Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மகா சர்ச்சை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம் 10 - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்

    அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், இயேசு, இளைப்பாறிக் கொண்டிருக்க, அந்த ஓய்வுநாளில், அவருடைய சீடர்களும் துக்கத்துடன் ஓய்ந்திருந்தார்கள். இரவு கடந்து, அதிகாலையின் வெளிச்சம் தோன்றுவதற்கு முன்னரே தங்களது அன்பான அதிகாரியை விடுவிப்பதற்கு தூதர்கள் ஆயத்தமானார்கள். இயேசுவின் வெற்றியை எதிர்நோக்கியிருந்த வேளையில், பரலோகத்திலிருந்து மாவலிய தூதன் ஒரவன் துரிதமாக இறங்கி வந்தான். அவனுடைய வஸ்திரம் பனியைப் போல் வெண்மையாகவும் இருந்தது. அவனிலிருந்து வந்த ஒளி, அவ்விடத்தில் வெற்றி களிப்பில் மிதந்துக்கொண்டிருந்த தீய தூதர்களை கலங்கடித்து, விரட்டியடித்தது. இயேசுவின் பாடுகளை கவனித்து வந்த ஒரு தூதன், இவ்வலிய தூதனோடு இணைந்து, இருவருமாக கல்லறைக்கு வந்தார்கள். அவர்கள் நெருங்கி வந்த சமயத்தில் பயங்கரமான பூமியதிர்வு உண்டாயிற்று. அவ்வலிய தூதன், கல்லறையின் வாசலில் வைக்கப்பட்டிருந்த கல்லலை உருட்டி, நுழைவு வாயிலை திறந்து, அக்கல்லின் மேலே அமர்ந்தான்.GCt 28.1

    காவற்காரரை திகில் பற்றிக்கொண்டது. இயேசுவின் சரீரத்தை காக்க வேண்டிய வல்லமையை எங்கே? அவர்களுடைய கடமையைக் குறித்தோ, சீடர்கள் இயேசுவின் சரீரத்தை திருடக்கூடியதோ இப்பொழுது அவர்கள் நினைவில் இல்லை. கதிரவனின் ஒளியைக் காட்டிலும் பிரகாசமான தேவதூதர்களின் ஒளி, அவர்களை ஆச்சரியத்திலும், பயத்திலும் ஆழ்த்தியது. ரோமாபுரி சேவகர்கள் தூதர்களை கண்ட மாத்திரத்தில் செத்ததைப் போல விழுந்தார்கள். ஒரு தூதன் உரத்த சத்தத்தில் இயேசுவை வெளியே வரும்படி அழைத்தான். அவர் மீது மரணத்திற்கு அதிகாரமில்லாமல் போனது. இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். மற்ற தூதன் உள்ளே சென்று, இயேசுவின் தலையில் சுற்றப்பட்டிருந்த சீலைகளை கழட்டிவிட்டான். இயேசு ஜெயங்கொண்டவராக வெளியே வந்தார். பக்தியின் பயத்தோடு அக்காட்சியை தூதர்கள் கண்டார்கள்.GCt 28.2

    கல்லறையை விட்டு கெம்பீரமாக வெளியே வந்த இயேசுவை சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்துக் கொண்டார்கள். மரணம் அவரை பிடித்துக்கொள்ளாமல் போனதை மகிழ்வுடன் பாடி பூரித்தார்கள். சாத்தான் இப்பொழுது குதூகலிக்கவில்லை பரலோக தூதர்களின் ஒளியை தாங்க இயலாமல், அவனுடைய தூதர்கள் ஓடிப்போயிருந்தார்கள். இயேசு மரணத்தை வென்ற செய்தியை சாத்தானிடம் கூறினார்கள்.GCt 29.1

    ஜீவனின் அதிபதியை கல்லறைக்குள் கிடத்தியதைக் குறித்து, சாத்தானின் குழு சற்றே மகிழ்ந்திருந்தது. ஆனால், இந்நரக ஆசை மிகக்குறுகிய ஆசையாக இருந்தது. கம்பீரமான வெற்றி வீரனாக வலம் வர இருப்பதையும், தன் வசப்படுத்தியிருந்த இவ்வுலகினை மீண்டும் இயேசுவிடம் ஒப்படைக்க வேண்டியதையும், சாத்தான் உணர்ந்தான். தனது முழுமையான பெலத்தைக் கொண்டும் இயேசுவை மேற்கொள்ள முடியாத சாத்தான் கோபத்தில் புலம்பினான். இயேசு ஜெயித்தது மட்டுமல்ல, அவரது வெற்றியின் காரணமாக மீட்பின் திட்டத்தையும் வழி வகுத்து கொடுத்திருந்தார்.GCt 29.2

