Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மீறுதல் ஏறக்குறைய அதன் எல்லையை எட்டிவிட்டது

    பூமியின் குடிகள் தங்களது அக்கிரமத்தின் பாத்திரத்தை நிரப்பும் வரைக்கும், இன்னும் ஒரு குறுகிய காலம் நீடித்திருக்கும். அதன் பின்பு, இத்தனை நீண்ட காலமாக உறங்கிக்கொண்டிருந்த தேவனுடைய கோபம் விழித்தெழும். இந்த ஒளியின் தேசம், கலப்பில்லாத அவரது கோபாக்கினையின் பாத்திரத்தைக் குடிக்கும். - 1T363 (1863).கச 28.5

    அக்கிரமத்தின் பாத்திரம் ஏறக்குறைய நிரம்பிவிட்டது. தேவனுடைய தண்டனையளிக்கும் நீதி குற்றமுள்ளவர்கள்மீது இறங்கிவர இருக்கின்றது. - 4T 489 (1880).கச 28.6

    உலகத்திலுள்ள குடிமக்களின் துன்மார்க்கம், அவர்களது அக்கிரமத்தின் அளவை ஏறக்குறைய நிரப்பிவிட்டது. அழிவுண்டாக்குகிறவன் தன் சித்தப்படி இப்பூமியின்மீது கிரியை செய்யத்தக்கதாக, தேவன் அவனை அனுமதித்துவிடுவார் என்ற நிலையை பூமி ஏறக்குறைய எட்டிவிட்டது. - 7T 141 (1902).கச 28.7

    மீறுதல் ஏறக்குறைய அதன் எல்லையை எட்டிவிட்டது. குழப்பமான சூழ்நிலை உலகத்தை நிரப்பியிருக்கின்றது. ஒரு மாபெரும் பயங்கரம் சீக்கிரமாக மனித இனத்தின்மீது வர இருக்கின்றது. முடிவு வெகு சமீபமாயிருக்கின்றது. உலகத்தின்மீது சீக்கிரத்தில் வரவிருக்கின்ற, மூழ்கடிக்ககூடிய எதிர்பாராத ஒரு அதிர்ச்சியான காரியத்திற்கு, சத்தியத்தை அறிந்தவர்களாகிய நாம் ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். - 8T 28 (1904).கச 28.8