Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பரிசுத்த ஆவியானவர் மூலம் ஊழியக்காரர்கள் தகுதியாக்கப்படுவர்

    பக்திவிநயமான கடைசி ஊழியத்திலே, மாபெரும் மனிதர்கள் சிலரே ஈடுபடுவார்கள்... சிலர் மாத்திரமே எதிர்பார்க்கின்ற ஒரு வேலையை, தேவன் நமது காலத்திலே செய்வார். அறிவியல் சம்பந்தமான நிறுவனங்கள்மூலம் வெளிப்படையாகப் பயிற்றுவிக்கப்படுவதைக் காட்டிலும், தேவனுடைய ஆவியானவரின் அபிஷேகத்தால் பயிற்றுவிக்கப்படக்கூடிய ஜனங்களை நம் மத்தியிலிருந்து அவர் எழுப்பி உயர்த்துவார். இந்த வசதிகள் (அறிவியல் நிறுவனங்கள்) அலட்சியப் படுத்தப்படவோ அல்லது குற்றஞ்சாட்டப்படவோ வேண்டியதில்லை; அவைகளும் தேவனால் நியமிக்கப்பட்டவைகளே. ஆனால் இவைகள் வெளிப்புறத் தகுதிகளை மாத்திரமே பக்குவப்படுத்த முடியும். தேவன் படித்தவர்களையும், தங்களைப் பெரிதாகக் கருதுகின்ற மனிதர்களையும் சார்ந்திருக்கவில்லை என்பதை வெளிப்படுத்துவார். - 5 T 80, 82 (1882). கச 148.4

    சத்திய வெளிச்சத்தை மிகுந்த ஆர்வத்துடன் தேடுகின்ற ஆத்துமாக்களுக்கும், தேவனுடைய பரிசுத்த எழுத்துக்களிலிருந்து பிரகாசிக்கிற ஒவ்வொரு தெய்வீக ஒளிக்கதிரையும் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கும் மாத்திரமே கூடுதலான வெளிச்சம் கொடுக்கப்படும். இந்த ஆத்துமாக்களின் மூலமாகவே, இந்தப் பூமி முழுவதையும் தமது மகிமையால் பிரகாசிக்கச் செய்யக்கூடியதான வல்லமையையும், வெளிச்சத்தையும் தேவன் வெளிப்படுத்துவார். - 5T 729 (1889).கச 148.5

    சிந்தையின் கட்டுப்பாடும், இருதயம் மற்றும் எண்ணத்தின் சுத்தமுமே அவசியமாக இருக்கின்றது. மிகச் சிறந்த தாலந்துகள், சாமர்த்தியம் அல்லது அறிவைக்காட்டிலும் இவையே மிகவும் விலையேறப் பெற்றவையாகும். அதிகத் திறமைகள் இருந்தும் அவைகளைச் சரியாக உபயோகப்படுத்தாதவர்களைக் காட்டிலும், “கர்த்தர் இப்படிச் சொல்லுகிறார்” என்கின்ற வார்த்தைக்குக் கீழ்ப்படிய பயிற்றுவிக்கப்பட்ட சாதாரண மனமே, தேவனுடைய ஊழியத்தைச் செய்வதற்கு அதிகத் தகுதி பெற்றதாகும். - RH Nov. 27, 1990.கச 148.6

    ஸ்தாபன கல்வி அறிவின் மூலம் பயிற்சி பெறுவதைக்காட்டிலும், தேவ ஆவியானவரின் அபிஷேகத்தால் ஊழியக்காரர்கள் தகுதியாக்கப்படுவர். விசுவாசமும் ஜெபமுமிக்க மனிதர்கள் தேவன் தங்களுக்குக் கொடுக்கும் வார்த்தைகளை அறிவிப்பதற்குப் பரிசுத்தமான வைராக்கியத்துடன் முன்செல்ல நெருக்கி ஏவப்படுவர். - GC 606 (1911).கச 149.1