Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய கடைசி செய்தியின் மையம்

    விசுவாசத்தினால் நீதிமானாகுதலைப்பற்றின தூதுதான் மூன்றாம் தூதனின் தூதாக இருக்குமா? என்று விசாரித்துக் கேட்டு அநேகர் எனக்கு எழுதியிருக்கின்றனர். அதற்கு நான், “உண்மையிலேயே இது மூன்றாம் தூதனின் தூதாக இருக்கின்றது” என்று பதில் எழுதியிருக்கின்றேன். - 1SM 372 (1890).கச 145.2

    கர்த்தர் தமது மிகுந்த இரக்கத்தினாலே, மூப்பர்கள் (E.J.) வேகனர் மூலமாகவும், (A.T.) ஜோன்ஸ் மூலமாகவும் மிகவும் விலயேறப்பெற்ற ஒரு தூதைத் தமது ஜனங்களுக்கு அனுப்பினார். இத்தூது முழு உலகத்தினுடைய பாவத்திற்காக பலியான உயர்த்தப்பட்ட இரட்சகரை, உலகத்திற்கு முன்பாக மிகவும் சிறப்பு வாய்ந்த விதத்தில் கொண்டு வரப்பட வேண்டியதாயிருந்தது. அது பிணையாளியானவரிடத்தில் (கிறிஸ்துவில்) வைக்கும் விசுவாத்தினாலே நீதிமானாகுதல் என்பதை அளித்தது; அது, தேவனுடைய கற்பனைகள் அனைத்திற்கும் கீழ்ப்படிவதால் வெளிப்படும் கிறிஸ்துவின் நீதியைப் பெற்றுக்கொள்ளும் படியாக மக்களை அழைத்தது.கச 145.3

    அநேகர் இயேசுவின்மீதுள்ள கவனத்தை இழந்திருந்தனர். அவர்கள் தங்களது கண்களை அவரது தெய்வீகத் தன்மைக்கும், அவரது புண்ணியங்களுக்கும், மனிதக் குடும்பத்துக்கான அவரது மாறாத அன்புக்கும் நேராகத் திருப்பவேண்டிய அவசியத்தில் இருந்தனர். மனிதருக்கு வளமான ஈவுகளைஅவர் பகிர்ந்தளிக்கும்படியாகவும், உதவியற்ற மனித ஏதுகரத்திற்கு தம்முடைய சொந்த நீதி என்னும் விலைமதிப்பற்ற ஈவைக் கொடுக்கும்படியாகவும், சகல அதிகாரமும் அவருடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் தூதுதான் உலகத்திற்குக் கொடுக்கப்படவேண்டிய, தேவன் கட்டளையிட்டிருந்த தூதாக இருக்கின்றது. உரத்த சத்தத்துடன் அறிவிக்கப்படவேண்டியதும், பெருமளவிலான தேவ ஆவியினுடைய பொழிவில் கலந்துகொள்ளப்பட வேண்டியதுமான தூதே, இந்த மூன்றாம் தூதனின் தூதாக இருக்கின்றது. - TM 91, 92 (1895).கச 145.4

    கிறிஸ்துவின் நீதியைப்பற்றின இத்தூது, கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தத்தக்கதாக பூமியின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரைக்கும் முழங்கப்படவேண்டும். இது மூன்றாம் தூதனுடைய வேலையை முடிவுக்குக் கொண்டுவருகின்ற தேவனுடைய மகிமையாயிருக்கின்றது. - 6T 19 (1900).கச 145.5

    உலகத்திற்குக் கொடுக்கப்படவேண்டிய கிருபையின் கடைசி தூது என்பது ஆண்டவருடைய அன்பின் குணத்தை வெளிப்படுத்துவதே ஆகும்.தேவனுடைய பிள்ளைகள் அவரது மகிமையை வெளிக்காட்ட வேண்டும்.தேவனுடைய கிருபை அவைகளுக்கு என்ன செய்திருக்கின்றது என்பதை.அவர்கள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் குணத்திலும் வெளிக்காட்டவேண்டும். - COL 415, 416 (1900).கச 146.1