Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மகிழ்ச்சி உத்தரவாதம் பண்ணப்பட்டிருக்கிறது

    எதிர்கால வாழ்க்கையிலிருந்த திரையை இயேசு உயர்த்தினார். “உயிர்த்தெழுதலில் கொள்வனையும், கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப்போல் இருப்பார்கள்” என்று அவர் கூறினார். (மத். 22:30). — DA 605 (1898).கச 212.7

    புதிய பூமியில் திருமணங்களும் பிறப்புகளும் இருக்கும் என்று, தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தும் மனிதர்கள் சிலர் இன்றைக்கும் இருக்கின்றனர். ஆனால் வேதவாக்கியங்களை விசுவாசிப்பவர்கள், இத்தகைய உபதேசங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. புதிய பூமியில் பிள்ளைகள் பிறக்கும் என்கிற உபதேசம், ” அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனத்தின்” ஒரு பகுதி அல்ல...கச 213.1

    தேவன் தமது வார்த்தையின்மூலம் தெரியப்படுத்தாத காரியங்களில், நம் யூகங்களையும் கொள்கைகளையும் நுழைப்பது துணிகரம் ஆகும். நமது எதிர்கால நிலைமையைக்குறித்து, எந்த யூகங்களுக்கும் உள்ளாக நாம் நுழைய வேண்டிய அவசியம் இல்லை. — 1SM 172, 173 (1904).கச 213.2

    புதிய பூமியில் எப்படிப்பட்ட நிலையிருக்கும் என்பதைக்குறித்து யூகம் செய்வதில், தேவனுடைய ஊழியக்காரர்கள் நேரத்தைச் செலவழிக்கக் கூடாது. கர்த்தர் வெளிப்படுத்தியிராத காரியங்களைக்குறித்த யூகங்களிலும் முக்கியத்துவமற்ற கோட்பாடுகளிலும் ஈடுபடுவது துணிகரமான செயலாகும். எதிர்கால வாழ்க்கையில் நம்முடைய சந்தோஷத்திற்காக ஆண்டவர் எல்லாவித ஆயத்தத்தையும் செய்திருக்கின்றார். எனவே, அவர் நமக்காக செய்திருக்கிற திட்டங்களைக்குறித்து, நாம் யூகம் செய்யவேண்டியது அவசியமில்லை. அதோடு, இவ்வுலகத்திலிருக்கிற நம்முடைய வாழ்க்கையின் நிலைமையை வைத்து, எதிர்கால வாழ்க்கையின் நிலைமையை நாம் அளந்து பார்கக்கூடாது. — GW 314 (1904).கச 213.3