Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    விழித்தெழும்புங்கள், பூமியின் தூளில் நித்திரைபண்ணுகிறவர்களே. எழும்புங்கள்!

    ஒரு புத்தகச்சுருளைப்போல மேகங்கள் சுருள ஆரம்பித்தன.அப்போது அங்கே, மனுஷகுமாரனுடைய அடையாளம் தெளிவாகவும் பிரகாசமாகவும் காணப்பட்டது. தேவனுடைய மக்கள் அந்த மேகம் எதைக் குறிக்கின்றது என்பதை அறிந்திருந்தார்கள். இசையின் ஓசை கேட்கப்பட்டது. அது நெருங்கி வந்தபோது, கல்லறைகள் திறக்கப்பட்டு மரித்தவர்கள் எழுப்பப்பட்டனர். — 9MR 251, 252 (1886).கச 202.4

    “இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம். ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்” (யோவான் 5:28, 29). இந்தச் சத்தம் எல்லா தேசங்களிலும் அடக்கம் பண்ணப்பட்டிருந்த மரித்தவர்களின் கல்லறைகளில் விரைவாக எதிரொலிக்கவிருந்தது. அப்போது, கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்த ஒவ்வொரு பரிசுத்தவானும் எழுந்திருந்து, கல்லறை என்னும் சிறைக் கூடத்தைவிட்டு வெளியில் வருவான். — Ms 137, 1897.கச 203.1

    ஆதாமிலிருந்து கடைசியாக மரித்த பரிசுத்தவான்வரை, மரித்துப்போன விலையேறப்பெற்றவர்கள் ஒவ்வொருவரும் தேவ குமாரனுடைய சத்தத்தைக் கேட்டு அழியாத ஜீவனுக்கென்று கல்லறைகளிலிருந்து வெளியே வருவர். — DA 606 (1898).கச 203.2

    நடுங்கும் பூமி. அடிக்கும் மின்னல், குமுறும் இடி — இவைகளுக்கு மத்தியில், தேவகுமாரனின் குரல் தூங்கிக்கொண்டிருக்கும் பரிசுத்தவான்களை அழைக்கிறது. அவர், நீதிமான்களின் கல்லறைகளை நோக்கிப்பார்த்து, வானத்திற்கு நேராகத் தமது கரங்களை உயர்த்தி, “விழித்தெழும்புங்கள், விழித்தெழும்புங்கள். விழித்தெழும்புங்கள்! பூமியின் தூளில் நித்திரை பண்ணுகிறவர்களே விழித்தெழும்புங்கள்!” என்ற உரத்தசத்தமிடுவார். பூமியின் நாலாதிசையிலும், நித்திரையிலிருக்கின்ற மரித்த பரிசுத்தவான்கள் அந்தச் சத்தத்தைக் கேட்பார்கள், அந்தச் சத்தத்தைக் கேட்பவர்கள் உயிரோடு எழும்புவார்கள். அனைத்து ஜாதிகள், கோத்திரத்தார், பாஷைக்காரர், ஜனக்கூட்டத்தார் ஆகியோரால் திடீரென்று எழும்பிய மிகப்பெரிய சேனையின் காலடியோசையால், பூமி முழுவதும் ஒலியெழுப்பப்பட்டது. மரணம் என்னும் சிறைக்கூடத்தினின்று, சாவாமை என்னும் மகிமையைத் தரித்தவர்களாக, அவர்கள் வெளியே வந்து: “ஓ மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” (1 கொரி. 15:55) என்று முழக்கமிடுவார்கள். பின்பு உயிரோடிருக்கிற நீதிமான்களும், உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களும் ஒன்றாக இணைந்து, தங்களது குரலை உயர்த்தி, மகிழ்ச்சியான நீண்ட ஜெயதொனி எழுப்புவார்கள். — GC 644 (1911).கச 203.3