Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அசைக்கமுடியாத விசுவாசும்! , மார்ச் 20

    “அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிப்பட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.” - யாக்கோபு 1:6.Mar 157.1

    ஜெபமும் விசுவாசமும் மிக நெருக்கமாக இணைந்தவைகளாகும். இவ்விரண்டையும் நாம் இணைத்தே கற்றுக்கொள்ள வேண்டும். விசுவாசமுள்ள ஜெபத்திலே தெய்வீக அறிவியல் பாடம் ஒன்று உண்டு. அது வாழ்கையின் பணியை வெற்றியுள்ளதாக்க நினைக்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு அறிவியல் பாடமாகும். ” ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுகொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்” (மாற்கு 11:24) என்று கிறிஸ்து கூறுகிறார். நாம் கேட்பது தேவனுடைய சித்தத்திற்கு இசைவாக இருக்கவேண்டுமென்பதை தெளிவாகக் காட்டுகிறார். அவர் நமக்கு வாக்குத்தத்தம்பண்ணிய காரியங்களை நாம் கேட்க வேண்டும். நாம் பெற்றுக்கொள்வது எதுவானாலும், அவரது சித்தத்தைச் செய்வதற்கே அதை நாம் பயன்படுத்த வேண்டும்.எந்த நிபந்தனைகள் ஏற்றுகொள்ளபட்டால், வாக்குத்தத்தம் தெளிவாக இருக்கும்.Mar 157.2

    பாவமன்னிப்பிற்காக, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதற்காக, கிறிஸ்துவைப்போன்ற ஒரு குணநலனை அடைந்து கொள்வதற்காக, அவரது வேலையைச் செய்வதற்காக, ஞானத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ள, அவர் வாக்குத்தத்தஞ்செய்த ஈவுகளைப் பெற்றுகொள்ளத்தக்கதாக, நாம் கேட்கலாம். அதன் பின்னர், நாம் பெற்றுக்கொள்ளுகிறோம் என்று விசுவாசிக்க வேண்டும்; மேலும், நாம் பெற்றுக்கொண்டதற்காக, தேவனுக்கு நன்றியைச் செலுத்தவேண்டும். அந்த ஆசிர்வாதம் கிடைத்துவிட்டதற்கான வெளிப்படையான ஆதாரத்தை நோக்கிக்கொண்டிருக்க வேண்டாம். அந்த வாக்குத்தத்தத்தில் அந்த ஈவு இருக்கிறது. தேவன் வாக்குத்தத்தம்பண்ணியதைச்செய்ய வல்லவராயிருக்கிறார் என்று நிச்சயத்தோடு நாம் நமது வழக்கமான கடமைகளைச்செய்து கொண்டிருக்கலாம்; மேலும் ஏற்கெனவே நம்மிடத்தில் இருக்கும் அந்த ஈவானது, அது நமக்கு மிக அதிகமாக அவசியப்படும்போது கைகூடிவரும்.Mar 157.3

    இவ்வாறு, தேவனுடைய வார்த்தையின்படியே வாழ்வதின் பொருள் என்னவென்றாલ், நமது முழு வாழ்க்கையையுமே அவருக்கு ஒப்படைத்தலாகும். அவர் நமக்குத் தேவை; நாம் அவரைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணமானது, நம்மால் தொடர்ச்சியாக உணரப்படும். நமது இதயமானது தேவனை நோக்கி இழுக்கப்படும். ஜெபம் ஒரு கட்டாயமான தேவையாகும்; ஏனெனில், அதுவே ஆன்மாவின் உயிராக இருக்கிறது. குடும்ப ஜெபம், பொது ஜெபம் ஆகியவைகளுக்கான இடம் உண்டு; ஆனால், ஆண்டவரோடு நாம் கொள்ளும் அந்தரங்க ஆன்மீக உறவே ஆத்தும ஜீவனைத் தாங்கிப்பிடிக்கிறது...Mar 158.1

    ஒருபோதும் இல்லாத அளவிற்கு இந்த உலகத்தை ஒரு கடுமையான தீவிரநிலை ஆட்கொண்டுவருகிறது. கேளிக்கைகளிலும், பணம் சம்பாதிப்பதிலும், அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற போட்டிகளிலும், உலகில் உயிரோடு நிலைத்திருப்பதற்காகச்செய்யும் போராட்டத்திலும், ஒருவித பயங்கரமான சக்தியானது சரீரத்தையும் மனதையும் ஆன்மாவையும் முழுவதுமாக ஈர்த்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய வெறியூட்டும் வேகத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் தேவன் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார். தனித்துவந்து அவரோடு ஆன்மீக உறவுகொள்ளும் படி அழைக்கிறார். “அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” - சங்கீதம் 46:10.Mar 158.2

    அவரது சமூகத்தில் ஒரு கணம் சற்று நிற்பதல்ல. கிறிஸ்துவோடு தனிமையில் தொடர்புகொள்ளவேண்டும்; அவரோடு அமர்ந்திருந்து தோழமைக்கொள்ளவேண்டும்; அதுவே நமது தேவையாகும்.⋆Mar 158.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 158.4

    “சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.” - சங்கீதம் 41:1.Mar 158.5