Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    (நித்தியத்தை) இழந்தவர்கள் தங்களது கள்ள மேய்ப்பர்களை குற்றப்படுத்துவர்

    சத்திய வெளிச்சத்தைக் கண்டும், அதனால் உணர்த்தப்பட்டிருந்தும், தங்களது ஆத்துமாக்களின் இரட்சிப்பை ஊழியக்காரர்களின் கைகளில் ஒப்புக்கொடுத்திருந்த சபை அங்கத்தினர்கள், ஆண்டவரின் நாளிலே தங்களது மீறுதலுக்காக மர்ற எந்த ஒரு ஆத்துமாவும் பரிகாரம் செலுத்தமுடியாது என்பதை அறிந்துகொள்வார்கள். அப்பொழுது, நான் இழந்துவிட்டேன், நித்தியமாக இழந்துவிட்டேன் என்கின்ற பயங்கரமான அழுகையின் கூக்குரல் எழுப்பப்படும். தங்களுக்குப் பொய்யான காரியங்களைப் பரிகாசித்து, சத்தியத்தைக் குற்றப்படுத்தின ஊழியக்காரர்களை மனிதர்கள் துண்டுகளாகக் கிழிக்கவேண்டும் என்பதுபோல எண்ணுவார்கள். — 4BC 1157 (1900).கச 181.1

    அனைவரும் ஒன்றுகூடி, தங்கள் கசப்பான கண்டனங்களை ஊழியக்காரர்கள்மீது குவிக்கின்றார்கள். உண்மையற்ற போதகர்கள் இதமான காரியங்களைத் தீர்க்கதரிசனமாக உரைத்தனர். தேவனுடைய கற்பனைகளை ஒன்றுமில்லாமல் ஆக்கும்படியாகவும், அவைகளைப் பரிசுத்தமாகக் கடைபிடிப்பவர்களை உபத்திரவப்படுத்தும்படியாகவும் தங்களுக்குச் செவிக்கொடுத்தவர்களை அவர்கள் வழிநடத்தினர். இப்பொழுதோ, இந்தப் போதகர்கள் தங்களது நம்பிக்கையற்ற வேதனை நிறைந்த நிலையில், தாங்கள் செய்த ஏமாற்று வேலையை இந்த உலகத்திற்கு முன்பாக அறிக்கையிடுகின்றனர். திரள்கூட்டமாகிய மக்கள் வெளிக்கொண்டவர்களாக.”நாங்கள் நித்தியத்தை இழ்ந்துவிட்டோம்!” “எங்களுடைய அழிவிற்கு நீங்கள்தான் காரணம்” என்று கூக்குரலிட்டு அந்தக் கள்ள மேய்ப்பர்களுக்கு எதிராகத் திரும்புவார்கள். ஒரு காலத்தில் அவர்களை மிகவும் போற்றின அதே நபர்கள், இப்போது அவர்கள்மேல் பயங்கரமான சாபங்களைக் கூறுகிறார்கள். முன்னொருமுறை அவர்களுக்குப் புகழ்மாலை சூட்டிச் சிறப்பித்த அதே கரங்கள் இப்போது அவர்களை அழிக்கத்தக்கத்தாக உயர்த்தப்படுகின்றன. தேவனுடைய மக்களைக் கொலைசெய்யும்படி உயர்த்தப்பட்ட பட்டயங்கள் தற்போது அவர்களது சத்துருக்களை அழிப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. — GC 655,- 656 (1911).கச 181.2

    இங்கே, கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரமாகிய சபை, தேவனுடைய கோபாக்கினையின் அடியை உணர்வதில் முதலாவதாக இருந்தது என்பதை நாம் காண்கின்றோம். தேவன் யாருக்கு மாபெரும் வெளிச்சத்தைக் கொடுத்திருந்தாரோ, யார் மக்களின் ஆவிக்குரிய நலன்களில் பாதுகாவலர்களைப்போல் நின்றிருந்தார்களோ, அந்த மூப்பர்கள் (எசே. 9:6) தங்களிடம் ஒப்புவிக்கப்பட்டிருந்த பொறுப்பில் உண்மையற்றவர்களாய் இருந்தார்கள். — 5T 211 (1882).கச 181.3

    தேவனுடைய வார்த்தைகள் கள்ள மேய்ப்பர்களால் பயனற்றதாக ஆக்கப்பட்டிருந்தது… அவர்களது கிரியை வெகுவிரைவில் அவர்கள்மீதே எதிர்ச்செயலை உண்டுபண்ணும். அதன் பின்பு, ஆவிக்குரிய பாபிலோனின் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் விழும்போது, வெளி. 18- ல் விவரிக்கப்பட்டுள்ள காட்சிகள் வெளியரங்கமாகக் காணப்படும். — Ms 60, 1900.கச 181.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents