Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உங்களது வழக்கு விசாரணைக்கு வரப்போகிறது! , மார்ச் 26

    “…தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது;…” - வெளிப்படுத்தல் 14:7.Mar 169.1

    நமது மகா பிரதான ஆசாரியர் பரலோக ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள மகா பரிசுத்தஸ்தலத்திற்குள் 1844-ல் நுட்ப நியாய விசாரணையை ஆரம்பிக்கத்தக்கதாக பிரவேசித்தார்.Mar 169.2

    குறித்துவைக்கப்பட்டிருக்கும் பதிவேடுகள், நியாயத்தீர்ப்பின் போது திறக்கப்படும் வேளையில், இயேசுவில் விசுவாசம் வைத்திருந்த அனைவருடைய பெயர்களும் பரிசீலனைக்கு வரும். நமது வழக்கறிஞராகிய இயேசு, பூமியின்மீது முதன்முதலில் வாழ்ந்திருந்த மக்களிலிருந்து ஆரம்பித்து, அவ்வாறு ஒவ்வோரு தலைமுறையையும் சார்ந்த மக்களை வரிசையின்படிப் பார்த்து, இறுதியில் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் நம்மிடத்தில் தமது பரிசீலனையின் வேலையை முடிப்பார். ஒவ்வோரு பெயரும் உச்சரிக்கப்படுகிறது. ஒவ்வொருவருடைய காரியமும் மிகவும் நுணுக்கமாக ஆராயப்படுகிறது; பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன; பெயர்கள் தள்ளிவிடப்பட்டன. மனந்திரும்பாத-மன்னிக்கப்படாத பாவங்கள், எந்தெந்த நபர்களது பதிவேட்டிலாவது இன்னும் மீந்திருந்தால், ஜீவ புத்தகத்திலிருந்து அவர்கள் பெயர்கள் கிறுக்கப்பட்டுப்போகும்.Mar 169.3

    நாம் இப்பொழுது பாவ நிவாரண நாள் எனப்படும் அந்த மகா நாளிலே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பாவ நிவாரண நாளிலே, எடுத்துக்காட்டான அந்த மாதிரி ஆராதனையின்போது, மகா பிரதான ஆசாரியர் இஸ்ரவேலருக்காகப் பாவ நிவாரணஞ்செய்து கொண்டிருக்கும்பொழுது, மக்கள் தங்கள் ஜனத்தின் மத்தியிலிருந்து அறுப்புண்டுபோய்விடாதபடி, ஆண்டவருக்குமுன்பாக தங்களைத் தாழ்த்தி, மனந்திரும்பத்தக்கதாக தங்களது ஆத்துமாக்களை ஒடுக்க வேண்டியது அனைவருக்கும் அவசியமாக இருந்தது. அது போலவே, ஜீவ புத்தகத்திலே தங்களது பெயர்கள் நீக்கப்படாமல் வைத்திருக்கப்பட வேண்டும் என்று நினைக்கிற ஒவ்வோருவரும், அவர்களது தவணையின்காலத்தில் மீந்திருக்கும் சிலநாட்களுக்குள்ளாக, இப்பொழுது உண்மையாக மனந்திரும்புதலினால், பாவத்திற்கு மனம்வருந்தி, தேவனுக்கு முன்பாக தங்களது ஆத்துமாக்களை ஒடுக்கவேண்டும். இதயத்தை மிகவும் உத்தமமாக ஆழ்ந்து உய்த்து ஆராய்ச்சிசெய்யவேண்டியது அவசியம்…ஆளுகை செய்வதற்காக முயன்றுகொண்டிருக்கும் தீய மனப்பாங்குகளை அடக்கியாள விரும்புபவர்களுக்கு முன்பாக, ஊக்கமாக நடைபெற வேண்டிய ஒரு போராட்டம் உண்டு. ஆயத்தமாகின்ற வேலை ஒவ்வொருவருக்கும் உரிய தனிப்பட்ட வேலையாகும். நாம் குழுக்களாக இரட்சிக்கப்படடுகிறதில்லை. ஒரு நபருடைய பரிசுத்தமும் தேவ பக்தியும் இத்தகைய குணங்கள் இல்லாதிருக்கின்ற வேறொருவருடைய நிலையை ஈடுசெய்துவிடாது. ஒவ்வொருவரும் சோதிக்கப்பட்டு, கறை-திரை மற்றும் எதுவும் இல்லாதவர்களாகக் காணப்படவேண்டும்.Mar 169.4

    பாவத்திற்காக உண்மையிலேயே மனவேதனை அடைந்து, தங்களுக்கான பாவ நிவாரண பலி கிறிஸ்துவின் இரத்தமே என்பதை விசுவாசத்தின்மூலமாக உரிமைகோருபவருடைய பெயர்களுக்கு எதிராக, பரலோகப் பதிவேடுகளிலே மன்னிப்பு என்ற வார்த்தை எழுதப்பட்டிருக்கும். கிறிஸ்துவின் நிதியின் பங்காளியாக இருக்கிறபடியால், தேவனுடைய பிரமாணத்திற்கு ஒத்திசைவாக அவர்கள் குணங்கள் காணப்படுகின்றன. அவர்களுடைய பாவங்கள் கிறுக்கப்பட்டுப்போகும். அவர்கள் நித்தியஜீவனைப் பெறத்தகுதியுடையவர்கள் என எண்ணப்படுவார்கள். “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்” என்று ஆண்டவர் உறுதியாகக் கூறுகின்றார்.⋆Mar 170.1

    வாக்குத்தத்த வசனம்:Mar 170.2

    “இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்.” - ஏசாயா 54:15.Mar 170.3