Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    கிறிஸ்துவில் உறுதியாக வேரூன்றப்படல்

    புயல் வந்துகொண்டிருக்கின்றது; ஒவ்வொரு மனிதனுடைய விசுவாசமும் எப்படிப்பட்டது என்பதை சோதிக்கத்தக்கதான புயல் வந்துகொண்டிருக்கின்றது. Ev 361, 362 (1905).கச 46.1

    ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் வாழ்க்கையைக் குறித்து ஒரு மணிநேரம் தியானிப்பது நமக்கு நன்மையாக இருக்கும். பகுதி பகுதியாக எடுத்துக்கொள்ளவேண்டும்; நமது கற்பனை ஒவ்வொரு காட்சியையும், குறிப்பாக கடைசி நேரத்தின் காட்சிகளை தியானிக்கட்டும். DA 83 (1898).கச 46.2

    கிறிஸ்துவினுடைய நீதியின்மீதான விசுவாசத்தின் மூலம் கிறிஸ்து நம் இருதயத்தில் வாசம் செய்வதென்பதே, தீமைக்கு எதிராக உள்ள ஒரே பாதுகாப்பாகும். தேவனோடு உயிருள்ள தொடர்புக்குள் நாம் இல்லையென்றால், பாவச் சோதனைகளையும், சுயநேசம் மற்றும் சுயத்தைத் திருப்திப்படுத்தும் பரிசுத்தமற்ற விளைவுகளை ஒருபோதும் எதிர்க்க முடியாது. சில காலத்திற்கு சாத்தானோடுள்ள தொடர்பை விட்டு விலகியதால், நாம் அநேக கெட்ட பழக்கங்களை விட்டிருக்கலாம். ஆனால், ஒவ்வொரு கணப்பொழுதும் ஆண்டவருக்கு நம்மை முழுமையாக ஒப்புக்கொடுப்பதின் மூலம் தேவனோடு உயிருள்ள தொடர்பினை பெறாதவர்களாக இருந்தால், சாத்தானால் ஜெயிக்கப்படுவோம். கிறிஸ்துவுடன் நமக்கு ஒரு தனிப்பட்ட பழக்கமோ நீடித்த ஒரு தொடர்போ இல்லாவிட்டால், நமது எதிரிக்கு கீழ்ப்பட்டவர்களாக இருந்து, முடிவினில் அவனது உத்தரவை நிறைவேற்றுவோம். - DA 324 (1898).கச 46.3

    சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவே நமது தியானத்தின் முக்கியப் பொருளாகவும், நமது உரையாடலாகவும், மிகுந்த மகிழ்ச்சியான உணர்வாகவும் இருக்க வேண்டும். - SC 103, 104 (1892).கச 46.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents