Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அதற்கப்பாலும் எல்லையற்ற ஒரு நித்தியம்

    நம்முடைய ஒவ்வொரு ஆற்றலும் வளர்ச்சியடையும், ஒவ்வொரு திறனும் விருத்தியடையும்; மிகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்: மிகவும் உன்னதமான விருப்பங்கள் நிறைவேற்றப்படும்; மிகவும் உயர்வான குறிக்கோள்கள் தெளிவாய் அறிந்துகொள்ளப்படும் என்றபோதும், இன்னும் வெல்லவேண்டிய புதிய நிலைகளும், வியந்து பாராட்டவேண்டிய புதிய அதிசயங்களும், புரிந்துகொள்ள வேண்டிய புதிய சத்தியங்களும் அங்கு எழும்பும், சரீரம், மனம் மற்றும் ஆத்துமாவினுடைய வல்லமைகளை, செயலில் ஈடுபடுத்தும்படியான புதிதான நோக்கங்கள் அங்கு எழும்பும். — Ed 307 (1903).கச 223.2

    தேவனுடைய ஞானத்தையும் அவரது வல்லமையையும் அறிந்து கொள்வதில் நாம் எவ்வளவு தூரம் முன்னேறிச் சென்றிருந்தாலும், அதற்கு அப்பாலுங்கூட எல்லையற்ற ஒரு நித்தியம் எப்பொமுதும் அங்கு இருக்கின்றது. — RHSep. 14, 1886. கச 223.3

    மானிட இதயங்கள் என்னும் வாய்க்கால்கள் மூலமாக, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்துவருகின்ற தகப்பனின் அனைத்து அன்பும், மானிட ஆத்துமாக்களில் திறக்கப்படுகின்ற அனைத்து மென்மையான ஊற்றுகளும், வற்றாத — எல்லையற்ற — பரந்து விரிந்துகிடக்கும் சமுத்திரம் போன்ற — தேவனின் அன்போடு ஒப்பிடும்பொழுது, வெறும் சிற்றோடையே. அந்த அன்பைக்குறித்து நாவினால் விவரிக்க முடியாது; எழுதுகோலால் அதை விளக்கமாக வர்ணிக்க இயலாது. உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் அந்த அன்பைக்குறித்து நீங்கள் தியானிக்கலாம்; அதைப் புரிந்துகொள்ளத்தக்கதாக தளரா ஊக்கத்துடன் வேத வாக்கியங்களை ஆராயந்து பார்க்கலாம்; பரலோகத் தகப்பனுடைய அன்பையும் மனதுருக்கத்தையும் புரிந்தகொள்ளும் முயற்சியிலே, தேவன் உங்களுக்கு அளித்திருக்கின்ற ஒவ்வொரு வல்லமையையும் திறமையையும் நீங்கள் செயலாற்றத் தூண்டலாம். எனினும், அதற்கு அப்பாலும் எல்லைமற்ற ஒரு நித்தியம் இருக்கின்றது. எனினும் தமது ஒரே குமாரனை இந்த உலகத்திற்காக மரிப்பதற்கென்று தத்தஞ்செய்த, அந்த தேவனுடைய அன்பின் நீளத்தையும், அகலத்தையும், ஆழத்தையும், உயர்த்தையும் ஒருபோதும் உங்களால் முமழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. நித்தியத்தாலுங்கூட அதை ஒருபோதும் முழுமையாக வெளிப்படுத்திக்காட்ட இயலாது. — 5T 740.கச 223.4