Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ஐந்தாவது வாதை

    வெற்றிக்கூச்சலோடும், பரியாசப்பேச்சுகளோடும், சாபவார்த்தைகளைச் சொல்லிக்கொண்டும் ஆரவாரிக்கின்ற, தீய மனிதர்களின் கூட்டங்கள் தங்களது இரையின்மீது பாய ஆயத்தமாகின்ற அந்த நேரத்தில்தானே, இதோ, இரவின் இருளைக்காட்டிலும் அடர்த்தியான ஒரு காரிருள் பூமியின்மீது படிகின்றது; பின்பு, தேவனுடைய சிங்காசனத்திலிருந்து மகிமையுடன் பிரகாசிக்கின்ற ஒரு வானவில் வானம் முழுவதும் பரவிநின்று, ஜெபித்துக்கொண்டிருந்த ஓவ்வொரு கூட்டத்தையும் சூழ்ந்துகொண்டதுபோல் காணப்பட்டது. அப்போது, மூர்க்கங்கொண்டிருந்த திரள்கூட்டத்தார். திடிரென தடைசெய்யப்பட்டவர்கள் போன்று அப்படியே நின்றனர். அவர்களது ஏளனக் கூச்சல்கள் நொடியில் அடங்கிப்போயின. யாரைக் கொலை வெறியோடு தாக்க வந்தார்களோ, அவர்களை மறந்துவிடுகின்றனர். பயங்கரமான அசம்பாவிதங்கள் தங்களுக்கு நேரிடப்போகின்றன என்கிற பயத்தோடு தேவனுடைய உடன்படிக்கையின் அடையாளத்தை உற்றுநோக்குகின்றனர். தங்களால் ஏறெடுத்தும் பார்க்கக்கூடாதிருந்த அந்தப் பிரகாசத்தினின்று பாதுகாக்கப்பட வேண்டுமென்று ஏக்கம்கொள்கின்றனர்… கச 180.1

    தமது மக்களை விடிவிப்பதற்காக, தேவன் நள்ளிரவில் தமது வல்லமையை வெளிப்படுத்துகின்றார். அந்நேரத்திலே சூரியன் தன் முழு வல்லமையில் பிரகாசிக்கின்றது. அடையாளங்களும், அற்புதங்களும் அடுத்தடுத்து விரைவாகப் பின்தொடர்கின்றன. துன்மார்க்கர் பயத்தோடும், ஆச்சரியத்தோடும் இக்கட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற அதே நேரம், நீதிமான்கள் தங்களது விடுதலைக்கான அடையாளத்தைப் பக்திவிநயமான மகிழ்ச்சியுடன் நோக்கிப்பார்க்கின்றனர். — GC 635,636 (1911).கச 180.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents