Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய முத்திரை என்பது என்ன?

    தேவனுடைய மக்கள் அவர்களது நெற்றிகளிலே முத்திரையிடப்படுகின்றனர்; அதாவது இது காணப்படத்தக்கதான முத்திரையோ அல்லது அடையாளமோ அல்ல. மாறாக, அறிவுப்பூர்வ மாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் சத்தியத்திலோ நிலைப்படுத்தப் படுவதாகும். அதனால் தேவனுடைய ஜனங்கள் அசைக்கப்பட இயலாது — தேவனுடைய ஜனங்கள் முத்திரையிடப்பட்டு, அசைக்கப்படுதலிற்கு ஆயத்தமாக்கப்பட்ட பின்பு அந்தக் காரியம் நடைபெறும், உண்மையில் அது ஏற்கனவே துவங்கிவிட்டது. — 4 BC 1161 (1902.கச 159.4

    கர்த்தருடைய ஒய்வுநாளை நேர்மையாக ஆசரிக்கிறவர்கள்மீது ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை போடப்படும். — 7 BC 980 1897).கச 159.5

    தேவனுடைய முத்திரையைத் தங்கள் நெற்றிகளில் பெற்றுக்கொள்கிறவர்கள், கண்டிப்பாக நான்காம் கற்பனையின் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டும். — 7 BC 970 (1899).கச 159.6

    ஓய்வுநாளை உண்மையாய் ஆசரிப்பதே, தேவனுக்கு உண்மையாயிருப்பதற்கான அடையாளமாகும். — 7 BC 981 (1899).கச 159.7

    வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவராகிய மாபொரும் நியாயப்பிரமாணிகரின் முத்திரை, பத்து கற்பனைகளில் நான்காம் கற்பனையில் மட்டுமே அடங்கியுள்ளது. — 6T 350 (1900).கச 160.1

    கர்த்தருடைய ஞாபகச் சின்னமும் ஏதேனில் ஸ்தாபிக்கப்பட்ட ஓய்வுநாளுமான ஏழாம்நாளாகிய ஓய்வுநாளை ஆசரிப்பதே, நாம் தேவனுக்கு உண்மையாயிருப்பதின் பரீட்சையாக இருக்கின்றது. — Letter 94, 1900.கச 160.2

    பொதுப்படையான அழிவிலிருந்து ஜனங்களைக் காப்பதற்காக, எபிரெய வீடுகளின் கதவுகளில் மேலாகப் போடப்பட்ட ஒரு அடையாளத்தைப் போலவே, தேவனுடைய ஜனங்கள் ஒவ்வொருவர் மீதும் ஒரு அடையாளம் போடப்படும். “நான் தங்களைப் பரிசுத்தம் பண்ணுகிற கர்த்தர் என்பதை அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்” (எச. 20:12) என்று தேவன் அறிவிக்கின்றார். — 7BC 969 (1900).கச 160.3