Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஒவ்வொரு சோதனைக்கும் எதிரான விளக்கச்சான்று! , மார்ச் 24

    “...உங்கள் அவயங்கள் நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்... பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டது.” - ரோமர் 6:13,14.Mar 165.1

    ஒரே ஒரு வல்லமை மாத்திரமே மக்களின் இருதயங்களில் இருக்கும் தீமையின் பிடியை உடைக்கமுடியும். இயேசு கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய வல்லமையே அந்த வல்லமை ஆகும்... நமது விழுந்துபோன தன்மைகளை எதிர்த்துக் கீழ்ப்படுத்த அவரது கிருபை மாத்திரமே நமக்கு பெலன்தர முடியும்.Mar 165.2

    நமது மீட்பிற்காகத் தேவைப்பட்ட அந்த எல்லையற்ற மதிப்பு வாய்ந்த தியாகமென்று உண்மையானது, பாவமானது எவ்வளவு பேரச்சம் கொடுக்கக்கூடிய தீமை என்பதை வெளிப்படுத்துகிறது. பாவத்தினாலே முழு மானுடமும் ஒழுங்கு குலைந்து, உள்ளம் தாறுமாறாகி, மனதின் சிந்தனையின் தோற்றமெல்லாம் சீர்கெட்டுப்போயின. ஆத்தும சக்திகளை பாவம் கீழ்த்தரமாக்கிப்போட்டது. வெளியே இருக்கும் சோதனைகள் இதயத்தினின்று ஒத்திசைவான பதில் தொனியைப் பெறுகின்றது. உணர்விழந்த நிலையிலுங்கூட பாதங்கள் தீமையை நோக்கித் திரும்புகின்றன. எப்படி நமக்காகச் செய்யப்பட்ட தியாகம் முழுமையானதோ அதைப்போன்று, பாவ அழுக்குகளினின்று நாம் மீட்டெடுக்கப்படுவதும் முழுமையான ஒன்றாகும். பிரமாணம் மன்னிக்கத்தக்கதான எந்த துன்மார்க்கச் செயலும் கிடையாது. பிரமாணத்தின் தண்டனைக்குத் தப்பித்துக் கொள்ளத்தக்கதான, எந்த அநீதியும் கிடையாது. பிரமாணத்தின் ஒவ்வொரு கொள்கையின் முழுநிறைவேறுதலாகவும் கிறிஸ்துவின் வாழ்க்கை அமைந்திருந்தது. “நான் என் பிதாவின் கற்பனை களைக் கைக்கொண்டேன்” என்று இயேசு கூறினார் —யோவான் 15:10. கீழ்ப்படிதலிற்கும் சேவைக்குமான நமது படித்தரம் அவரது வாழ்க்கையே.Mar 165.3

    கிறஸ்துவின் முன்னால் சாத்தான் என்னென்ன சோதனைகளை வைத்தானோ, அதே சோதனைகளை இன்று நமக்கு முன்பாகவும் வைக்கிறான். நாம் நமது பற்றுறுதியை அவனுக்குக் காட்டுவோமானால், இந்த உலகின் இராஜ்யங்களை நமக்கு அளிக்க முன்வருகிறான்; ஆனால், விசுவாசத்தைத் துவக்குகிறவரும், முடிக்கிறவருமான இயேசுவை நோக்கிப் பார்க்கும் போது, சாத்தானின் சோதனைகள் வல்லமையற்றுப்போகின்றன. நம்மைப்போல எல்லா வகைகளிலும் சோதிக்கப்பட்டும், பாவமற்றவராக இருந்த அவரது புண்ணியங்களை விசுவாசத்தோடு பெற்றுக்கொள்ளும் நபரை அவன் பாவஞ் செய்யவைக்க முடியாது.Mar 165.4

    பாவத்தை வெளியேற்றுவது ஆத்துமா தன்னில்தானே செய்யும் ஒரு செயலாகும். சாத்தானின் கட்டுப்பாட்டிலிருந்து, நம்மை விடுவித்துக்கொள்ளத்தக்கதான எந்த வல்லமையும் நம்மிடத்தில் இல்லை என்பது உண்மைதான்; ஆனால், பாவத்தினின்று விடுபடவேண்டுமென்று நாம் வாஞ்சிக்கும்பொழுது, நமது அந்த மாபெரும் தேவையை உணர்ந்து, நம்மில் இல்லாத-நமக்கு மேலே இருக்கின்ற—அந்த வல்லமைக்காக—மன்றாடிக் கதறும்போது, ஆத்துமாவின் வல்லமைகள் பரிசுத்த ஆவியானவரின் தெய்வீக சக்தியினால் நிறையப்பெற்றுவிடுகிறது. தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றத்தக்கதாக, அந்த சித்தத்தின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறது.Mar 166.1

    சீர்கேடு அடைந்த இந்தக் காலத்தின் அருவருப்புகளுக்கு மத்தியில், திடமாக நின்று நற்கிரியைகளைச் செய்கின்ற மிகுந்த ஆர்வமுள்ள ஒரு மக்கள் கூட்டம் தேவனுக்காக இருக்கும். தெய்வீக வல்லமையை பற்றிப்பிடித்திருக்கும் ஒரு கூட்டமான மக்கள் இருப்பார்கள். வருகின்ற அனைத்துச் சோதனைகளுக்கும் எதிராக, விளக்கச் சான்றுகளாக நிற்பார்கள்.⋆Mar 166.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 166.3

    “கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச் செய்து. உன் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைகொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக. - 1 நாளாகமம் 22:12.Mar 166.4