Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மகா சர்ச்சை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம் 35 - மூன்றாம் துது மூடப்பட்டது

    மூன்றாம் தூதனின் தூது நிறைவேறும் காலத்திற்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். கர்த்தரின் வல்லமை அவருடைய பிள்ளைகளோடு தங்கியிருந்தது. அவர்கள் தங்கள் கடமைகளை முடித்துவிட்டு, அவர்களுக்கு முன் இருந்த இக்கட்டான காலத்துக்கு ஆயத்தமாக இருந்தார்கள். அவர்கள் பின் மாரியை, கர்த்தருடைய சுமூகத்தினின்று பெற்றிருந்தபடியால், வாழும் சாட்சிகளாக உயிர்ப்பிக்கப்பட்டிருந்தார்கள். இந்தக் கடைசி மகாஎச்சரிப்பு எல்லா இடங்களிலும் எழுந்தபடியால், அதனை ஏற்காத உலக ஜீவிகளுக்கு அஃது பெருங்கோபத்தை தூண்டியது.GCt 99.1

    பரலோகத்தில் தூதர்கள் அங்குமிங்குமாக அசைவாடி, அசைந்துக்கொண்டிருந்ததை நான் கண்டேன். பூமியிலிருந்து திரும்பிய ஒரு தூதன், இயேசுவிடம், தான் தனது கடமைகளை முடித்து விட்டதாகவும், பரிசுத்தவான்கள் எண்ணப்பட்டு முத்தரிக்கப்பட்டாகிற்று என்றும் கூறினான். அப்பொழுது, பத்துக் கற்பனைகளைக் கொண்டிருந்த உடன்படிக்கை பெட்டியின் முன் தனது கடமைகளை செய்துக்கொண்டிருந்த இயேசுவானவர், தமது கையிலிருந்த தூபக்கலசத்தை இறக்கி வைத்ததை நான் கண்டேன். அவர் தமதுகரங்களை உயர்த்தி, “எல்லாம் முடிந்தது” என்றார். பின்பும் அவர், “அநியாயஞ் செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யப்பட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்,” என பக்தியுடன் பிரகடனம் செய்தார்.GCt 99.2

    மரணமா, ஜீவனா என்று அனைத்து நபர்களுக்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதை நான் கண்டேன். இயேசு தம்முடைய ராஜ்ஜியத்தின் பிரஜைகளுக்காக உரிய பரிகாரத்தை செய்து, அவர்களுடைய பாவங்களை அழித்திருந்தார். ஆசாரிப்புக் கூடாரத்தில் இயேசு தனது ஊழியத்தை செய்துக்கொண்டிருந்த வேளையில், மரித்த நீதிமான்களுக்கும், அதன் பின்பு, உயிருடனிருந்த நீதிமான்களுக்கும், நியாயத்தீர்ப்பு நடந்துக்கொண்டிருந்தது. இராஜ்ஜியத்தின் பிரஜைகள் தெரிந்தெடுக்கப்பட்டாகிவிட்டது. ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணம் முடிவடைந்தது. பரலோக இராஜ்ஜியத்தின் மகத்துவம் இயேசுவிடம் அருளப்பட்டது. இனி அவர், ராஜாதி ராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தராகவும் ஆளுகைச் செய்வார்.GCt 99.3

    மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து இயேசு வெளியேறிய போது, அவருடைய வஸ்திரங்களின் மணிகள் எழுப்பிய ஓசையை நான் கேட்டேன். அப்பொழுது ஒரு அந்தகார மேகம் பூமியின் குடிகளை மறைத்துக்கொண்டது. இதற்கு பின், அங்கு, குற்றம் புரிந்த பாவிக்கும், வருந்திய தேவனுக்குமிடையே மத்தியஸ்தர் யாரேனும் இல்லாதிருந்தது. தேவனுக்கும் பாவிக்கும் இடையே கிறிஸ்து நின்ற சமயங்களில், ஜனங்களிடையே ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஆனால், இயேசு அங்கிருந்து விலகியபோது, அந்தக் கட்டுப்பாடும் விலகியது. மனிதனின் கட்டுப்பாட்டை சாத்தான் தன்வசப்படுத்திக்கொண்டான். இயேசு ஆசாரிப்பு கூடாரத்தில் ஊழியஞ்செய்தபோது, ஜனங்களின் மீது வாதைகள் ஊற்றப்பட இயலாமல் இருந்தது. ஆனால் இப்பொழுதோ, தேவனின் உக்கிரம் முழுமையாக பாவிகளின் தலைகளை தாக்கியது. இரட்சிப்பை மறுத்து, கண்டனங்களை புறக்கணித்திருந்தவர்களை மறைக்க யாரும் இல்லை. இத்தகைய திகில் நிறைந்த நாட்களில் இருந்த பரிசுத்தவான்கள், மத்தியஸ்தர் இல்லாமல், பரிசுத்த தேவனின் நேரிடை பார்வையிலே இருந்தார்கள். இயேசு, மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்த சமயத்தில், அறிக்கையிடப்பட்டிருந்த பாவங்கள் அனைத்தும், பாவத்தின் பிதாவாகிய பிசாசின் மீது சுமத்தப்பட்டது. இப்பாவங்களுக்காக அவன் தண்டிக்கப்பட வேண்டும்.GCt 99.4

