Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    14. உரத்த சத்தம்

    எல்லா சபைகளிலும் தேவன் முத்துக்களை வைத்திருக்கின்றார்

    எல்லா சபைகளிலும் தேவனுக்காக முத்துக்கள் இருக்கின்றது. ஆகவே, வெளிப்படையான மார்க்க உலகத்தைக்குறித்து விரிவான கண்டனத்தைக் கூறுவதென்பது நமக்குரியதல்ல. — 4 BC 1184 (1893). கச 143.1

    எல்லா சபைகளிலும் கர்த்தருக்காக அவரது பிரதிநிதிகள் இருக்கின்றனர். இத்தகைய நபர்கள், இருதயத்திலும் மனதிலும் உணர்த்துதலை உண்டாக்குகிற சந்தர்ப்பங்களின்கீழ் கடைசி நாட்களுக்குரிய, விசேஷித்த பரிசோதிக்கும் சத்தியங்களைப் பெறும் வாய்ப்பை பெற்றிருக்கவில்லை. ஆகையால் வெளிச்சத்தை அசட்டை செய்யாத இவர்கள், தேவனோடுள்ள தங்கள் இணைப்பிலிருந்து பிரிந்துபோய்விடவில்லை. - 6T 70, 71 (1900).கச 143.2

    தங்கள்மீது பிரகாசித்த எல்லா வெளிச்சத்திலும் நடக்கின்ற, மனச் சாட்சிக்கு மிகவும் கட்டுப்பட்டிருக்கின்ற கிரிஸ்தவர்கள் அநேகர், கத்தோலிக்க மார்க்கத்தார் மத்தியிலும் இருக்கின்றார்கள். தேவன் அவர்கள் சார்பாகவும் கிரியை செய்வார். - 9T 243 (1909).கச 143.3

    வெளிப்படுத்தல் 18-ம் அதிகாரத்தில், பாபிலோனை விட்டு வெளியே வரும்படி தேவனுடைய மக்கள் அழைக்கப்படுகின்றனர். இந்த வேதவாக்கியத்தின்படி, அநேக தேவனுடைய மக்கள் கண்டிப்பாக இன்னமும் பாபிலோனிலே இருக்கத்தான் வேண்டும். கிறிஸ்துவின் பின்னடியார்களில் பெரும்பகுதியினர் தற்போது எந்த மார்க்க அமைப்புகளில் காணப்படுகின்றனர்? சந்தேகமின்றி, அவர்கள் புராட்டஸ்டண்டு விசுவாசத்தை அறிக்கை பண்ணுகின்ற பல்வேறுப்பட்ட சபைகளில்தான் காணப்படுகின்றனர். — GC 383 (1911).கச 143.4

    ஆவிக்குரிய இருளும் தேவனை விட்டுத் தூரப்பட்டிருக்கும் நிலையும், பாபிலோனிய அமைப்பை உருவாக்கும் திருச்சபைகளில் இருந்த போதிலும்கூட, கிறிஸ்துவின் உண்மையான பின்னடியார்களில் பெருந்திரளானவர்கள் அவர்களது ஐக்கியத்தில் இன்னும் காணப்படுகின்றனர். — GC 390 (1911).கச 143.5