    சாத்தான் சற்றே ஏமாற்றத்துடனும், கவலையுடனும் காணப்பட்டான். தேவனின் அதிகாரத்திற்கு எதிராக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய, சாத்தான், தனது ஆலோசனைக் குழுவை கூட்டினான். பிரதான ஆசாரியர்களையும், மூப்பர்களையும் மீண்டும் சந்திக்க முடிவு செய்யப்பட்டது. இதுவரை, அவர்களை வஞ்சித்து, இதயங்களை கடினப்படுத்தி, இயேசுவிற்கு எதிராக மாற்றியிருந்தான். இயேசுவை வஞ்சகர் என நம்ப வைத்திருந்தான். எனவே, இயேசு உயிர்த்தெழுந்ததினால் அவர்களுக்கு ஆபத்து நேரிடக் கூடுமென்று அவர்களை எச்சரிக்க முடிவு செய்தான்.GCt 29.3

    தேவதூதர்கள் பரலோகத்திற்கு சென்றபின், ரோமாபுரிய சேவகர்கள் மெதுவாக எழுந்ததை நான் கண்டேன். மாபெரும் கல் அகற்றப்பட்டதையும், இயேசு உயிர்த்தெழுந்ததையும் அவர்கள் கண்டு, வியந்தார்கள். அவர்கள் கண்டிருந்த அற்புத கதையை பகிர்ந்து கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்களிடம் விரைந்துச் சென்றார்கள். இச்செய்தியை கேட்டதும், அக்கொலைகாரரின் முகம் வாடிப்போனது. அவர்கள் செய்த காரியத்தை குறித்த பயம் அவர்களை தொற்றிக்கொண்டது. அவர்களுக்கு இப்பொழுது கிடைத்த தகவல் மெய்யென்றால், அவர்கள் தொலைந்துப்போவார்கள் என்பதை உணர்ந்தார்கள். சற்று நேரம் உணர்ச்சி இழந்து, செய்வதறியாது, மௌனமாக, ஒருவரின் முகத்தை ஒருவராக பார்த்துக்கொண்டார்கள். மக்களிடத்தில் இயேசு உயிர்தெழுந்த செய்தி போனால், சபைத் தலைவர்களை ஜனங்கள் கொன்றுபோடுவார்கள் என்பதையும் அறிந்திருந்தார்கள். எனவே, பணம் கொடுத்து, சேவகர்களை மௌனமாக்கவேண்டும் என தீர்மானித்தார்கள். அப்படியே திரளான பணத்தை கொடுத்து, இயேசுவின் உயிர்த்தெழுதலின் செய்தியை இரகசியமாய் வைத்து, யாராவது வினவினால், “இயேசுவின் சீடர்கள் நாங்கள் உறங்கியபோது, திருடிக்கொண்டு போய்விட்டார்கள்” என்று சொல்லவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். கடமையின் போது உறங்கியதற்காகவும், தேசாதிபதியிடம் பேசி தீர்வு காணப்போவதாகவும் உறுதியளித்தார்கள். பணத்திற்காக மரியாதையை விற்று, ஆசாரியரின் ஆலோசனைப்படி செய்ய ரோம சேவகர்கள் ஒத்துக்கொண்டார்கள்.GCt 29.4

    இயேசு, சிலுவையில் தொங்கியபடி, “முடிந்தது” என்று உச்சரித்ததும், பாறைகள் பிளந்தன, பூமி அதிர்ந்தது, சில கல்லறைகளும் திறக்கப்பட்டன. இப்பொழுது. அவரே மரணத்தை ஜெயித்தவராக வந்தபோது, அநேக நீதிமான்கள் மரணத்திலிருந்து எழும்பி அவரது உயிர்த்தெழுதலின் காட்சியை கண்டார்கள். உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்கள் மகிமையடைந்தவர்களாய் வந்தார்கள். சிருஷ்டிப்பின் காலம் முதல் இயேசுவின் நாட்கள் வரை மரித்திருந்த அநேக பரிசுத்தவான்கள் இக்காட்சியை கண்டார்கள். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை மறைக்கவேண்டும் என்று அலைந்துக் கொண்டிருந்த பிரதான ஆசாரியார்களும், பரிசேயரும் ஒரு பக்கம் இருக்க, கல்லறைகளிலிருந்து ஒரு கூட்டத்தை எழுப்பி, அவருடைய உயிர்த்தெழுதலைக் குறித்து சாட்சி பகரும்படி, தேவன் மறுபக்கத்தில் கிரியை செய்து கொண்டு இருந்தார்.GCt 30.1

