Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான கடைசி மாபெரும் யுத்தம்

    ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு மாபெரும் வல்லமைகள் கடைசி மாபெரும் யுத்தத்திலே வெளிப்படுத்தப்படும் ஒரு பக்கத்தில் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சிருஷ்டிகர் நிற்பார். அவர் பக்கம் நிற்பவர்களெல்லாரும், அவரது முத்திரையைப் பெற்றிருப்பர். அவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருப்பார்கள். மறுபக்கத்தில் அந்தகாரத்தின் அதிபதியுடன் மருளுவிழுகையையும் கலகத்தையும் தெரிந்துகொண்டவர்கள் நிற்பார்கள். — 7BC 982, 983 (1901).கச 182.5

    பயங்கரமான போரட்டம் ஒன்று நம் முன்பாக இருக்கின்றது. சர்வவல்லராகிய தேவனுடைய மகாநாளின் யுத்தத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். இதுவரை கட்டுப்படுத்தப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்தவை அனைத்தும் அவிழ்த்துவிடப்பட்டும். இரக்கத்தின் தூதன் தமது செட்டைகளை மடக்கிக்கொண்டு இவ்வுலகை சத்தானுடைய கட்டுப்பாட்டிற்குள் விடத்தக்கதாக, சிங்காசனத்திலிருந்து இறங்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றார். இப்பிரபஞ்சத்தின் துரைத்தனங்கள் மற்றும் அதிகாரங்கள் ஒவ்வொன்றும் பாலோக தேவனுக்கு விரோதமாகக் கசப்பான வெறுப்பினால் நிறைந்திருக்கின்றன. தேவனை சேவிக்கிறவர்களுக்கு விரோதமாகவும் அவைகள் வெறுப்பினால் நிறைந்திருக்கின்றன. எனவே விரைவில், வெகு விரைவில், நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான கடைசி மாபெரும் யுத்தம் நடத்தப்படும். இந்த பூமி- இறுதியான போராட்டம் மற்றும் இறுதியான வெற்றியின் காட்சிகள் நடந்தேறும் யுத்தக்களமாக இருக்கப்போகின்றது. இங்குதான், சாத்தான் வெகு நாட்களாக மனிதர்களை தேவனுக்கு எதிராக நடத்திவந்த கலகம் நித்தியமாக அடக்கப்படஇருக்கின்றது. —RH May 13, 1902.கச 182.6

    இவ்வுலகப் படைகளுக்கு மத்தியில் நடக்கும் யுத்தம்போலவே, அவ்விரண்டு ஆவிக்குரிய சேனைகளுக்கும் இடையே நிஜமான யுத்தம் நடைபெற்றுவருகின்றது. ஆனால், ஆவிக்குரிய யுத்ததில்தான் மனிதனின் எதிர்கால நித்தியம் சம்பந்தப்பட்டுள்ளது. — PK 176 (c.1914).கச 183.1