Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அனைத்துச் சண்டைகளையும் கருத்துவேறுபாடுகளையும் நாம் ஒதுக்கித்தள்ளவேண்டும்

    வேலையாட்கள் தங்களது சொந்த ஆத்துமாக்களில் கிறிஸ்துவை நிலைத்திருக்கச் செய்யும்போதும், அனைத்து சுயநலமும் மரித்துபோகும் போதும், மிக உயர்ந்த அதிகாரத்திற்காக போராட்டமோ போட்டி மனப்பான்மையோ இல்லாமல் இருக்கும்போதும், ஒருமனப்பாடு தொடர்ந்து இருக்கும்போதும், ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு காணப்பட்டு உணரப்படுவதற்காக அவர்கள் தங்களையே பரிசுத்தம் செய்துகொள்ளும்போதும் மாத்திரமே, தேவனுடைய வாக்குத்தத்தத்தின் ஒரு எழுத்தும் ஒரு எழுத்தின் உறுப்பும் ஒருபோதும் ஒழிந்துபோகாது என்பது எப்படி நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாய் பரிசுத்த ஆவியானவரின் கிருபையின் பொழிவு அவர்கள் மீது பொழியும். ஆனால் ஊழியர்கள் தங்களது சொந்த மேம்பட்ட நிலையைக் காட்டிக்கொள்ளும் படியாக மற்றவர்களின் வேலையைக் குறைத்து மதிப்பிடும்போது, தங்களது சொந்தவேலை பெற்றிருக்கவேண்டிய முத்திரையைப் பெற்றிருக்கவில்லை என்பதை நிரூபிப்பார்கள். தேவன் அவர்களை ஆசீர்வதிக்க முடியாது. — 1SM 175 (1896).கச 138.1

    கர்த்தருடைய மகா நாளிலே கிறிஸ்துவை நமது உயர்ந்த கோட்டையாக, நமது அடைக்கலமாகக்கொண்டு நாம் நிற்கவேண்டுமானால், எல்லாப் பொறாமையையும், சுயத்தை உயர்த்திக் காண்பிக்கத்தூண்டுகின்ற எல்லாப் போட்டிகளையும் நாம் உதறித்தள்ளவேண்டும். பரிசுத்தமில்லாத இந்தக் காரியங்களின் வேர்கள் மீண்டும் நமது வாழ்க்கையில் முளைத்துவிடாதபடிக்கு, முழுவதுமாய் அவைகளை நாம் அழிக்கவேண்டும். நாம் முழுவதுமாக நம்மைக் கர்த்தரின் பக்கமாக நிறுத்தவேண்டும். — TDG 258 (1903).கச 138.2

    கிறிஸ்தவர்கள் தங்களிடத்தில் காணப்படுகின்ற எல்லா வேறுபாட்டையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, தொலைந்துபோன ஆத்துமாக்களை இரட்சிப்பதற்காக, தேவனுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கட்டும். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆசீர்வாதத்தை விசுவாசத்தோடு கேட்கக்கடவர்கள், அப்போது அது அவர்களுக்கு வரும். — 8T 21 (1904).கச 138.3