Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மகா சர்ச்சை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம் 37 - பரிசுத்தவான்களின் விடுதலை

    தமது ஜனங்களை விடுவிப்பதற்கு தேவன் நள்ளிரவு சமயத்தை தெரிந்துகொண்டார். துன்மார்க்கர், அவர்களை சுற்றிலும் ஏளனமாக நின்றுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது. திடீரென்று கதிரவன் தோன்றி, பிரகாசித்தது; சந்திரன் நிலையாக நின்றது. துன்மார்க்கர்கள் இக்காட்சியை பிரமிப்புடன் பார்த்தார்கள். அற்புதங்களும் அடையாளங்களும் சடுதியாக நிகழ்ந்தன. இயற்கையின் விதிமுறைகளுக்கு புறம்பாக அனைத்துமே செயல்பட்டன. நீதிமான்களோ இக்காட்சிகளை பக்திநிறைந்த மகிழ்ச்சியில் கண்டார்கள்.GCt 103.2

    நீரோடைகள் ஓட மறுத்தன; கார்மேகங்கள் எழும்பி ஒன்றோடு ஒன்றாக மோதிக்கொண்டன. மகிமை தங்கிய ஒரு இடத்திலிருந்து தேவனின் சத்தம் உண்டாகி, திரளான வெள்ளம்போல் வானத்தையும் பூமியையும் அசைத்தது. ஒரு மகத்தான பூமியதிர்ச்சி உண்டாயிற்று. கல்லறைகள் திறக்கப் பட்டு, மூன்றாம் தூதனின் தூதிற்கேற்ப சத்தியத்தை காத்து மரித்தவர்கள் உயிருடன் எழும்பினார்கள். தேவன் ஏற்படுத்தவிருக்கும் சமாதான உடன்படிக்கையைக் குறித்து இவர்கள் களிகூர்ந்தார்கள்.GCt 103.3

    வானங்கள் திறந்தும், மூடியும், பெரிய குழப்பத்தில் இருந்தன; கன்மலைகள் அதிர்ந்து அனைத்து திசைகளிலும் கற்பாறைகளை வீசியது; கடல் கொந்தளித்து, கற்களை கரையில் வீசியது. இயேசுவின் வருகையின் வேளையைக்குறித்து தேவன் அறிக்கையிட்டபோது, ஒரே ஒரு வாக்கியம் மட்டும் விளம்பினார். அஃது உலகெங்கும் உருண்டோடியபடியால், சற்று நேரம் தாமதித்தார். எகோவாவின் வாயிலிருந்து இடி முழக்கங்களைப் போல உருண்டோடியவார்த்தைகளை, தேவனின் இஸ்ரவேலர்கள் வாஞ்சையோடு கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வாக்கியத்தின் நிறைவிலும், பரிசுத்தவான்கள் உரத்த சத்தத்தில், “மகிமை! அல்லேலூயா!!” என்று கூறினார்கள். மோசே சீனாயிலிருந்து இறங்கியபோது காணப்பட்ட முகப்பிரகாசம் போல், இந்த பரிசுத்தவான்களின் முகங்களிலும் தேவ மகிமை தெரிந்தது. இதனை துன்மார்க்கரால் பார்க்க முடியவில்லை. பரிசுத்த ஒய்வுநாளை கைகொண்டு தேவனை மகிமைபடுத்தியவர்களின் மீது மறையா - ஆசீர்வாதங்கள் உச்சரிக்கப்பட்டபொழுது, மிருகத்தின் மீதும் அதன் சொரூபத்தின் மீதும் ஒரு மகத்தான வெற்றியின் ஆரவாரம் எழும்பிற்று.GCt 103.4

    பக்திமான்கள் வெற்றியுடன் எழும்புவதையும், அவர்களை கட்டியிருந்த சங்கிலிகள் தகர்க்கப்படுவதையும் நான் கண்டேன். துன்மார்க்கத்தின் அதிபதி யாது செய்வதென்றறியாமல் குழப்பத்தில் இருந்தான். தேவ சத்தத்திலிருந்து வெளிவந்த வார்த்தைகள் ஒன்றையும் துன்மார்க்கர்கள் புரிந்துக்கொள்ளவில்லை. மனுஷகுமாரன் வீற்றிருந்த வெள்ளை மேகம் சற்று நேரத்தில் தோன்றிற்று.GCt 104.1

