Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மகா சர்ச்சை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம் 5 - கிறிஸ்துவின் ஊழியம்

    சோதனைகளை முடித்தபின்பு, சாத்தான், சிறிது காலம் இயேசுவை விட்டுச் சென்றான். அவ்வேளையில், தூதர்கள் அவருக்கு ஆகாரமளித்து ஊக்குவித்தார்கள். பிதாவின் ஆசீர்வாதம் அவரில் தங்கிற்று. பயங்கரமான சோதனைகளினால் வெல்ல முடியாத சாத்தான், இயேசுவின் ஊழிய நாட்களுக்காக காத்திருந்தான். இயேசுவை ஏற்றுக்கொள்ளாத, அவரை அழிக்க வகை தேடுகின்ற மக்களை தூண்டிவிட்டு தனது இலட்சியத்தை நிறைவேற்றிவிடலாம் என சாத்தான் இன்னமும் நம்பினான். தேவகுமாரனை மேற்கொள்ள முடியாத ஆதங்கத்தில் சாத்தானும் அவனுடைய தூதர்களும் கூடி ஆலோசித்தார்கள். அதிக தந்திர யுக்திகளை கையாண்டு, உலக இரட்சகரைக் குறித்த விசுவாசத்தை அழித்து, மக்களின் அவநம்பிக்கையை தூண்டி, இயேசுவின் ஊழியத்தை சோர்வடையச் செய்வேண்டுமென, அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. யூதர்கள், தங்களது சடங்குகளிலும், பலி ஆராதனைகளிலும் எவ்வளவு துல்லியமாக இருந்து வந்தாலும் தீர்க்கத்தரிசனங்களினாலும், அவைகளின் நிறைவேறுதல் இவ்வுலகில் தோன்ற இருக்கும் மகா அரசனின் மூலமாகத்தான் இருக்கும் என்கிற செய்தியினாலும், அவர்களை மறைத்துவிட முடியும் என்பதை சாத்தான் உணர்ந்திருந்தான்.GCt 11.1

    இயேசுவின் ஊழிய நாட்களிலே, மனிதரின் அவிசுவாசம், வெறுப்பு, மற்றும் அலட்சியத்தை சாத்தானும் அவனுடைய துhதர்களும் சேர்ந்து உற்சாகப்படுத்தி வந்ததை நான் கண்டேன். மனிதரின் பாவங்களை இயேசு, சுற்றி காட்டியபோது, பலருக்கு மிகுந்த கோபம் எழும்பிற்று. இதனை பயன்படுத்தி, இயேசுவின் ஜீவனை அழிக்க புறப்படும்படி சாத்தான் அவர்களை ஏவினான். ஒருமுறை, இயேசுவை கல்லெறிய பார்த்தார்கள். தேவ துhதர்கள் அவரைக்காத்து, மூர்க்கவெறி பிடித்த கும்பலில் இருந்து. பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்சென்றார்கள். மீண்டும் சத்தியமானது அவரது பரிசுத்த உதடுகளிலிருந்து ஒழுகியபோது, மலையின் மேலிருந்து கிழே தள்ளிவிட எத்தனித்தார்கள். அப்பொழுது, அவர்களிடையே எழுந்த சர்ச்சையின்போது, தேவதுhதர்கள் இயேசுவை அக்கூட்டத்தின் விழியாகவே அவரை பாதுகாப்பன ஒரு இடத்திற்கு அழைத்துச்சென்றார்கள்.GCt 11.2

    இம்மாபெறும் மீட்பின் திட்டம் தோற்றுவிடும் என சாத்தான் இன்னமும் விரும்பினான். தனக்கு உண்டான பலம் எல்லாவற்றையும் உபயோகித்து, மனிதரின் இதயங்களை கடினபடுத்தி, அவர்களின் உணர்வுகளை கசப்பாக்கினான் துன்பங்களின். இயேசுவை தேவ குமாரன் என்று ஏற்றுக்கொள்பவர் மிக சொற்பமாய் இருக்க வேண்டும் என்றும், அதனை பார்க்கும் இயேசு, இச்சொற்ப பேருக்காக இத்தனை திரளான பாடுகளும், உயிர் தியாகமும் அவசியம் தானா என எண்ணி, இத்திட்டத்தை அவர் கைவிடவேண்டும் என்றும் சாத்தான் விரும்பினான். ஆகிலும், இருவர் மாத்திரம் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, பாவத்திலிருந்து தங்கள் ஆத்துமாக்களை தப்புவிக்க வாஞ்சையாய் இருப்பார்களாகின், அவ்விருவருக்காக இயேசு திட்டத்தை நிறைவேற்ற வாஞ்சையாக இருந்தார் என்பதை நான் கண்டேன்.GCt 12.1

    துன்பங்களின் அதிகாரியாகிய சாத்தானின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பதின் மூலம் இயேசு தனது ஊழியத்தை தொடங்கினார். பிசாசின் பொல்லாத வல்லமையினால் தவித்தவர்களை சுகபடுத்தினார். நோய்களை குணபடுத்தி, ஊனர்கள் துள்ளி குதித்து தேவனை மகிமைபடுத்தும் அளவிற்கு சுகத்தை அளித்தார். குருடர்களுக்கு பார்வையை தந்து, அநேகாண்டாய் பாடு அனுபவித்தவர்களை விடுவித்தார். பெலவீனமானவர்களை தனது இரக்கம் நிறைந்த வார்த்தை களினால் பெலபடுத்தினார். மரித்தோரை எழுப்பி, அவர்கள் தேவனை துதிக்கச் செய்தார் அவரை விசுவாசித்த அனைவருக்கும் தனது வல்லமையை காண்பித்தார்.GCt 12.2

