Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பிரகடன ஊழியத்தின் உலகளாவிய விரிவாக்கம்

    மூன்றாம் தூதனின் தூதை அறிவிப்பதில் இணைந்துகொள்ளப்போகின்ற தூதனின் தூது, தனது மகிமையால் பூமி முழுவதையும் பிரகாசிப்பிக்கச் செய்வதாக இருக்கின்றது. உலகளாவிய விரிவாக்கத்தின் மற்றும் வழக்கத்திற்கு மாறான வல்லமையின் ஒரு வேலை இங்கு முன்னறிவிக்கப்பட்டிருக்கின்றது... தேவனுடைய ஊழியக்காரர்கள் ஒளியேற்றப்பெற்ற பிரகாசிக்கின்ற பரிசுத்த ஒப்படைப்புடனும், பிரகாசிக்கப்பட்ட தங்கள் முகங்களுடனும், பரலோகத்திலிருந்து வருகின்ற தூதை அளிப்பதற்குத் துரிதமாக ஒரு இடத்திலிருந்த மற்றொரு இடத்திற்குச் செல்வார்கள். உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான குரல்களால் எச்சரிப்பு கொடுக்கப்படும். — GC 611, 612 (1911).கச 150.5

    மூன்றாம் தூதனைப் பின்தொடருகின்ற தூதனுடைய தூது இப்போது உலகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் கொடுக்கப்படவேண்டும். அது அறுவடையைக்குறித்த தூதாக இருக்கவேண்டும். அப்போது தேவனு டைய மகிமையால் பூமி முழுவதும் பிரகாசிக்கப்படும். — Letter 86, 1900.கச 150.6

    உபத்திரவத்தின் புயல் உண்மையாகவே நம்மீது மோதியடிக்கும்..., அதன் பிறகே, மூன்றாம் தூதனின் தூது உரத்த சத்தமாக எழும்பும், பின்பு, கர்த்தருடைய மகிமையால் பூமி முழுவதும் பிரகாசமடையும். — 6T 401 (1900).கச 151.1

    அமெரிக்காவின் ஒவ்வொரு பட்டணத்திலும் சத்தியம் பிரசங்கிக்கப் படவேண்டும். உலகத்தின் ஒவ்வொரு நாட்டிலும் இந்த எச்சரிப்பின் தூது கொடுக்கப்படவேண்டும். GCB March 30, 1903.கச 151.2

    உரத்த சத்தத்தின்போது திருச்சபை, அவளது உயர்த்தப்பட்ட கர்த்தரின் தெய்வீகக் குறுக்கீடுகளின் உதவியினால், இரட்சிப்பின் அறிவை மிகவும் அபரிமிதமாக பரவச்செய்வதின்மூலம், ஒவ்வொரு பட்டணத்திற்கும் ஒவ்வொரு நகரத்திற்கும் வெளிச்சம் கொடுக்கப்படும். Ev 694 (1904).கச 151.3

    ஒரு நெருக்கடி நேரிடையாக நம்மீது வந்திருக்கின்றது. இப்போது நாம் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே, இந்தக் கடைசி காலத்திற்குரிய மாபெரும் சத்தியங்களை அறிவிக்கவேண்டும். வெகு சீக்கிரம் ஒவ்வொருவரும் எச்சரிப்பைக் கேட்டு, தீர்மானம் எடுப்பார்கள். அப்பொழுது முடிவு வரும். — 6T 24 (1900).கச 151.4