Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இதயத்திலும் வாழ்விலும் தூய்மை! , மார்ச் 21

    “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். ” - மத்தேயு 5:8.Mar 159.1

    தேவ பட்டணத்திற்குள் தீட்டுப்படுத்துகிற எதுவும் பிரவேசிக்காது. அங்கே வாழப்போகின்ற அனைவரும் இப்பூமியில் இருக்கும்பொழுதே இதயத்தில் சுத்தமுள்ளவர்களாகிவிடுவார்கள். இயேசுவைப்பற்றி கற்றுக்கொண்டிருக்கும் ஒரு நபருக்கு, அக்கறையற்ற மனப்பாங்குகளிலும், பண்பற்ற மொழிநடைகளிலும், கரடு முரடான சிந்தனைகளிலும் ஒருவகையான வெறுப்பு வளர்வது வெளிப்படையாகத் தெரியும். கிறிஸ்து இதயத்தில் வாசஞ் செய்கிறபோது, சிந்தனையிலும் நடைமுறையிலும் தூய்மையும் பரிசுத்தமும் காணப்படும்.Mar 159.2

    இயேசு கூறிய வார்த்தைகளிலே...ஒரு ஆழமான பொருள் பொதிந்திருக்கிறது, இந்த உலகம் தூய்மை என்ற வார்த்தையை சாதாரணமாக விளங்கிக்கொள்ளும்படியான நிலையில் இல்லை; ஆனால் இந்த தூய்மையானவர்கள் என்ற வார்த்தை இந்த உலகில் இழிந்த புலன் நுகர்ச்சிக்கான காரியங்களிலிருந்து சுத்தமாகவும், இச்சைகளினின்று விலகியும் இருப்பது என்று பொருள் காட்டுகிறது. ஆனால் ஆத்துமாவில் மறைந்துகிடக்கும் நோக்கங்கள், உட்கருத்துக்கள் ஆகியவைகளில் சுத்தமாகவும் பெருமை, சுயநலத்தை வாஞ்சித்துத் தேடுதல் ஆகியவற்றிற்கு விலகி, சுத்தமுள்ளவர்களாகவும் தாழ்மையாகவும் சுயநலமின்றியும் சிறு பிள்ளையைப்போலவும் இருக்கவேண்டும் என்பதாகும்.Mar 159.3

    ஒத்ததே ஒத்ததைப் பாராட்டிப் போற்றமுடியும். நீங்கள் உங்களது சொந்த வாழ்க்கையிலே அவரது குணத்தின் கொள்கையாக இருக்கிற சுயத்தைத் தியாகஞ்செய்யும் அன்பின் அந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டாலொழிய, நீங்கள் தேவனை அறிய முடியாது...Mar 159.4

    கிறிஸ்து தமது மகிமையிலே இரண்டாம் வருகையில் வரும் பொழுது, துன்மார்க்கரால் அவரது பிரசன்னத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது. ‘அவரது பிரசன்னத்தின் ஓளியானது அவரை நேசிப்பவர் களுக்கு ஜீவனாயிருக்கிறது; ஆனால், தேவனற்றவர்களுக்கோ அது மரணமாயிருக்கிறது...’ எந்த ஆண்டவர் தங்களை மீட்பதற்காக மரணத்தைச் சந்தித்தாரோ, அவர் இரண்டாம் வருகையில் காணப்படும்பொழுது, அவரது முகத்திற்கு தங்களை மறைத்துக்கொள்ளத்தக்கதாக துன்மார்க்கர் வேண்டிக்கொள்ளுவார்கள்.Mar 159.5

    பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதினால், பரிசுத்தமடைந்த இதயங்களில் அனைத்தும் மாறிவிடும். அவர்கள் தேவனை அறியமுடியும். ஆண்டவரின் மகிமையானது மோசேக்கு வெளிப்பட்டபொழுது, அவன் பாறையின் பிளவிலே மறைத்துவைக்கப்பட்டிருந்தான். நாம் கிறிஸ்துவிலே மறைத்துவைக்கப்பட்டிருக்கும் பொழுதுதான், தேவனுடைய அன்பை நோக்கிப்பார்க்கிறோம்...Mar 160.1

    இங்கே, இப்பொழுது விசுவாசத்தினாலே நாம் அவரை நோக்கிப் பார்க்கிறோம். நமது அன்றாட அனுபவத்திலே அவரது தெய்வீக அருட்செயல்களின் வெளிப்பாட்டின்மூலமாக, அவர் நல்லவர் என்பதையும், அவரது பரிவுள்ள குணத்தையும் தெளிவாக அறிந்துகொள்கிறோம். அவரது குமாரனின் குணத்திலே, நாம் தேவனைக் கண்டறிந்துகொள்கிறோம். இதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தங்களது மீட்பராக ஒரு புதிய-மிகவும் அன்பான உறவிலே தேவனைக் காண்கிறார்கள். அவர்கள் அவரது குணத்தின் பரிசுத் தத்தையும் பிரதிபலிக்கவேண்டுமென்று ஏங்குகிறார்கள். மனந்திரும்பி வருகின்ற மைந்தனைக் கட்டித்தழுவ வேண்டுமென்று ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு பிதாவைப்போன்று அவரைக் காண்கிறார்கள். அவர்களது இதயங்கள் விவரிக்கக்கூடாத மகிழ்ச்சியினாலும் மகிமையினாலும் நிரம்புகின்றன. இதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவன் இந்த உலகத்தில் தங்களுக்குப் பங்களித்துக் கொடுத்திருக்கும் நாட்களிலே, அவரது நேரடியான பிரசன்னத்தில் வாழ்கின்றார்கள். ஏதேன் தோட்டத்திலே ஆதாம் தேவனோடு நடந்தான், பேசினான்; அதைப்போன்று, இதயத்தில் சுத்தமுள்ளவர்களும் எதிர்காலத்தில் நித்தியஜீவனைப் பெற்றுக்கொண்ட நிலையில், அவரை முகமுகமாகத் தரிசிப்பார்கள்.⋆Mar 160.2

    வாக்குத்தத்த வசனம்:Mar 160.3

    “கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து,கர்த்தருக்கே காத்திரு. - சங்கீதம் 27:14.Mar 160.4