Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    குணத்தின் மாற்றம் சாத்தியமல்ல

    கர்த்தர் மகா வல்லமையோடும் மகிமையோடும் வரவிருக்கிறார். அப்போது நீதிமான்களுக்கும் துன்மார்க்கருக்கும் இடையே, முழுவதுமான ஒரு பிரிவினையை உண்டாக்குவதே அவரது வேலையாக இருக்கும். ஆனால் அந்த நேரத்திலே, தங்களது பாத்திரங்களில் எண்ணெய் இல்லாதவர்களுக்கு (எண்ணெய் வைத்திருப்பவர்களிடமிருந்து) எண்ணெய் மாற்றப்பட இயலாது. அப்போது, “இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள்”. ஒருத்தி கைவிடப்படுவாள்” இரண்டுபேர் வயலில் இருப்பார்கள் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவாள். ஒருவன் கைவிடப்படுவான் என்ற கிறிஸ்து வின் வார்த்தைகள் நிறைவேறும். நீதிமான்களும் துன்மார்க்கரும் இவ்வுலக வாழ்க்கையின் வேலையில் ஒன்றுசேர்ந்தே ஈடுபட்டிருக்கவேண்டும். ஆனால், கர்த்தரோ குணங்களை வாசிக்கிறவராயிருக்கின்றார். அவர் கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகள் யார் என்பதையும், அவரது கற்பனைகளை நேசித்து மதிக்கின்றவர்கள் யார் என்பதையும் கண்டறிகின்றார். — TM 234 (1895).கச 171.3

    மரிப்பதென்பது பக்திவிநயமான ஒரு காரியம்தான், ஆனால் உயிரோடிருப்பதென்பது அதைக்காட்டிலும் பக்திவிநயமான ஒருகாரியம். நமது வாழ்க்கையின் ஒவ்வொரு எண்ணமும், வார்த்தையும், செய்கையும் நம்மை மீண்டும் வந்து சந்திக்கும். கிருபையின் காலத்தில் நாம் எதனை உண்டுபண்ணுகின்றோமோ, அதே நிலையில் நித்தியத்திற்கெல்லாம் தொடர்ந்து நிலைத்திருக்கவேண்டும். மரணம் சரீரத்திற்கு முடிவைக் கொண்டுவருகின்றது. ஆனால் குணத்தில் எந்த ஒரு மாறுதலையும் உண்டுபண்ணுவதில்லை. கிறிஸ்துவின் வருகை நமது குனங்களை மாற்றாது. ஆனால் இனிமேல் எந்த மாற்றத்தையும் உண்டுபண்ண முடியாத அளவிற்கு அது நித்தியமாக அவைகளைத் (குணங்களை) தீர்மானம் மட்டுமே செய்யும். — 5T 466 (1885).கச 172.1