Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    எதிர்கால உலகைப்பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும்.

    நித்தியம் நம்முடைய நினைவிலிருந்து ஒருபோதும் விலகாதபடிக்கு, இயேசு பரலோகத்தை நம் பார்வைக்குக் கொண்டுவந்து, அதனுடைய மகிமையை நம் கண்களுக்கு முன்பாக வைக்கிறார். — ST June 4, 1895.கச 208.5

    நித்திய உண்மைகளைக் கருத்திற்கொள்வோமானால், நாம் தேவனுடைய பிரசன்னத்தைக்குறித்த சிந்தனைகளை இயற்கையாகவே வளர்த்துக்கொள்வோம். நமக்குள் வரப் பிரயாசப்படும் சத்துருவுக்கு எதிராக இது நமக்கு ஒரு கேடகமாயிருக்கும்; அது நமக்கு பலத்தையும் நிச்சயத்தையும் கொடுத்து, பயத்திற்கு மேலாக நம்முடைய ஆத்துமாவை உயர்த்தும். பரலோக காற்றைச் சுவாசிப்போமானால், நாம் இவ்வுலகின் நோய்க்காற்றைச் சுவாசிக்க மாட்டோம்...கச 208.6

    பரலோகத்தின் ஈர்க்கக்கூடிய காரியங்கள் நமது சிந்தைக்கு மிகவும் பழக்கமானதாக மாறும்படி, பரலோகத்தின் அழகிய கற்பனையையும் நற்பயன்களையும் நமக்கு அருளவும், நமது நினைவு என்னும் அறையில் நித்திய அழகுள்ள தெய்வீகச் சித்திரங்கள் தொங்கவிடப்படவும் இயேசு வருகின்றார்...கச 208.7

    இனிவரும் உலகினைப்பற்றிய ஒரு கண்ணோட்டத்தை மாபெரும் ஆசிரியர் மனிதனுக்கு அளிக்கிறார். அதன் கவர்ச்சிகரமான உடைமைகளுடன், அவ்வுலகினையே அவன் கண்முன் கொண்டு வருகிறார்... இவ்வுலகின் நிலையற்ற பொருட்களுடன் ஒப்பீடு செய்து, எதிர்கால வாழ்வு மற்றும் அதன் ஆசீர்வாதத் தன்மையின்மீது மனதை அவர் நிலைத்திருக்கச் செய்வாரானால், இருதயம், ஆத்துமா மற்றும் முழுசரீரத்தையும் ஈர்க்ககூடிய அளவில், தெளிவான வேறுபாடு மனதின்மீது ஆழ்ந்த பதிப்பை உண்டாக்கும். — OHC 285, 286 (1890).கச 209.1