Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    விரைவில் வரவிருக்கின்ற இக்கட்டான காலங்கள்

    முடிவுவரையிலும் அதிகரித்துக்கொண்டே இருக்கப்போகிற இக்கட்டுக் காலம் வெகு சமீபத்தில் இருக்கின்றது. இழப்பதற்கு நமக்கு நேரமில்லை. யுத்த ஆவியினால் உலகம் தூண்டிவிடப்பட்டிருக்கின்றது. தானியேல் பதினோராவது அதிகாரத்தின் தீர்க்கதரிசனங்கள், ஏறக்குறைய அவற்றின் கடைசி நிறைவேறுதலை அடைந்துவிட்டன. - RH Nov. 24, 1904.கச 6.3

    இக்கட்டுக்காலம் - யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் (தானி. 12:1) நமக்கு முன் இருக்கின்றது. நாமோ, நித்திரை செய்து கொண்டிருக்கின்ற கன்னிகைகளைப் போல இருக்கிறோம். நித்திரையினின்று விழித்து, கர்த்தராகிய இயேசு தமது நித்திய புயங்களின் கீழ் நம்மை வைத்துக்கொள்ளும்படியாகவும், நமக்கு முன்பாக இருக்கின்ற உபத்திரவ காலத்தின் ஊடாக நம்மை சுமந்து செல்லும்படியாகவும் அவரிடம் நாம் கேட்க வேண்டும். - 3MR 305(1906).கச 7.1

    உலகம் அதிகமதிகமாக அக்கிரமம் நிறைந்ததாக மாறிக் கொண்டிருக்கின்றது. விரைவில் மாபெரும் இக்கட்டு - இயேசு வரும்வரையில் நிறுத்தப்படாத இக்கட்டு நாடுகளுக்கிடையே எழும்பும். - RH Feb. 11, 1904.கச 7.2

    இக்கட்டுக் காலத்தின் விளிம்பினிலே நாம் இருக்கின்றோம், கனவிலும் நினைத்துப் பார்த்திராத குழப்பங்கள் நமக்கு முன்பாக இருக்கின்றன்.. - 9T 43(1909).கச 7.3

    யுகங்களின் நெருக்கடியான வாசற்படியின்மீதாக நாம் நின்று கொண்டிருக்கின்றோம். தேவனுடைய நியாயத்தீர்ப்புகளாகிய - நெருப்பு, வெள்ளம், பூமியதிர்ச்சி, யுத்தம் மற்றும் இரத்தஞ்சிந்துதல் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக அடுத்துத்து மிகவேகமாக பின்தொடர இருக்கின்றன. - PK 278 (C.1914).கச 7.4

    கொந்தளிப்பான (இக்கட்டுக்) காலங்கள் நாமக்கு முன்பாக, காத்திருக்கின்றன. ஆயினும் நாம் அவிசுவாசமான அல்லது அதைரியமான ஒரு வார்த்தையையாகிலும் பேசாதிருப்போமாக. - ChS 136 (1905).கச 7.5