    உயிர்த்தெழுப்பப்பட்ட அனைவரும் மாறுபட்ட தோற்றங்களை கொண்டிருந்தார்கள். இவ்வுலக மக்கள், காலப் போக்கில், சீரழிந்து, அவர்களுடைய பெலனையும், ரூபத்தையும் அழித்துக் கொண்டிருந்தார்கள். என எனக்கு தெரிவிக்கப்பட்டது. நோய்களையும், மரணத்தையும், சாத்தான், தன் வசம் வைத்திருந்தான். காலப்போக்கில், ஒவ்வொரு வயதிலும், இச்சாபம் நிழலாடுவதை காணமுடிந்தது. எழுப்பப் பட்ட சிலர், பிறரை காட்டிலும் அழகிய தோற்றத்தை கொண்டிருந்தார்கள். நோவாவின் நாட்களிலும், ஆபிரகாமின் காலத்திலும் வாழ்ந்து வந்தவர்கள், தோற்றத்திலும் வலிமையிலும், தூதர்களை போல் இருப்பார்கள் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு தலைமுறையும் பெலவீனமாகிக் கொண்டே போய், நோய்களும் அதிகரித்து, வாழ்நாட்களும் குறைந்துக்கொண்டே போனது. மனிதனை நிம்மதியிழக்கச் செய்து, மனுக்குலத்தையே பெலவீனப்படுத்த, சாத்தான் கற்றுக் கொண்டான்.GCt 30.2

    உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்கள் அநேகருக்கு தோன்றி, இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை சாட்சியாக அறிவித்தார்கள். இயேசுவின் வல்லமையினால்தான் தாங்களும் மரணத்தை ஜெயித்தார்கள் என்றும் சாட்சி பகிர்ந்தார்கள். பொய்யான பிரச்சாரங்களினால், சாத்தானோ, அவனுடைய தூதர்களோ, பரிசேயர்களோ, உயிர்த்தெழுதலின் உண்மையை மறைக்க முடியவில்லை. ஏனெனில், கல்லறையிலிருந்து எழும்பிய பரிசுத்தவான்களின் கூட்டம், இந்த மகிழ்ச்சியின் செய்தியை துரிதமாக பரப்பினார்கள். இஃதோடு இயேசுவும், மனம் நொந்திருந்த சீடர்களிடம் தம்மை காண்பித்து, அவர்களுடைய பயங்களை களைந்து, பூரண சமாதானத்தை கொடுத்தார்.GCt 30.3

    ஒவ்வொரு நகரமாக, பட்டணத்திலிருந்து பட்டணமாக பரவிய இச்செய்தி, யூதர்களின் உள்ளங்களிலும் பயத்தை வளர்த்தது. எனவே, யூதர்கள், சீடர்களின் மீது வைத்திருந்த வெறுப்பை மறைத்துப்போட்டார்கள். தவறான செய்தியை பரப்புவதுதான் சிறந்த வழியென யூதர்கள் கருதினார்கள். பிலாத்து நடுங்கினான். இயேசு உயிர்த்தெழுந்ததையும், அவரோடு வேறு சிலர் எழுந்ததையும் பிலாத்து விசுவாசித்ததால், அவனுடைய நிம்மதி அவனை விட்டு நிரந்தரமாக பிரிந்திருந்தது. உலக கௌரவத்திற்காகவும், அதிகாரத்தை காத்துக்கொள்ளவும், இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்திருந்தானே! தான் சுமந்துக் கொண்டிருப்பது ஒரு சாதாரண மனிதனின் இரத்தப்பழி அல்ல என்றும், அது தேவகுமாரனின் இரத்தப்பழி என்றும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டான். அவனுடைய ஜீவியம் துக்ககரமானதாக மாறிற்று. தேற்றப்படுவதை மறுத்து, பரிதாபமாக மடிந்துப் போனான்.GCt 30.4

