Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பரிந்துபேசுகிறவர் இல்லை என்றாலும் கிறிஸ்துவோடு இடைவிடாத தொடர்பு

    கிறிஸ்து தமது ஜனங்களுக்காக பாவநிவர்த்தி செய்து, அவர்களது பாவங்களை முற்றிலுமாக நீக்கிவிட்டார். அவருடைய ராஜ்யத்திற்குரிய குடிமக்களின் தொகை நிறைவடைந்துவிட்டது…கச 194.5

    அவர் ஆசரிப்புக்கூடாரத்தைவிட்டு வெளியே வரும்பொழுது, பூமியின் குடிகளை காரிருள் மூடிக்கொள்ளும், அந்த பயங்கரமான நேரத்தில், பரிந்துபேசுகிறவர் ஒருவர் இல்லாத சூழ்நிலையில், நீதிமான்கள் பரிசுத்தமான தேவனின் பார்வையில் வாழவேண்டும். GC 613, 614 (1911).கச 194.6

    இந்தச் சோதனையான மணிவேளையில், கர்த்தர் தமது ஜனங்களை மறந்துவிடுவாரா?... சத்துருக்கள் அவர்களை சிறைக்குள் தள்ளி அடைத்தாலும், இருள் நிறைந்த அந்தச் சிறையின் சவைகள் கிறிஸ்துவிற்கும் அவர்கள் ஆத்துமாவிற்கும் இடையேயுள்ள தொடர்பைத் துண்டிக்க முடியாது. அவர்களது பெலவீனங்களையெல்லாம் அறிந்தவராகவும், அவர்களூக்கு வருகின்ற ஒவ்வொரு சோதனைகளையும் அனுபவித்துப் பார்த்தவராகவும் இருப்பவர், இந்த உலக அதிகாரங்களுக்கெல்லாம் மேலான அதிகாரமுடையவராக இருக்கின்றார். தேவதூதர்கள் பரலோகத்திலிருந்து வெளிச்சத்தையும் சமாதானத்தையும், அவர்களது தனிமையான சிறையறைகளுக்குள்ளாகவும் கொண்டுவருவார்கள். விசுவாசத்தில் ஐசுவரியமுள்ளவர்களாய் சிறைச்சாலையில் இருப்பவர்களுக்கு அது ஒரு அரண்மனையாக இருக்கும். பிலிப்பியச்சிறையில் பவுலும் சீலாவும் நடுராத்திரியிலே ஜெபித்து, தேவனை துதித்துப் பாடினபோது, சிறைச்சாலை பிரகாசித்தது போல, இவர்கள் இருக்கின்ற சிறைச்சாலையின் இருளான சுவர்கள் பரலோக வெளிச்சத்தால் பிரகாசிக்கப்படும். - GC 626,627 (1911).கச 194.7

    ஒருவேளை மனிதர்கள் பரலோகப் பார்வையோடு பார்க்கக்கூடுமானால், கிறிஸ்துவனுடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக்கொண்ட பரிசுத்தவான்களைச் சுற்றிலும்,வல்லமையான தூதர் கூட்டங்கள் நிற்பதைக் காணமுடியும். தேவதூதர்கள் பரிவுல்ள மென்மையோடு அவர்களது மனவேதனையைக் கண்டும், அவர்களது ஜெபங்களைக் கேட்டும் இருக்கின்றனர். அழிவிலிருந்து அவர்களை காப்பாற்ற, தங்களது அதிபதியின் உத்தரவிற்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்… நமக்கு உதவி தேவைப்படுகின்ற சரியான நேரத்தில் அன்பான இரட்சகர் உதவியை அனுப்புவார். — GC 630,633 (1911).கச 195.1

    பரலோகத்தின் மகிமையும், கடந்த காலத்தில் நடைபெற்ற உபத்திரவங்களும் மீண்டும் வந்து ஒன்றாக இணையும்போது, அந்த நேரத்தில் பூமியிலே உயிரோடு இருக்கும் தேவனுடைய மக்களின் அனுபவம் எப்படி இருக்குமென்று அதைப்பற்றிக் கருத்து கூறுவது கூடாத காரியமாகும். அவர்கள் தேவனுடைய சிங்காசனத்திலிருந்து வருகின்ற வெளிச்சத்தில் நடப்பார்கள். பரலோகத்திற்கும் பூமிக்குல் இடையேயான தொடர்பு தேவதூதர்களின் உதவியினால் நிலையாக இருக்கும்…கச 195.2

    விரைவாக வந்துகொண்டிருக்கின்ற இக்கட்டுக்காலத்தின் மத்தியிலே யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஒரு கொடிய இக்கட்டுக்காலத்திலே — தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட தேவதூதர்கள் அவர்களைப் பாதுகாப்பதால், சாத்தானும் அவனுடைய சேனையும் அவர்களை அழிக்க முடியாது. — 9T 16, 17 (1909).கச 195.3