Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வாழ்க்கையின் குழப்பங்கள் விளக்கப்படும்

    வாழ்க்கை அனுபவத்தின் குழப்பங்கள் அனைத்தும் அப்போது தெளிவாக்கப்படும். குழப்பமாகவும், ஏமாற்றமாகவும், முறிந்துபோன நோக்கங்களாகவும், தடைசெய்யப்பட்ட திட்டங்களாகவும் மாத்திரம் காணப்பட்டவையெல்லாம், ஒரு உன்னதமான — அதிகரப்பூர்வமான — ஜெயமுள்ள நோக்கமாக — ஒரு தெய்வீக ஒத்திசைவுடன் காணப்படும். — Ed 305 (1903).கச 221.6

    அங்கே, தேவனுடைய சிங்காசனத்திலிருந்து பாய்கின்ற ஜீவநீருற்றண்டையில் இயேசு நம்மை நடத்திச் சென்று, இந்த பூமியில் நமது குணங்கள் பரிபூரணமடைவதற்காக, இருண்ட பாதைகளின் வழியாக அவர் நம்மை எப்படி நடத்திவந்தார் என்பதைக் குறித்து நமக்கு விவரிப்பார். - 8T 254 (1904).கச 221.7

    தேவனுடைய வழிநடத்துதல்களில் நம்மைக் குழப்பத்திற்குள்ளாக்கிய அனைத்தும், வரப்போகின்ற உலகத்திலே தெளிவாக்கப்படும். இப்போது புரிந்துகொள்ளக் கடினமாயிருக்கிற காரியங்கள், அப்போது தெளிவான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளும். கிருபையின் இரகசியங்கள் நமக்கு முன்பாகத் திறந்துவைக்கப்படும். எல்லைக்குட்பட்ட நமது மனங்களுக்குக் குழப்பமாகவும், காப்பாற்றப்படாத வாக்குறுதிகளுமாக மாத்திரமே தோன்றினவைகளெல்லாம், மிகவும் பரிபூரணமாகவும் நமது நன்மைக்கேதுவாக இசைந்து செயல்பட்டதாகவும் இருந்ததை நாம் காண்போம். மிகவும் சோதனைபோல் தோன்றின அனுபவங்களும், எல்லையற்ற அன்பே உருவான அவர் கட்டளையிட்டவைகள்தான் என்பதை நாம் அறிந்துகொள்வோம். சகலத்தையும் நம்முடைய நன்மைக்கேதுவாகவே நடப்பித்த அவருடைய மென்மையான அக்கறையை நாம் உணரும்போது, சொல்லிமுடியாத மகிழ்ச்சியாலும் மகிமையின் நிறைவாலும் நாம் களிகூருவோம். — 9T 286 (1909).கச 221.8