Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மிருகத்தின் முத்திரை என்பது என்ன?

    வாரத்தின் முதலாம் நாளை ஆசரிப்பதின்மூலம் மிருகத்தையோ அல்லது அதன் சொரூபத்தையோ வணங்கக்கூடியவர்களிடமிருந்து வேறுபட்டிருக்கின்ற ஒரு மக்கள் கூட்டத்தை நோக்கிப்பார்க்கும்படிக்கு யோவான் அழைக்கப்பட்டார். இந்த நாளை (முதலாம் நாளை) ஆசரிப்பதே மிருகத்தின் முத்திரையாகும்.- TM 133 (1898).கச 162.2

    மிருகத்தின் முத்திரை என்பது போப்புமார்ககத்தின் ஓய்வுநாளாகும். — EV 234 (1899).கச 162.3

    பரீட்சை வரும்போது மிருகத்தின் முத்திரை என்ன என்பது தெளிவாகக் காட்டப்படும். அது ஞாயிற்றுக்கிழமையைக் கைக்கொள்வ தாகும். — 7BC 980 (1900).கச 162.4

    தேவனுடைய முத்திரை அல்லது அடையாளம், கர்த்தருடைய சிருஷ்டிப்பின் நினைவுச்சின்னமான ஏழாம் நாளாகிய ஓய்வுநாள் ஆசரிப்பில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது... மிருகத்தின் முத்திரை என்பது இதற்கு எதிரான — வாரத்தின் முதலாம் நாளின் ஆசரிப்பாகும். — 8T 117 (1904).கச 162.5

    சிறியோர், பெரியோர்... யாவரும் தங்கள் தங்கள் வலது கைகளிலாவது, நெற்றிகளிலாவது ஓரு முத்திரையைப் பெறும்படிக்குச் செய்தது (வெளி. 13:16). ஞாயிற்றுக்கிழமையில் மனிதர்கள் தங்கள் கைகளினால் வேலை செய்யாமலிருப்பது மாத்திரமல்ல, அதை ஓய்வுநாளாக தங்கள் மனங்களில் அவர்கள் ஏற்றுக்கொள்ளவும் வேண்டியதிருக்கின்றது. — Special Testimony to Battle Creek Church (Ph86)6, 7 (1897).கச 162.6