Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நேர்த்தியான, இனிமையான இசையில் தேவனைத் துதித்தல்

    தேவனுடைய தரிசனங்களில் தவிர, வேறு எங்கும், எவ்விதத்திலும், எந்த மானிட செவியும் கேட்டிராத, மனித சிந்தயிலும் தோன்றியிராத, அத்தனை சிறப்புமிகுந்த இசையும் பாடலும் அங்கு இருக்கும்...கச 219.4

    மீட்கப்பட்டவர்கள் பாடப்போகும் பாடல் — அவர்களது அனுபவப் பாடலாகும். அது, “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவாங்களின் ராஜாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவம் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமான வைகள். கர்த்தாவே யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்?” “தேவரீர் ஒருவரே பரிசுத்தர்” (வெளி. 15:3, 4) என்று தேவனுடைய மகிமையை அறிவிக்கின்ற பாடலாகும். — Ed 307-309 (1903).கச 219.5

    அந்த இசைக்குழுவை நடத்திச்செல்ல எப்பொழுதும் ஒரு தூதன் இருந்தான். அவன், அந்தச் சுரமண்டலத்தை முதலில் வாசித்து இசை மீட்ட, அனைவரும் இணைந்துகொள்ள, ஒரு தலைசிறந்த முழுமையான பரலோக இசை உருவாயிற்று, அதை வர்ணிக்கவே முடியாது. அது இனிமையானதாக, பரலோகத்தைச் சார்ந்ததாக, தெய்வீகமானதாக இருக்கின்றது. — 1T 146 (1857).கச 220.1

    எபிரேயர்களின் அல்லேலூயாக்கள், புறஜாதியினரின் ஒசன்னாகளுடன் ஒன்றுகலக்கும்போது, எல்லோருக்கும் ஆண்டவராகிய அவரை முடிசூட்டுங்கள் என்னும் ஒரு மகிழ்ச்சியின் ஆரவாரம், மீட்கப்பட்ட ஒரு பலத்த சேனையின் குரலாக உயர்ந்தெழும்பும்போது, துயரம் நிறைந்த ஒரு மனிதனாக இல்லாமல், மகிமை நிறந்த வெற்றி மிகுந்த ஒரு அரசராக (கிறிஸ்து) ஒலிவமலையின்மீது நிற்பார். — DA 830 (1898).கச 220.2