Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அநேக அட்வென்டிஸ்ட் மக்கள் வெளிச்சத்துக்கு விரோதமாக இடைக்கட்டிக்கொள்வர்

    சபைகளிலே (ஏழாம்நாள் அட்வென்டிஸ்ட் சபைகளிலே), தேவனுடைய வல்லமையின் ஒரு அற்புதமான வெளிப்பாடு இருக்க வேண்டியதாயிருக்கின்றது. ஆனால் கர்த்தருக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தாத, பாவ அறிக்கை செய்து, மனம் வருந்தி, தங்களது இதயக்கதவைத் திறக்காத ஜனங்களின்மீது அந்த வல்லமை அசைவை உண்டு பண்ணாது. பூமி முழுவதையும் தேவனுடைய மகிமையால் பிரகாசிப் பிக்கப்போகின்ற அந்த வல்லமையின் வெளிப்பாட்டினை தங்களது குருட்டாட்டமான கண்களால் ஆபத்தான ஏதோ ஒரு காரியமாகவும், தங்களது பயங்களை எழுப்புகின்ற ஒரு காரியமகவும் பார்த்து, அதை எதிர்ப்பதற்கு அவர்கள் தங்களைத் தாங்களே இடைக்கட்டிக்கொள்வர். அவர்களது எதிர்பார்ப்புகளின்படியும் கருத்துகளின்படியும் கர்த்தர் கிரியை செய்யாதபடியால், அவ்வேலையை அவர்கள் எதிர்ப்பார்கள். ஏன், இத்தனை வருட காலமாக இந்த ஊழியத்தில் நாங்கள் இருக்கும்போது, எங்களுக்கு தேவனுடைய ஆவியைத் தெரியாதா? என்று அவர்கள் கேட்பார்கள். RH Extra Dec. 23, 1890.கச 152.1

    மூன்றாம் தூதனின் தூது புரிந்துகொள்ளப்படாது. பூமி முழுவதையும் பிரகாசிப்பிக்கின்ற அதனுடைய மகிமையின் வெளிச்சம், வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கின்ற அதன் மகிமையில் நடக்க மறுக்கிறவர்களால் பொய்யான வெளிச்சமென்று அழைக்கப்படும். — RH May 27, 1890.கச 152.2