Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மிகுந்த வல்லமையுடன் தூது செல்லும்

    மூன்றாம் தூதனின் தூது ஒரு உரத்த சத்தமாக எழும்பும்போதும், மிகுந்த வல்லமையும் மகிமையும் அந்த முடிவான வேலையைக் கவனத்துடன் செய்து முடிக்கும்போது, தேவனுடைய உண்மையான ஜனங்கள் அந்த மகிமையில் பங்கெடுப்பார்கள். அவர்கள் இக்கட்டுக் காலத்தின் வழியாகக் கடந்துசெல்வதற்கு, பின்மாரி அவர்களை மீண்டும் உயிர்ப்பித்து பலப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. - 7BC 984 (1862).கச 146.2

    முடிவு நெருங்க நெருங்க தேவனுடைய ஊழியக்காரர்களின் சாட்சிகள், மிகுந்த வல்லமையானதாகவும் அதிகத் தீர்மானமிக்கதாகவும் மாறியிருக்கும். — 3SM 407 (1892).கச 146.3

    இந்தத் தூது (வெளி. 14:9-12), அதற்கு முந்தைய இரு தூதுகளையும் தழுவியே வரும். அது ஒரு உரத்த சத்தத்துடன், அதாவது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன் கொடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. - 7BC 980 (1900).கச 146.4

    மூன்றாம் தூதனின் தூது ஒரு உரத்த சுத்தமாகப் பெருக்கமடையும்போது, மாபெரும் வல்லமையும் மிகுந்த மகிமையும் அதன் அறிவிப்புடன் சேர்ந்துகொள்ளும். தேவனுடைய ஜனங்களின் முகங்கள் பரலோகத்தின் வெளிச்சத்தால் பிரகாசிக்கும். - 7T 17 (1902)கச 146.5

    பூமியின் கடைசி மாபெரும் உபத்திரவத்தின் ஆழமான நிழல்களின் மத்தியிலும், தேவனுடைய வெளிச்சம் மிகவும் அதிகமதிகமாகப் பிரகாசிக்கும். அப்போது விசுவாசம் மற்றும் நம்பிக்கையின் பாடல், தெளிவாகவும் உன்னதமான இசையிலும் கேட்கப்படும். — Ed 166 (1903).கச 146.6

    வெளி. 18-ல் முன்னறிவிக்கப்பட்டபடி, மிருகத்திற்கும் அதன் சொரூபத்திற்கும் எதிராக, மூன்றாம் தூதனின் தூது கடைசி எச்சரிப்பைக் கொடுக்க இருக்கின்ற ஜனங்களால் மிகுந்த வல்லமையுடன் அறிவிக்கப்படவேண்டும். — 8T 118 (1904).கச 146.7