Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பெந்தெகொஸ்தே நாளைப்போல

    பெந்தெகொஸ்தே நாளின் சம்பவங்கள் அன்றைக்கு நடந்ததைக் காட்டிலும் இன்னும் அதிக வல்லமையோடு மீண்டும் எப்போது நடக்கும் என்று, அந்த நேரத்தைக் காணும்படியாக ஒரு ஊக்கமான ஏக்கத்துடன் நான் முன்னோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். “பின்பு வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று” (வெளி. 18:1) என்று யோவான் கூறுகின்றார். அப்போது பெந்தெகொஸ்தே காலத்தில் நடந்ததுபோல, ஒவ்வொருவரும் அவரவர் பாஷையிலே சத்தியம் பேசப்படக் கேட்பார்கள். — 6BC 1055 (1886).கச 146.10

    தேவனுடைய ஜனங்கள் மத்தியிலே, ஒரு மாபெரும் சீர்திருத்த இயக்கத்தைச் சுட்டிக்காட்டின காட்சிகள் இராத்தரிசனங்களிலே என் முன்பாகக் கடந்துசென்றது. அநேகர் தேவனைத் துதித்தார்கள். வியாதியஸ்தர்கள் குணமாக்கப்பட்டார்கள். இன்னும் அநேக அற்புதங்களும் செய்யப்பட்டன. மாபெரும் பெந்தெகொஸ்தே நாளுக்கு முன்னான நாட்களில் வெளிப்பட்ட, அதே பரிந்துபேசுகின்ற ஒரு சிந்தை (அவர்கள் மத்தியில்) காணப்பட்டது. - 9T 126 (1909).கச 147.1

    சுவிசேஷத்தின் மாபெரும் பணி, அதின் ஆரம்பக் கட்டத்தில் காணப்பட்ட தேவனுடைய வல்லமையைவிட, அது முடிவுபெறும் வேளையில் எத்தகைய குறைந்த வல்லமையோடும் இருக்காது. சுவிசேஷம் ஆரம்பமான காலகட்டத்திலே பெய்த முன்மாரியின் பெருமழையின்போது தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுதலை அடைந்தது போல, சுவிஷேம் பிரசங்கிக்கப்படுதலின் முடிவுவேளை வரும்பொழுது பெய்யும் பின்மாரியின் பெருமழையிலே, மீண்டும் தீர்க்கதரிசனங்கள் நிறை வேறுதலை அடையும்...கச 147.2

    தேவனுடைய ஊழியக்காரர்கள், ஒளியேற்றப்பெற்ற பிரகாசிக்கின்ற பரிசுத்த ஒப்படைப்புடனும், பிரகாசிக்கப்பட்ட முகங்களுடனும், பரலோகத்திலிருந்து வருகின்ற தூதை அளிப்பதற்குத் துரிதமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வார்கள். உலகம் முழுவதிலுமாக ஆயிரக்கணக்கான குரல்கள்மூலம் எச்சரிப்பு கொடுக்கப்படும்; அற்புதங்கள் செய்யப்படும்; வியாதியஸ்தர்கள் குணமாக்கப்படுவர்; அற்புதங்களும் அடையாளங்களும் விசுவாசிகளை பின்தொடரும். — GC 611, 612 (1911).கச 147.3