ஒரேடியாகச் செய்துமுடிக்க வேண்டுமென்று உங்களிடம் கோரப்படவில்லை உங்களது உடலின் ஒவ்வொரு சக்தியும், ஒவ்வொரு நாளின் வேலைக்காகச் செலவிடப்பட்டடும். கிடைக்கும் ஒவ்வொரு அருமையான சந்தர்ப்பத்தையும் முன்னேற்றமடையச்செய்யுங்கள். தேவன் கொடுக்கும் உதவிகள் மதித்துப்பாராட்டுங்கள். முன்னேற்றம் என்று அந்த ஏணியிலே. ஒவ்வொரு படியாக முன்னேறுங்கள். ஒரு சமயத்தில் ஒரு நாள்மட்டுமே நீங்கள் வாழவேண்டும். தேவன் உங்களுக்கு ஒரு நாள் கொடுத்திருக்கிறார். அந்த நாளிலே உங்களுக்கு கொடுக்கப்பட்ட சிறப்புரிமைகளையும் சந்தர்ப்பங்களையும் எப்படி மதிப்பீடுசெய்தீர்கள் என்பதை பரலோகத்தின் பதிவேடுகள் காட்டும். தேவனால் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு நாளையும் இவ்வாறாக முன்னேற்றமடையச் செய்வீர்களாக. இறுதியில், “நல்லதும் உத்தமமும், உண்மையுமுள்ள ஊழியக்காரனே” என்று உங்கள் எஜமானர் சொல்வதை நீங்கள் கேட்கலாம்.⋆Mar 152.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 152.3

    ” தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும் உன் சந்தானத்தின்மேல் என் ஆசிர்வாதத்தையும் ஊற்றுவேன்.” — ஏசாயா 44:3.Mar 152.4