    ஏரோதின் இருதயமோ அதிக கடினமானது. இயேசு உயிருடன் எழுந்த செய்தி அவனை அதிகமாக பாதிக்கவில்லை. சீடனாகிய யாக்கோபை கொன்று போட்டான் இது யூதர்களுக்கு பிடித்திருந்ததால், பேதுருவையும், பிடித்து சிறை வைத்தான். ஆனால் தேவனோ, தமது தூதனை அனுப்பி, பேதுருவை விடுவித்தார். திரளான ஜனங்களுக்கு முன்னால் தன்னையே புகழ்ந்துக் கொண்டிருந்து ஏரோது, கொடூரமாக செத்தான்.GCt 31.1

    இருள் நிறைந்த அதிகாலை நேரத்தில், பரிசுத்த ஸ்திரிகள், இயேசுவின் சரீரத்தை சுகந்தவர்க்கமிடும்படியாக வந்தார்கள். அடைப்புக் கல் அகன்றிருப்பதையும், இயேசுஅங்கில்லா திருப்பதையும் அவர்கள் கண்டு பயந்தார்கள். எதிரிகள் திருடிவிட்டார்களோ என்று எண்ணிய அவர்களின் இதயங்கள் தோய்ந்து போயின. இதோ, இரண்டு வென்னங்கிதரித்த தூதர்கள், பிரகாசமான முகங்களோடு அங்கே தோன்றினார்கள். இந்தப் பெண்களின் வாஞ்சையை உணர்ந்த தூதர்கள், இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி கூறி, அவரை கிடத்தியிருந்த இடத்தையும் காட்டினார்கள். அஃதோடு, சீடர்களிடம் போய், அவர்களுக்கு முன்பாக இயேசு கலிலேயாவிற்கு போகிறார் என்றும் அறிவிக்கும்படியாக கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அந்த ஸ்திரிகள் பயந்திருந்தார்கள். எனினும், அப்பெண்கள் துரிதமாக ஓடி, தாங்கள் கண்ட அனைத்தையும் சீடர்களிடம் கூறினார்கள். இதனை நம்ப இயலாமல், சீடர்களும், அப்பெண்களோடு கூட வந்து கல்லறையை பார்த்தார்கள். இயேசு அங்கில்லாதிருந்ததை கண்டார்கள். ஸ்திரீகளின் மூலமாக தாங்கள் அறிந்துக்கொண்ட செய்திகளுக்காகவும், தாங்களே நேரில் கண்ட காட்சிகளுக்காகவும் நன்றி தெரிவித்தார்கள். பிரமித்துபோய் வீடு திரும்பினார்கள். மரியாளோ, தான் கண்ட காட்சிகளை எண்ணி, மீண்டும் ஏமாந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில், அங்கேயே உலாவிக் கொண்டிருந்தாள். புதிய சோதனைகள் தனக்காககாத்திருப்பதாக மரியாள் உணர்ந்தாள். அவளுடைய சோகம், புதுப்பிக்கப்பட்டு, கசப்பான அழுகையில் வெடித்தது. அவள் மீண்டும் கல்றைக்குள் எட்டி பார்த்து, இரண்டு தூதர்களை கண்டாள். இயேசு கிடத்தப்பட்டிருந்த இடத்தில் ஒருவன் தலை அருகிலும், மற்றொருவன் கால் பகுதியிலும் அமர்ந்திருந்தார்கள். அத்தூதர்கள் மென்மையாக அவளை விசாரித்தார்கள். அதற்கு மரியாள், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்கு தெரியவில்லையே” என பதிலளித்தாள்.GCt 31.2

    கல்லறையிலிருந்து திரும்பிய அவள், இயேசு தனதருகே நிற்பதை கண்டாள். ஆனாலும் அவரை அடையாளம் காணதிருந்தாள். இயேசு கனிவோடு, “ஸ்திரியே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய்” என வினவினார். அவள், அவரை தோட்டக்காரர் என்று எண்ணி, “ஜயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன்” என்று கேட்டாள். அப்பொழுது இயேசு, தமது பரலோக தெனியில், “மரியாளே” என்று அழைத்தார். அந்த சத்தம் பழக்கமானதாக இருந்தபடியால், மரியாளும் உடனே, “போதகரே” என்றாள், மகிழ்ச்சியோடு அவரை அனைத்துக்கொள்ள அவள் முயற்சித்தபோது, இயேசு, “என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவின் இடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன்” என்று சொன்னார். மகிழ்வுடன், இந்நற்செய்தியை சீடர்களிடம் கூறச்சென்றாள். இயேசு அக்கணமே, பரம பிதாவிடம் சென்று, பரத்திலும், பூமியிலும் உண்டாயிருந்த வல்லமையை பெற்றுக்கொள்ளச் சென்றார்.GCt 32.1

