Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சாத்தானின் உபாய தந்திரங்களைக்குறித்து விழிப்போடிருங்கள்! , மார்ச் 23

    “தெளிந்து புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்;...” - 1 பேதுரு 5:8,9.Mar 163.1

    ஒவ்வொரு ஆத்துமாவும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். நமது வழித்தடத்தில் எதிராளி வந்துகொண்டிருக்கிறான். ஊன்றிய கவனத்துடன் நன்கு மறைத்துவைக்கப்பட்ட, தேர்ச்சி நலம் வாய்ந்து, ஒரு கண்ணியை வைத்து, நீங்கள் எதிர்பாராத நிலையில் உங்களைப் பிடித்துக்கொள்ளாதபடி, எச்சரிக்கையுடன் தீவிர முயற்சியோடுகூடிய விழிப்புள்ளவர்களாக இருங்கள். இரவிலே வருகின்ற திருடனைப்போல, கர்த்தரின் நாள் தங்கள்மேல் வந்துவிடாதபடி, மெத்தனமாகவும் அக்கறையற்றும் இருக்கிற நபர்கள் எச்சரிக்கையோடு இருப்பார்களாக. அநேகர் கிறிஸ்துவின் நுகத்தைப் புறம்பே தள்ளிப்போட்டு, தாழ்மையின் பாதையைவிட்டு விலகி, அலைந்துதிரிந்து வழக்கத்திற்கு மாறான பாதைகளில் நடப்பார்கள். குருட்டுத்தனமுடையவர்களாக - தடுமாறிய நிலையில் - தேவபட்டணத்திற்கு அழைத்துச்செல்லுகின்ற அந்த ஒடுக்கமான பாதையைவிட்டு விலகிச்சென்றுவிடுவார்கள்...Mar 163.2

    வெற்றிகொள்ள விரும்பும் எந்த நபரும் விழிப்போடிருக்க வேண்டும். உலகப்பற்று நிறைந்த சிக்கல்கள், பிழைகள், மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவைகளைக்கொண்டு சாத்தான் கிறிஸ்துவின் பின்னடியார்களை அவரிடமிருந்து தன்பக்கமாக இழுக்க முயற்சிக்கிறான். வெளிப்படையாகத் தெரிகின்ற ஆபத்துகள், துன்பம்மிகும் நெருக்கடிகள், ஒவ்வாத நடவடிக்கைகள் ஆகியவை களைமட்டும் தவிர்த்துவிட்டால் போதாது. சுயத்தை வெறுத்தல், தியாகஞ்செய்தல் ஆகியவைகளுக்கு பாதைகளில் நடந்துகொண்டு கிறிஸ்துவின் பக்கத்தில் நம்மை நெருக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சத்துருவின் நாட்டிலே நாம் இருக்கிறோம். பரலோகத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டவன் மகா வல்லமையோடு கீழே இறங்கிவந்திருக்கிறான். குறிப்பிடத்தக்க அளவிற்கு எண்ணிப் பார்க்கத்தக்கதாக, ஒவ்வொரு சூழ்ச்சியின்மூலமும் உபாயத்தின் மூலமும் ஆத்துமாக்களை சிறைப்பிடிக்கும்படித் தேடியலைகின்றான். தொடர்ந்து நாம் விழிப்போடு இல்லாவிடில், அவனது எண்ணில் அடங்காத வஞ்சகங்களுக்கு நாம் எளிதில் இறையாகிவிடுவோம்.Mar 163.3

    இப்போது அனைத்தும் ஒரு பக்திவிநயம் என்னும் உடையை அணிந்துகொண்டிருக்கிறது. இந்தக் காலத்திற்குரிய சத்தியத்தை விசுவாசிக்கின்ற அனைவரும், இதை நுணுக்க விபரங்களுடன் விளங்கிக்கொள்ளவேண்டும். தேவனுடைய நாள் என்ற காரியத்தில் தொடர்புவைத்தவர்களாக நாம் செயலாற்றவேண்டும். தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் (அனுப்பும் தண்டனைகள்) இவ்வுலகின்மீது விழவிருக்கின்றன. நாம் இந்த மகா நாளிற்காக ஆயத்தமாகிக்கொண்டிருப்பது அவசியமாகும். நமது காலம் மிகவும் விலையேறப்பெற்றது. எதிர்கால நித்தியMar 164.1

    வாழ்விற்காக ஆயத்தமாவதற்கு, நமக்கு மிகமிகக் குறைவான நாட்களே தவணையின் காலமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்செயலாக நிகழ்கின்ற இயக்கங்களிலே செலவிட நமக்கு நேரமில்லை, தேவனுடைய வார்த்தையை மேலோட்டமாகப் படிப்பதற்கு நாம் பயப்பட வேண்டும். (ஆழ்ந்து படிக்கவேண்டும்). உங்களது முழு ஆர்வமும் சத்தியத்திலே இருக்குமானால், இந்தக் காலத்திலே செய்யப்பட வேண்டிய ஆயத்தப் பணியில் இருக்குமானால், அந்த சத்தியத்தினாலே நீங்கள் பரிசுத்தமாக்கப்படுவீர்கள். அந்த சாவாமையைத் தரித்துக்கொள்ளும் தகுதியைப் பெற்றுக்கொள்வீர்கள். பிழையின்றி, கரையின்றி, திரையின்றி அல்லது அதைப்போன்ற எதுவும் இன்றி, நாம் தேவ சிங்காசனத்திற்குமுன்பாக நிற்கும்வரை சத்தியத்தைப் பின்பற்றுகிறோம். தூய்மைப்படுத்துகின்ற அந்த வழிமுறைக்கு, நீங்கள் உங்களை ஒப்புக்கொடுப்பீர்காளானால், தேவன் உங்களைச் சுத்திகரிப்பார்.⋆Mar 164.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 164.3

    “கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள். - சங்கீதம் 125:1.Mar 164.4