Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நியாயமற்ற விமர்சனம் ஆத்துமாக்களின் இழப்பை ஏற்படுத்தும்

    ஒரு காலத்தில் சத்தியத்தில் களிகூர்ந்திருந்த முழு குடும்பங்கள், தாங்கள் நேசித்திருந்தவர்கள்மீதும் யாரிடம் இனிமையான ஆலோசனையைப் பெற்றிருந்தார்களோ அவர்கள்மீது கொண்டு வரப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளையும் தூஷணங்களையும் குறித்துக் கேள்விப்படும்போது விசுவாசத்தை இழந்துவிடுவார்கள். அப்படிப்பட்ட காரியங்கள் நமது காலத்திலும் நடந்திருக்கின்றன; இனியும் அப்படியே தொடர்ந்து நடக்கும். களைகள் விதைக்கப்பட்டத்தக்கதாக, அவர்கள் தங்கள் இருதயங்களைத் திறந்திருக்கின்றனர். அக்களைகள், கோதுமைப் பயிருக்கு மத்தியில் வளர்ந்து பலங்கொண்டப்படியால், கோதுமைப் பயிர் மிகவும் குறைந்துபோனது. இவ்வாறாக விலைமதிப்புள்ள சத்தியம் அவர்கள்மீதான வல்லமையை இழந்துபோனது. — TM 411 (1898).கச 128.1