    மகிமையின் ராஜா பிரவேசிக்கும்படி, பரலோகத்தின் கதவுகளை திறந்து, தேவதூதர்கள், இயேசுவை, மேகம் போல் சூழ்ந்துக்கொண்டார்கள். பரம தகப்பனின் சமூகத்தில் இருந்த போதிலும், தமது மானிட சீடர்களை இயேசு மறந்துவிடவில்லை. பிதாவிடமிருந்து வல்லமையை பெற்று, உலகிற்கு திரும்ப வந்து, அவ்வல்லமையை சீடர்களுக்கு அளிக்கவேண்டுமென்று ஆசித்தார். அந்த நாளிலேயே அவர் திரும்ப வந்து சீடர்களின் நடுவே தோன்றினார். அவ்வேளையில், அவர் பரம பிதாவிடம் சென்று வல்லமையை பெற்று விட்டபடியால், சீடர்களை தொட அனுமதித்தார்.GCt 32.2

    இந்நேரத்தில் தோமா இல்லாதிருந்தான். சீடர்கள் சொன்ன செய்தியை அவன் ஏற்கவில்லை. மாறாக அவன், “அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான, காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலை விட்டு, என் கையை அவர் விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன்” என உறுதியாக கூறினான். தன் சகோதரர் மீது தோமா வைத்திருந்த அவ நம்பிக்கை இதிலே விளங்கிற்று. அனைவரும் இத்தகைய சாட்சிகளை எதிர்பார்த்தால், வெகு சிலரே இயேசுவை ஏற்றுக்கொள்வார்கள். இவை அனைத்தையும் கண்டிருந்த சீடர்களின் மூலமாக இச்செய்தி பரவவேண்டுமென பிதா விரும்பினார். எனவே இத்தகைய அவநம்பிக்கையை குறித்து தேவன் விசனப்பட்டார். இயேசு மறுபடியும் சீடர்களை சந்தித்தபோது, தோமாவும் உடன் இருந்தான். இயேசவை பார்த்த மாத்திரத்தில் அவரை விசுவாசித்தான். ஆகிலும், தொட்டுப் பார்க்காமல் விசுவாசிக்கப் போவதில்லை என்று அவன் அறிவித்திருந்ததினால், இயேசு அவனுக்கு அந்த வாய்ப்பையும் கொடுத்தார். தோமா அதற்கு பதிலாக, “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று அலறினான். தோமாவின் அவிசுவாசத்தை கண்டித்த இயேசு, “தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், கானாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்” என்றார்.GCt 32.3

    அந்தப்படியே முதலாம் தூதனின் தூதையும், இரண்டாம் தூதனின் தூதையும் 1வெளி 14:6-8 இப்புஸ்தகத்தின் 23ம், 24ம் அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளது. அனுபவிக்காதவர்கள், அனுபவித்தவர்களின் சாட்சியிலிருந்து அவைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் கண்டேன். இயேசு சிலுவையிலறையப்பட்ட படியே, இத்தூதுகளும் அறையப்பட்டிருந்ததை நான் கண்டேன். நாம் இரச்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை என்று சீடர்கள் அறிவித்தப்படியே, தேவ ஊரியக்காரர்களும் விசுவாசத்தோடு, பயமின்றி முத்தூதினையும் தேவன் அருளியப்படியே ஏற்றுக்கொள்வது அவசியமென்றும் நான் கண்டேன். 2வெளி 14:9-12 இப்புஸ்தகத்தின் 28ம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது.GCt 33.1

