Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இழந்துபோனவர்களுக்கு உண்டாகும் பயங்கரம்

    ஒரு குடிகாரனைப்போல பூமி தள்ளாடுகின்றபோதும், வானங்கள் அசைகின்றபோதும், கர்த்தருடைய மகாநாள் வந்திருக்கும்போதும், யாரால் நிலைநிற்க்கக்கூடும்? பயந்து நடுங்குகின்ற வேதனையின் கச 200.5

    மத்தியில், அவர்கள் நோக்கிப்பார்த்த ஒரு காரியத்திலிருந்து தப்பிப்பதற்காக விருதாவாக முயற்சி செய்வார்கள். “இதோ, மேகங்களுடனே வருகிறார். கண்கள் யாவும் அவரைக் காணும்” — வெளி. 1:7. இரட்சிக்கப்படாதவர்கள் கடுமையான சாப வார்த்தைகளைக் கூறி, அவர்களது தெய்வமாயிருக்கின்ற பேசவியலாத இயற்கையை, “பர்வதங்களையும் கனமலைகளையும் நோக்கி, நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக் கொள்ளுங்கள்” என்று கதறுவார்கள் (வெளி. 6:16). — TMK 356 (1896).கச 201.1

    தேவனுடைய குரல் தமது ஜனங்களின் சிறையிருப்பைத் திருப்பும் போது, தங்களது வாழ்க்கையின் மாபெரும் போராட்டத்தில் அனைத்தையும் இழந்தவர்களிடத்தில், மிகப் பயங்கரமான ஒரு விழிப்புணர்வு உண்டாகும்… வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த லாபமனைத்தும், ஒரு நொடிப்பொழுதில் அழிக்கப்பட்டுப்போகும். ஐசுவரியவான்கள் தங்களது ஆடம்பரமான வீடுகள் அழிந்துபோவதையும், தங்களது வெள்ளியும் பொன்னும் சிதறடிக்கப்படுகின்றதையும் பார்த்துப் புலம்புவார்கள்… தேவனையும் தங்களது சக மனிதர்களையும் பாவத்தினால் அலட்சியப்படுத்திவிட்டதற்காக அல்ல, தேவன் வெற்றிப்பெற்றுவிட்டாரே என்பதற்காக, துன்மார்க்கர் வருத்தத்தால் நிறைந்திருப்பார்கள். முடிவு இப்படி நேர்ந்துவிட்டதே என்று புலம்பி அழுவார்களேயன்றி, தங்களது துன்மார்க்கத்தை எண்ணி மனந்திரும்பமாட்டார்கள். — GC 654 (1911).கச 201.2