Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கல்வி அறிவில்லாதவர்களையும் தேவன் உபயோகிப்பார்

    கிறிஸ்துவைத் தங்களது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்பவர்கள், இந்தக் கடைசி நாட்களின் பரீட்சையிலும் சோதனையிலும் நின்று ஜெயிப்பார்கள். கேள்விகேட்கப்படாத விசுவாசத்தினால் கிறிஸ்துவில் பெலப்படுத்தப்பட்டிருக்கின்ற, கல்வியறிவில்லாத சீஷன்கூட, இல்லை வாதம் கொண்டுவரக்கூடிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு எதிர்த்து நின்று, பரியாசக்காரர்களின் குதர்க்கவாதங்களை வெட்கமடையச் செய்ய முடியும்.கச 149.2

    தங்களது எதிராளிகள் மறுத்துப்பேசவோ எதிர்த்து நிற்கவோ முடியாத ஞானத்தையும், வல்லமையான ஒரு நாவையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்குக் கொடுப்பார். தங்களது விவாதத்தினாலே சாத்தானுடைய வஞ்சகங்களை ஜெயிக்க முடியாதவர்களும்கூட, கற்றறிந்த ஞானிகளாக தங்களை நினைத்துக்கொள்ளுகின்ற மனிதர்கள் குழம்புவதற்கேதுவான திட்டமான ஒரு சாட்சியை அளிப்பார்கள். கல்லாதவர்களின் உதடுகளிலிருந்து சத்தியத்திற்காக மனமாற்றத்தை உண்டு பண்ணக்கூடியதான, அப்படிப்பட்ட வல்லமையுடனும் ஞானத்துடனும் ஏற்றுக்கொள்ளச் செய்கின்ற வார்த்தைகள் வெளிவரும். அவர்களது சாட்சியினிமித்தம் ஆயிரக்கணக்கானோர் மனமாற்றமடைவர்.கச 149.3

    கற்றறிந்த ஞானிகளுக்கில்லாத இந்த வல்லமையை ஏன் கல்லாத மனிதன் பெற்றிருக்கவேண்டும்? ஏனெனில் கல்லாதவர், கிறிஸ்துவின் மேல் வைத்திருக்கின்ற விசுவாசத்தினாலே, தூய்மையான தெளிவான சத்தியத்தின் சூழ்நிலைக்குள்ளாக வந்திருக்கின்றார். அதே நேரம் கற்றிந்த மனிதனோ, சத்தியத்தை விட்டுவிலகிச் சென்றிருக்கின்றார். (ஆவியில்) எளிமையான மனிதன் கிறிஸ்துவின் சாட்சியாக இருக்கின்றான். சரித்திரங்களிலிருந்தோ அல்லது உயர்ந்த விஞ்ஞானம் என்று அழைக்கப்படுவதிலிந்தோ, அவனால் ஈர்க்கத்தக்க விதத்தில் பேச முடியாது. ஆனால், தேவனுடைய வார்த்தையிலிருந்து வல்லமையான ஆதாரத்தை அவன் திரட்டி வைத்திருக்கின்றான். ஆவியானவருடைய ஏவுதலின் கீழாக அவன் பேசுகின்ற சத்தியம் மிகவும் தூய்மையானதாயும் குறிப்பிடத் தக்கதாயும் இருக்கின்றது. மேலும், அவனுடைய சாட்சி மறுத்து பேசப்பட முடியாததாயும், எதிர்க்க முடியாத மிகுந்த ஒரு வல்லமையை அதனுடன் கொண்டுசெல்லக்கூடியதாயும் இருக்கின்றது. — 8MR 187, 188 (1905).கச 149.4