Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்துவின் வருகையின் நேரத்தை தேவன் அறிவிக்கின்றார்

    இருண்ட கனத்த கருமேகங்கள் மேலெழும்பி ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. காற்றுமண்டலம் பிரிந்து உருண்டு ஓடிற்று. அதன் பின்னர், மிருகசீரிஷ (Orion) நட்சத்திரக் கூட்டத்திலுள்ள திறப்பான வெளியின் வழியாக தேவனுடைய சத்தம் வந்த அந்த இடத்தை நோக்கிப்பார்க்க முடிந்தது. —EW 41 (1851).கச 200.1

    உடனடியாக, இயேசு கிறிஸ்துவினுடைய வருகையின் நாளையும் நாழிகையையும் அறிவிக்கக்கூடியதான, திரளான தண்ணீர்களின் ஓசையைப் போன்ற தேவனுடைய சத்தத்தை நாங்கள் கேட்டோம். உயிரோடிருந்த பரிசுத்தவான்களாகிய 1,44,000 பேரும், தேவனுடைய சத்தத்தை அறிந்து புரிந்துகொண்ட அதே நேரம், துன்மார்க்கர் அதை ஒரு பூமியதிர்ச்சி என்றும், இடிமுழக்கம் என்றும் நினைத்தனர். — EW 15 (1851).கச 200.2

    இயேசுவினுடைய வருகையின் நாளையும் நாழிகையையும், தாம் செய்கிர நித்திய உடன்படிக்கையின் வார்த்தைகளையும் தேவன் தமது ஜனங்களுக்கு அறிவித்தபோது, அவர் ஒரு வாக்கியத்தைக் கூறி இடையே சிறிது நிறுத்தியபோது, அவரது வார்த்தைகள் பூமியின் எல்லா இடங்களிலும் எதிரொலித்தன. தேவனுடைய இஸ்ரவேல் மக்கள் தங்களது கண்களை மேல்நோக்கிப் பதித்தவர்களாக நின்றுகொண்டு, பலத்த இடிமுழக்க ஓசைபோல பூமியெங்கும் எதிரொலித்த யேகோவாவின் வாயினின்று வந்த வார்த்தைகளைக் கவனித்துக் கேட்டுக்கொண்டிருந்தனர். அக்காட்சி மகா பயங்கர பக்திவிநயமாயிருந்தது. ஒவ்வொரு வாக்கியத்தையும் அவர் சொல்லிமுடித்தபோது, பரிசுத்தவான்கள் அனைவரும், “மகிமை! அல்லேலூயா!” என்று ஆர்ப்பரித்தார்கள். அவர்களது முகத்தோற்றங்கள் தேவ மகிமையால் பிரகாசமடைந்து, சீனாய் மலையிலிருந்து இறங்கி வந்த மோசேயின் முகம்போல மகிமையுடன் பிரகாசித்தன. அந்த மகிமையினிமித்தம் துன்மார்க்கர் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாதிருந்தார்கள். தேவனுடைய ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரித்து, அவரைக் கனம்பண்ணினவர்கள்மீது என்றும் முடிவில்லாத ஆசீர்வாதம் அறிவிக்கப்பட்டபொழுது மிருகத்தின்மீதும், அதன் சொரூபத்தின்மீதும் கிடைத்த வெற்றியின் வல்லமையான ஒரு ஆரவாரம் அங்கு எழும்பினது. — EW 285, 286 (1858).கச 200.3

    தேவனுடைய குரலினால் அறிவிக்கப்பட்ட அந்த நேரத்தைக்குறித்த அறிவு எனக்குச் சிறிதளவும் இல்லை. அந்த மணிநேரம் அறிவிக்கப்படுவதை நான் கேட்டேன். ஆனால் தரிசனத்திலிருந்து வெளிவந்த பிறகு, அதை முற்றிலும் மறந்துபோனேன். எந்த ஒரு ழொழியும் விவரிக்க முடியாத அளவிற்கு, அப்படிப்பட்ட நடுங்கவைக்கின்ற- பக்திவிநயமான- கவனத்தை ஈர்க்கக்கூடிய காட்சிகள் எனக்கு முன்பாகக் கடந்து சென்றன. இந்தக் காட்சியை முடிக்கும் வண்ணமாக, மனுஷகுமாரன் வீற்றிருந்த மாபெரும் வெண்மையான மேகம் தோன்றியது. அவை அனைத்தும் எனக்கு உயிருள்ள உண்மையான ஒரு காரியம்போல் இருந்தன. — 1SM 76 (1888).கச 200.4