Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நம்மை ஆச்சரியப்படுத்தும் ஏதுகரங்களை தேவன் உபயோகிப்பார்

    காரியங்களின் பொதுவான ஒழுங்கின்படியில்லாமல், எந்த ஒரு மனிதத் திட்டத்திற்கும் நேர்மாறாக இருக்கக்கூடிய ஒரு வழியிலும், மிக அதிகமான விதத்திலும். கர்த்தர் இந்தக் கடைசி வேலையை செய்வார் என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன். உலகத்திற்குக் கொடுக்கப்படவேண்டிய தூதிலே, மூன்றாம் தூதனுடன் இணைந்து கொள்ளும் தூதனுடைய வழிநடத்துதலின்கீழாக வேலை முன்னேறிச் செல்லும்போது, எப்பொழுதுமே அந்த வேலையைக் கட்டுப்படுத்த விரும்புகிறவர்களும், தேவனுடைய வேலையிலே என்னவிதமான நிலைமாற்றங்கள் செய்யப்படலாம் என்று கட்டளையிடுவதற்கு விரும்புகிறவர்கள்கூட, நம் மத்தியிலே அங்கு இருப்பார்கள். தேவன் தமது சொந்தக் கரங்களிலே கடிவாளங்களை எடுத்துக்கொள்கிறார் என்பது விளங்கும் விதத்தில், அவர் வழிகளையும் வாய்ப்புவளங்களையும் உபயோகப்படுத்துவார். தேவன் தமது நீதியின் கிரியைகளைப் பூரணப்படுத்தி நிறைவேற்றும்படியாக, அவர் உபயோகிக்கப்போகின்ற எளிமையான வழிவகைகளைக் குறித்து ஊழியக்காரர்கள் ஆச்சரியப்படுவார்கள். — TM 300 (1885).கச 147.4

    எதிர்காலத்திற்கான திட்டமிடுதல் சாத்தியமானதாக இருக்கும் என்று கற்பனை செய்யவேண்டாம். தேவன் எல்லாக் காலங்களிலும், ஓவ்வொரு சூழ்நிலையின் கீழாகவும் சுக்கான்பிடித்து நிற்கிறவராக ஒப்புக்கொள்ளப்படவேண்டும். பொருந்தமான வழிவகைகளின்மூலம் தேவன் கிரியை செய்வார்; மேலும் அவர் தமது சொந்த ஜனங்களை தொடர்ந்து நடத்தி, பெருகச்செய்து, படிப்படியாக உருவாக்குவார். —CW 71 (1895).கச 148.1

    மனிதன் குறிப்பிடும்படியாக, எந்த ஒரு திட்டவட்டமான வரையறுக்கப்பட்ட வழியில் அல்ல, மாறாக, தேவனுடைய ஒழுங்கின்படி — எதிர்பாராத நேரங்களில் மற்றும் வழிகளில், தமது நாமத்துக்கு மகிமை உண்டாகும் விதத்தில். தேற்றரவாளன் தம்மைத்தாமே வெளிப் படுத்துவார். — EGW1 88 1478 (1896).கச 148.2

    முந்தைய நாட்களில் மீன்பிடிக்கிறவர்களைத் தமது சீஷர்களாகத் தெரிந்துகொண்டதுபோலவே, அவர் சாதாரண ஜனங்கள் மத்தியிலிருந்து ஆண்களையும் பெண்களையும் தமது ஊழியத்துக்காக எமுப்புவார். அநேகரை ஆச்சரியப்படுத்துகின்ற ஒரு எழுப்புதல் வெகு சீக்கிரத்தில் உண்டாகும். என்ன செய்யப்பட வேண்டும் என்ற அவசியத்தை உணராதிருக்கின்ற ஜனங்கள் விட்டுவிடப்படுவர். சாதாரண மக்கள் என்றழைக்கப்படுகிறவர்களுடன் பரலோகத் தூதர்கள் வேலை செய்து, சத்தியத்தை அநேக இடங்களுக்கு எடுத்துச் செல்ல அவர்களைத் தகுதியாக்குவார்கள். — 15MR 312 (1905).கச 148.3