    இயேசு தனது ஆசாரிய அங்கிகளை களைந்து, அரசனின் கோலம் பூண்டார். அவருடைய சிரசில் அநேக கிரீடங்கள் வைக்கப்பட்டு, பரம சேணைகள் புடைசூழ, அவர் பரத்திலிருந்து வெளி வந்தார். பூமியின் குடிகளின் மீது வாதைகள் விழுந்துக் கொண்டிருந்தன. சிலர் தேவனை துறந்து, அவரை சபித்தார்கள். வேறு சிலர், பரிசுத்தவான்களிடம் சென்று, தேவனின் நியாயத்தீர்ப்பிலிருந்து எவ்விதம் தப்பித்துக்கொள்ள வேண்டுமென தங்களுக்கு கற்றுத்தரவேண்டும் என்று கேட்டார்கள். அதில் எவ்வித பலனும் இல்லை. பாவிகளுக்காக சிந்தப்பட்ட கடைசி கண்ணீர் துளியும் சிந்தப்பட்டாகிவிட்டது. கிருபையின் இனிய சத்தம், அவர்களை இனிமேல் ஒருக்காலும் வரவேற்கப்போவதில்லை. இறுதி எச்சரிப்பின் செய்தியும் கொடுக்கப்பட்டாகிவிட்டது. பரலோகமே அவர்களுடைய இரட்சிப்பில் வாஞ்சையாக இருந்தபோதும், இவர்கள் தங்களுடைய இரட்சிப்பிலே அக்கறை அற்றவர்களாக இருந்தார்கள். மரணமும் ஜீவனும் அவர்களுக்கு முன் வைக்கப்பட்ட சமயத்தில், ஜீவனை அநேகர் விரும்பினர். ஆகிலும், அதனை பெற்றுக்கொள்வதற்கான எவ்வித முயற்சியையும் அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே, இப்பொழுது அவர்களுடைய பாவங்களை சுத்திகரிப்பதற்கு பரிகாரமாக இரத்தம் ஏதும் இல்லை. அவர்களுக்காக பரிந்து பேசுவதற்கு, இரக்கமான இரட்சகர் இப்பொழுது இல்லை. ‘எல்லாம் முடிந்தது’ என்றுரைக்கப்பட்ட இயேசுவின் வார்த்தைகளோடு பரலோகமே இணைந்துக்கொண்டது. மீட்பின் திட்டம் நிறைவேறியது. ஆகிலும், சிலரே இதனை ஏற்றுக்கொண்டார்கள். கிருபையின் சத்தம் மறைந்தபோது, ஒரு வகையான பயமும், கலக்கமும் பாவிகளை தொற்றிக்கெண்டது. ‘காலம் சென்றுவிட்டதே’ எனும் அங்கலாய்ப்புகள் தெளிவாகக் கேட்டன.GCt 100.1

    தேவ வார்த்தையை மதிக்காதவர்கள் அலைந்துக் கொண்டிருந்தார்கள். மீண்டும் தேவனுடைய வார்த்தையை கேட்பதற்காக, வடக்கிலிருந்து கிழக்கிற்கும், ஒரு சமுத்திரத்திலிருந்து மறு சமுத்திரத்திற்கும் அலைந்தார்கள். ஆனால் கர்த்தருடைய வார்த்தைக்கு கொடிய பஞ்சமாயிற்று. தேவனிடத்திலிருந்து வரக்கூடிய ஒரு வார்த்தைக்காக எதை வேண்டுமானாலும் கொடுக்க ஆயத்தமாக இருந்தார்கள். ஆகிலும், கிடைக்கவில்லை. பரலோக பொக்கிஷங்களை பார்க்கிலும் உலக பொக்கிஷங்களில் அக்கறை கொண்டவர்கள், இரட்சிப்பின் அழைப்பை ஏற்றுக்கொள்ளாமலே இருந்தார்கள். இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல், அவருடைய பரிசுத்தவான்களையும் நிந்தித்தார்கள்.GCt 100.2

    அசுத்தமானோர் அசுத்தமாகவே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.GCt 101.1

    வாதைகளில் பாதிப்படைந்த திரளான துன்மார்க்கர், மூர்க்கங்கொண்டு எழுந்தார்கள். பயம் கலந்த வேதனையின் காட்சியாக அஃது இருந்தது. பெற்றோர்கள் பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்றோர்களையும், சகோதரர்கள் தங்கள் சகோதரிகளையும், கடிந்துக்கொண்டார்கள். எல்லாத் திசைகளில் இருந்தும், “இந்த இக்கட்டுகளுக்கு விலக்கி காக்கக் கூடிய சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதபடி நீ தான் தடுத்தாய்” என்ற குற்றச்சாட்டுகளை கேட்க முடிந்தது. ஜனங்கள் ஊழியக்காரரையும் குற்றப்படுத்தினார்கள். இத்தகைய தேவ ஊழியக்காரர் தப்பித்துக்கொள்ளவில்லை. அவர்களுடைய வேதனைகள், தங்களுடைய ஜனங்களைக் காட்டிலும் பத்து மடங்குகள் அதிகமாக இருந்ததை நான் கண்டேன்.GCt 101.2

    பார்க்க : எசேக்கியல் 9 :2-11
    தானியேல் 7:27
    ஓசியா 6 : 3
    ஆமோஸ் 8 : 11-13
    வெளிப்படுத்தல் 16 : 1-21 ; 17:14