Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிருபையின் காலம் முடிந்த பின்பு மானிட நடவடிக்கைகள்!

    பூமியின் மீதாக, நீதிமான்களும் துன்மார்க்கரும் தங்களது சாவுக்கேதுவான தன்மையிலேயே இன்னமும் வாழ்ந்துகொண்டிருப்பார் - அதாவது, மாற்ற இயலாத இறுதியான தீர்மானம் பரலோக ஆசரிப்புக் கூடரத்திலே தீர்ப்பாகக் கூறப்பட்டாயிற்று என்பதை அறியாமல், மனிதர்கள் அனைவரும் புசித்தும், குடித்தும், நட்டுக்கொண்டும், கட்டிக்கொண்டும் இருப்பார்கள். — GC 491(1911).கச 168.1

    ஆசரிப்புக்கூடாரத்தின் மாற்ற இயலாத தீர்மானம் அறிவிக்கப்பட்டதையும், உலகத்தினுடைய நித்தியம் நிரந்தரமாகத் தீர்மானிக்கப்பட்டு விட்டதையும் பூமியின் குடிகள் அறியாதிருப்பார்கள். தேவ ஆவியானவர் முடிவாக மக்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலும்கூட, மதசம்பந்தமான சடங்குகள் அவர்களால் தொடர்ந்து செய்யப்படும். கொடூரமான ஆர்வத்துடன் தீமையின் பிரபுவானவன், தனது தீய திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளத்தக்கதாக அவர்களை ஊக்கப்படுத்துவான். ஆர்வத்துடன் செய்யப்படும் அவர்களின் செயல்கள், தேவனுக்கான பக்திவைராக்கியத்தின் போலித் தோற்றத்தைக் கொண்டிருக்கும். — GC 615 (1911).கச 168.2

    கோதுமையும் களைகளும் அறுப்புக்காலம் வரையிலும் ஒன்றாகவே வளரும், வாழ்க்கையின் கடமைகளை நிறைவேற்றுவதில். நீதிமான்கள் தேவபக்தியற்றவர்களோடே கடைசிவரையிலும் போராடும்படியாக, அவர்களுடனான தொடர்புக்குள் கொண்டுவரப்படுவார்கள். இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இடையே இருக்கின்ற வித்தியாசத்தை அனைவரும் தெளிவாகக் காணும்பொருட்டாக, ஒளியின் பிள்ளைகள் இருளின் பிள்ளைகள் மத்தியிலே சிதறப்பட்டிருக்கிறார்கள். — 5T 100 (1882).கச 168.3

    தேவனுக்குக் காத்திருப்பவர்களில் சிலர், கிறிஸ்து வரும்வேளைகளில் தங்களது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதை, சிலர் வயலில் விதைத்துக்கொண்டிருப்பார்கள், வேறு சிலர் அறுவடை செய்து அதைச் சேர்த்துக்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் எந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள் என்று கிறிஸ்துதாமே அறிவித்தார். — Ms 26, 1901.கச 168.4