    தொலைவில் தோன்றியபோது, இம்மேகம், மிகச்சிறியதாக இருந்தது. இது மனுஷகுமாரனின் அடையாளம் என்று தூதன் அறிவித்தான். பூமியின் அருகே வந்தபோது, அதன் மகிமையையும், ஜெயங்கொள்ள வருகிற இயேசுவானவரின் கம்பீரத்தையும் காணமுடிந்தது. பரிசுத்த தூதர்களின் பரிவாரத்தோடு அவர் வந்தார். இக்காட்சியின் மகிமையை எம்மொழியும் விவரிக்க முடியாது. மகத்துவமும் மகிமையும் நிறைந்த இம்மேகம் இன்னும் நெருங்கி வந்தபோது, மேன்மையான இயேசுவை காணமுடிந்தது. அவர் இப்பொழுது முட்கிரீடம் தரித்திருக்கவில்லை. மாறாக, மகிமையின் கிரீடத்தை தரித்திருந்தார். அவருடைய ஆடையிலும், தொடையிலும் “இராஜாதி இராஜா” என்றும், “கர்த்தாதி கர்த்தா” என்கிற நாமங்கள் எழுதப்பட்டிருந்தது. அவருடைய கண்கள், நெருப்பு ஜுவாலைப்போலவும், பாதங்கள் பித்தளை படைப்பை போலவும், சத்தம் அநேக வாக்கியங்களின் இசையைப் போலவும் இருந்தன. மத்தியான வேளையில் சூரியன் பிரகாசிப்பது போல அவருடைய முகக்குறியும் பிரகாசமாக இருந்தது. பூமி அவருக்கு முன்பாக நடுங்கிற்று; வானம் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி, விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின. பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத் தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி, “நீங்கள் எங்கள் மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக் கூடும்? ” என்றார்கள்.GCt 104.2

    தேவனின் விசுவாசப் பிள்ளைகளை சற்று நேரத்திற்குமுன் துன்புறுத்தியவர்கள், அவர்கள் மீது தங்கிய தேவ மகிமையை இப்பொழுது கண்டார்கள். அவர்கள் மகிமையடைந்ததை கண்டார்கள். அனைத்து பயங்கரமான சூழ்நிலைகளின் நடுவிலும், “இதோ, இவரே நம்முடைய தேவன், இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்” என்ற ஆரவாரம் கேட்டுக்கொண்டே இருந்தது. மரித்த பரிசுத்தவான்களை எழும்பும்படி கட்டளையிட்ட இயேசுவின் குரலில் இப்பூமியே நடுங்கிற்று! அப்பொழுது, மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்து, “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” என்றார்கள். நித்திரையடையாதவர்களும், இப்பொழுது எழுந்தவர்களுமாய் இணைந்து, ஜெய கீதத்தைப் பாடினார்கள். சுகவீனமடைந்து கல்லறைகளுக்குள் சென்றிருந்த இந்த சரீரங்கள், இப்பொழுது, அழியாத ஆரோக்கியத்துடன் எழும்பி வந்தன. உயிருடன் இருந்தவர்கள் ஒரு இமைப்பொழுதிலே மறுரூபமாக்கப்பட்டு மரணத்திலிருந்து எழும்பியவர்களுடன் இணைந்து, வானத்திலே தேவனை சந்தித்தார்கள். மரணத்தினிமித்தமாக பிரிக்கப்பட்ட நண்பர்கள், பிரியா-உறவோடு இப்பொழுது இணைக்கப்பட்டார்கள்.GCt 104.3

    ஒரு மேக இரதம் ஒன்று வந்தது. இம்மேகரதத்தின் இருபுறங்களிலும் சிறகுகள் இருந்தன. இம்மேகரதம் உயரே எழும்பியபோது, சிறகுகளும் சக்கரங்களும் இணைந்து, “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என ஆரவாரித்தன. தேவதூதர்களும் அவரை, “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” எனப் போற்றினார்கள். இதன் பின்பு, அந்த மேகரதம் பரிசுத்த நகரத்தை நோக்கி நகர்ந்தது. பரிசுத்த நகருக்குள் நுழையுமுன், பரிசுத்தவான்கள் அனைவரும் ஒரு பூரண சதுரவடிவில் நின்றார்கள். அதன் நடுவே இயேசு நின்றார். அவருடைய தலையும், புயமும் பரிசுத்தவான்களைவிடவும் தேவதூதர்களை விடவும் உயர்ந்து இருந்தது. அவருடைய கம்பீரத்தோற்றமும், அன்பான முகத்தோற்றமும், அக்கூட்டத்தினுள் நின்ற யாவருக்கும் தெளிவாக தெரிந்தது.GCt 105.1

    பார்க்கவும் : II இராஜாக்கள் 2 : 11
    ஏசாயா 25 : 9
    I கொரிந்தியர் 15 : 51-55
    I தெசலோனிக்கேயர் 4 : 13 - 17
    வெளிப்படுத்தல் 1 : 13-16, 6 : 14-17; 19:16
    GCt 105.2