    ஸ்திரீகள், இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை எடுத்துச் சென்ற அதே நேரத்தில், ரோமாபுரிய காவல்சேவகர்கள், இயேசு உயிர்த்தெழவில்லை; அவருடைய சீடர்கள் அவரை கடத்திச் சென்றுவிட்டார்கள் - என்ற பொய்யை பரப்பிக்கொண்டிருந்தார்கள். பிரதான ஆசாரியாரின் இருதயங்களில் இத்தகைய தீமையை சாத்தான் விதைத்திருந்தான். மக்களும் இதனை உடனடியாக ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும் ஆண்டவர், இம்மீட்பின் திட்டத்தின் முக்கியத்துவம் கருதி, உண்மையை விளக்கி, சந்தேகங்களுக்கு அப்பால் அதை உயர்த்தி வைத்தார். யாராலும் அதனை மறைக்க கூடாமல் போயிற்று, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாக, மரணத்திலிருந்து எழுப்பப்பட்டவர்கள் இருந்தார்கள்.GCt 33.2

    இயேசு, தனது சீடர்களோடு நாற்பது நாட்கள் தங்கியிருந்து, அவர்களுடைய இருதயங்களை களிப்படையச் செய்து, பரலோக இராஜ்ஜியத்தின் சத்தியங்களை விளக்கினார். அவருடைய பாடுகளை குறித்தும், மரணத்தை குறித்தும், உயிர்த்தெழுதலைக் குறித்தும், அவர்கள் சாட்சியாக இருக்க வேண்டுமென வலியுறுத்தினார். அவர் செய்த தியாகத்தையும், அதனை கண்டடையும் எவரும் ஜீவனை கண்டடைவார்கள் என்கிற சத்தியத்தையும் சீடர்கள் பலருக்கு எடுத்துரைக்க வேண்டும். அவர் நிமித்தம், சீடர்களும் பாடுகளையும், நிந்தைகளையும் சகிக்க வேண்டியது அவசியம் என்று தெளிவுப் படுத்தினார். சாத்தானின் சோதனைகளை தான் ஜெயித்ததை எடுத்துரைத்த இயேசு, தமது ஜீவியத்தில் இனி சாத்தானுக்கு அதிகாரம் இல்லை என்பதை விளக்கினார்.எனவே, சாத்தானின் முழுமையான கோபத்துக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலைகள் அவர்களுக்கு வரக்கூடும் என்பதைக் குறித்து எச்சரித்தார். எனினும், சாத்தானை அவர் வென்றதைப் போலவே, அவர்களும் வெல்ல முடியும் என நம்பிக்கையளித்தார். அற்புதங்கள் செய்யக்கூடிய வல்லமையை அவர்களுக்குத் தந்தார். தங்களுடைய ஊழியங்களில் போராட்டங்கள் எழும்பும் என்றும், அத்தகைய சூழ்நிலைகளில் அவருடைய ஆவியானவர் அவர்களை தேற்றுவார் என்றும், தூதர்கள் அவர்களை காத்துக்கொள்வார்கள் என்றும் எடுத்துரைத்தார். அவர்களுடைய இலக்கு நிறைவேறுமட்டும் அவர்களுடைய ஜீவனை பிசாசு எடுத்துக்கொள்ள முடியாது என்றும் உறுதியளித்தார். அவருடைய போதனைகளை மகிழ்ச்சியோடு கேட்டார்கள். அவருடைய பரிசுத்த உதடுகளிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக கேட்டார்கள். அவர்தான் உலகத்தின் இரட்சகர் என்று விசுவாசித்தார்கள். ஒவ்வொரு வார்த்தையையும் பற்றிக்கொண்ட சீடர்கள், விரைவில் தங்கள் ஆண்டவர் அவர்களிடமிருந்து பிரிந்துவிடுவார் என்பதை நினைத்து வருந்தினார்கள். இயேசு, தமது பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்களை ஆயத்தப்படுத்திய பின்பு, மீண்டும் வந்து, அனைவரையும் தம்முடன் அழைத்துச் செல்வதாக வாக்கு அருளின பின்பு, சற்றே திருப்தியடைந்தார்கள். மேலும், பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை அனுப்புவதாகவும், அவர், அவர்களை வழிநடத்தி, ஆசீர்வதித்து, காத்துக்கொள்வார் என்றும் தைரியப்படுத்தினார். இறுதியாக, தம் கரங்களை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.GCt 33.3

    பார்க்க : மத்தேயு 27 : 52-53; 28 :1-20
    மாற்கு 16:1-18
    லூக்கா 24:1-50
    யோவான் 20:1-31
    அப்போஸ்தலர் 12 : 1-25