    கிறிஸ்துவின் வாழ்க்கை, தயை நிறைந்ததாகவும், இரக்கம் நிறைந்ததாயும், அன்பு கொண்டதாயும் இருந்தது. அவனிடத்தில் வருவோரின் பாடுகளை தீர்க்க எப்பொழுதும் வாஞ்சையுள்ள வராயிருந்தார். திரளான ஜனங்கள் அவருடைய வல்லமையை உணர்ந்தார்கள். ஆகிலும், தாழ்மையை தரித்த போதகரை ஏற்றுக் கொள்ள வெட்கப்பட்டார்கள். ஆட்சியாளர்கள் இயேசுவை விசுவாசியாததனால் , அவோரோடு சேர்ந்து பாடனுபவிக்க எவரும் முன் வரவில்லை. அவர் துக்கம் நிறைந்தவரும், பாடுகளை சகிப்பவருமாயிருந்தார். வெகு சிலரே இத்தகைய கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள். பலர், இவ்வுலகம் தரக்கூடிய பெருமையை அனுபவிக்க துடித்தார்கள், அநேகர் தேவ குமாரனை பின்பற்றினார்கள், அவருடைய போதனைகளை கவனித்தார்கள், சிறந்த பொருளடக்கத்தை அவரது துhதர்கள் பெற்றிருந்தாலும், மிக எளிய மனிதனும் புரிந்து கெள்ளக்கூடிய அளவிலேயே அது இருந்தது.GCt 12.3

    சாத்தானும் அவனுடைய சகாக்களும் மிக சுறுசுறுப்பாக இயங்கினார்கள், யூதர்களின் உள்ளங்களை இருளடையச் செய்தார்கள். இயேசுவின் உயிரை பறிக்கும்படி, மதத் தலைவர்களை, சாத்தான், எழுப்பிவிட்டான். இயேசுவை தங்களிடம் கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் இயேசு இருந்த இடத்திற்கு வந்தபோது, பிரமித்தார்கள். அவர் பெலவீனர்களோடு அன்பாகவும், இளகிய மனதோடும் பேசினார். அஃதோடு, இயேசு பிசாசின் பிடியிலிருந்து சிலரை அதிகாரத்தோடு காப்பாற்றியதையும் அவர்கள் கண்டார்கள். அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட ஞான வசனங்களை கேட்ட அதிகாரிகள், ஈர்க்கப்பட்டார்கள். அவர்கள் கைகளை அவர் மீது வைக்கக்கூடாமல் போனது. அவர்கள் திரும்பி வந்தபோது, இயேசு அவர்களோடு வரவில்லை. ஆசிரியரும், மூப்பர்களும் இதனை வினவியபோது, தாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்து சொன்னார்கள். இம்மனிதனைப் போல எம்மனிதனும் பேசியதில்லை” என சாட்சி அளித்தார்கள்.GCt 13.1

    அநேகர் இயேசுவை நம்பினார்கள். ஆனால் வெளியரங்கமாய் அறிவிக்க பயந்தார்கள். தேவனுக்கு பய்ப்படுவதைக் காட்டிலும் அதிகமாக மனிதனின் நிபந்தனைகளுக்கு மிகவும் பயந்தார்கள்.GCt 13.2

    இதுவரை சாத்தானின் வெறுப்பும், தந்திரங்களும், மீட்பின் திட்டத்தை உடைத்தெறிய முடியாமல் தவித்தது. இயேசு இவ்வுலகிற்கு வந்ததன் பிரதான நோக்கம் நிறைவேறவேண்டிய காலம் நெருங்கிற்று. சாத்தான் தனது துhதர்களுடன் கலந்தாலோசித்தான் . கிறிஸ்துவின் சொந்த ஜனங்களையே அவருக்கு எதிராக எழுப்பி, அவருடைய இரத்தத்தின் மீது வெறியடையச் செய்து. அவர் மீது கொடூரத்தையும், அவமானத்தையும் சுமத்தும்படி அவர்களை துhண்டிவிட்டான். இயேசு இத்தகைய அவமானத்தை ஏற்றுக்கொள்ளாமல், தமது தாழ்மையையும், சாந்தத்தையும் புறக்கணித்து விடுவார் என்று சாத்தான் யோசித்துக் கொண்டிருந்தான்.GCt 13.3

    இவ்விதமாக, சாத்தான் தனது திட்டங்களை வகுத்து கொண்டிருந்தபோது, இயேசு தனது சீடர்களிடம் தான் கடந்து செல்ல வேண்டிய பாடுகளை குறித்து விவரித்தார். அவர் மரிக்க வேண்டும் என்றும், மூன்றாம் நாளிலே அவர் உயிர்த்தெழுவார் என்றும் விளக்கினார். ஆனால் சீடர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்களால் அதனை ஜீரனித்துக் கொள்ள முடியாமல் போயிற்று.GCt 13.4

    பார்க்க : லுhக்கா 4:29; யோவான் 7: 45-48; 8: 59