Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சபை விழுந்துபோவதுபோலத் தோன்றலாம்

    தேவனிடத்திலிருந்து உண்டாகின்ற அசைக்கப்படுதல் திரள்கூட்டமான மக்களைக் காய்ந்த இலைகளைப்போல பறக்கடிக்கும். — 4T 89 (1876).கச 130.5

    மிகச்சிறந்த கோதுமைமணி மட்டுமே உள்ள தளங்கள் என்று நாம் காணக்கூடிய இடங்களிலிருந்துகூட, ஒரு மேகம் போன்ற திரளான பதர் காற்றால் பறக்கடிக்கப்படும். — 5T 81 (1882).கச 130.6

    வெகு சீக்கிரத்தில் தேவனுடைய ஜனங்கள் கொடிய சோதனைகளால் சோதிக்கப்படுவார்கள். நேர்மையாயும் உண்மையாயும் இப்பொழுது தோற்றமளிப்பவர்களில் பெரும்பகுதியினர், தாங்கள் தரம் தாழ்ந்த உலோகமாக இருப்பதை நிரூபிப்பார்கள்...கச 130.7

    கிறிஸ்துவினுடைய மார்க்கம் மிகுந்த வெறுப்புணர்ச்சியில் வைக்கப்படும்போதும், அவருடைய பிரமாணம் மிகவும் அலட்சியப்படுத்தப்படும்போதும், நமது வைராக்கியம் பிரமாணம் மிகவும் அலட்சியப்படுத்தப்படும்போதும், நமது வைராக்கியம் எழுச்சிமிக்க தாயும் நமது தைரியமும் உறுதியும் ஒருபோதும் பின்வாங்காததாயும் இருக்கவேண்டும். பெரும்பான்மையோர் நம்மைக் கைவிடும்போது சத்தியத்திற்கும் நீதிக்கும் பக்கபலமாக நிற்பதும், வெகு குறைவானவர்களே சாதனையாளர்களாக இருக்கும்போது கர்த்தருடைய யுத்தங்களைச் செய்வதுமே, நம்முடைய பரீட்சையாக இருக்கும். இப்படிப்பட்ட நேரங்களிலே, மற்றவர்களுடைய அவிந்துபோன குளிர்ந்த நிலையிலிருந்து அனலையும், அவர்களது கோழைத்தனத்திலிருந்து தைரியத்தையும், அவர்களது நம்பிக்கை துரோகத்திலிருந்து உண்மையாயிருப்பதையும் நாம் சேகரித்துக்கொள்ளவேண்டும். — 5T 136 (1882).கச 130.8

    சபை விழுவதுபோல் தோன்றலாம்; ஆனால் அது விழாது. சீயோனிலிருக்கின்ற பாவிகள் பதர்போல பறக்கடிக்கப்பட்டு, விலையேறப்பெற்ற கோதுமை மணிகளிலிருந்து பதர் பிரிக்கப்படும் வரையிகச 130.9

    லும் — அது நிலைநிற்கும். இது கடுமையான சோதனையாகும். இருந்தபோதும் இது நடைபெறவேண்டிய ஒன்றாகும். — 2SM 380 (1886).கச 131.1

    புயல் நெருங்கிவந்துகொண்டிருக்கும்போது, மூன்றாம் தூதனுடைய தூதை பெயரளவில் விசுவாசித்து, அந்த சத்தியத்திற்குக் கீழ்ப்படிவதின் மூலமாகத் தங்ளைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளாத ஒரு பெரும் வகுப்பினர், தங்களது நிலையிலிருந்து விலகி, எதிரியின் அணிவரிசையில் இணைந்துகொள்வார்கள். — GC 608 (1911).கச 131.2