Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    B. ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கு அடுத்ததான தானிப்பட்ட அப்பியாசம்.

    முன்மாரி மனமாற்றத்தை உண்டுபண்ணும்: பின்மாரி கிறிஸ்துவைப் போன்ற ஒரு குணத்தை முதிர்ச்சியடையச் செய்யும்!கச 135.7

    நமது கிறிஸ்தவ வாழ்க்கையை துவங்குவதற்கு வல்லமை அளித்து முதலாவது துணைபுரிந்ததான முன்மாரியை, நமது அனுபவத்தின் எந்தக் காலகட்டத்திலும் தள்ளிவிடக்கூடாது. முன்மாரியின் கீழ் நாம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்கள் கடைசிவரையிலும் நமக்கு அவசியமாயிருக்கின்றது… பரிசுத்த ஆவியானவருக்காக நாம் தேவனைத் தேடும் போது, அது நம்மில் சாந்த குணத்தையும், தாழ்மையான மனதையும், பூரணப்படுத்தும் பின்மாரிக்காக விழிப்போடு தேவனை சார்ந்திருப்பதையும் நம்மில் உண்டுபண்ணும். — TM 507, 509 (1897).கச 135.8

    பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு ஆத்துமாவிலும் தங்கியிருக்க வாஞ்சிக்கின்றார். அவரை ஒரு மதிப்புள்ள விருந்தாளியாக வரவேற்று, பெற்றுக்கொள்பவர்கள் கிறிஸ்துவில் முழுமையடையவர். நம்மில் துவங்கப்பட்ட நற்கிரியை நிறைவடையும். தூய்மையற்ற சிந்தனைகள், வக்கிரமான மன உணர்ச்சிகள், கலகச்செயல்கள் போன்றவை இருந்த இடங்களை, பரிசுத்த சிந்தனைகள், பரலோக வாஞ்சைகள் மற்றும் கிறிஸ்துவைப் போன்ற செயல்கள் எடுத்துக்கொள்ளும். — CH 561 (1896).கச 136.1

    தேவனுடைய ஆவியானவரை நாம் ஓரளவு பெற்றிருக்கலாம். ஆனால் ஜெபத்தினாலும், விசுவாசத்தினாலும் தொடர்ந்து அவரை அதிகமாகத் தேடவேண்டும். அது நம்முடைய முயற்சிகளை நிறுத்திவிடுவதற்கு ஒருபோதும் இடமளிக்காது. நாம் முன்னேற்றம் அடையாதிருப்போமானால், முன்மாரி மற்றும் பின்மாரி ஆகிய இரண்டையும் பெற்றுக்கொள்வதற்கான ஒரு மனப்பான்மையில் நம்மை நாமே வைத்துக்கொள்ளாதிருப்போமானால், நம் ஆத்துமாக்களை நாம் இழந்துவிடுவோம், அதற்கான பொறுப்பு நம் வாசற்படியிலேயே கிடக்கும்…கச 136.2

    முகாம் கூட்டங்களில் கூடுகின்றது போன்ற சபைக் கூட்டங்கள், சபையாக வீடுகளில் கூடுகின்ற கூட்டங்களை, ஆத்துமாக்குகளுக்குத் தனிப்பட்ட முறையில் ஊழியம் செய்யக்கூடிய வாய்ப்புகள் ஆகியவை அனைத்தும் முன்மாரி மற்றும் பின்மாரி கொடுக்கப்படுவதற்கு தேவனால் நியமிக்கப்பட்ட சந்தர்ப்பங்களாகும். — TM 508 (1897).கச 136.3

    தேவ ஆவியானவருக்கு வழி ஆயத்தம் செய்யப்படும்போது ஆசீர்வாதம் வந்து சேரும், பூமியின்மீது மழை பொழியாதபடிக்கு வானத்தின் பலகணிகளைச் சாத்தானால் அடைக்க முடியுமென்றால்கூட, தேவனுடைய ஜனங்களின்மீது ஆசீர்வாதமான ஒரு பொழிவு இறங்கி வருவதை அவனால் ஒருபோதும் தடைசெய்ய முடியாது. — 1SM 124 (1887).கச 136.4